Saturday, December 10, 2016


பெண்கள் தங்களுடைய மேணியில் எந்த அளவு மறைக்க வேண்டும் கை பாதம் முகம் இவைகளை கட்டாயமாக மறைக்க வேண்டுமா? என்பன பல சட்டங்களை ஆதாரத்துடன் பார்க்கயிருக்கிறோம். பெண்களுடைய ஆடைகளை பற்றி பேசக்கூடிய வசனங்கள் திருக்குர்ஆனிலும் ஹதீஸ்களிலும் நிறையவே காணப்படுகின்றன அதில் திருக்குர்ஆனின் 24 வது அத்தியாயம் 31 வது வசணமும் ஒன்று இந்த வசணத்தில் பெண்கள் முன்னால் இருக்கும் முழுமையாக மறைக்க வேண்டும் யார் முன்னால் இருக்கும் முழுமையாக மறைக்க வேண்டியதில்லை என்பதை கூறுகின்றன. தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும். தமது கணவர்கள், தமது தந்தையர், தமது கணவர்களுடைய தந்தையர், தமது புதல்வர்கள், தமது கணவர்களின் புதல்வர்கள், தமது சகோதரர்கள், தமது சகோதரர்களின் புதல்வர்கள், தமது சகோதரிகளின் புதல்வர்கள், பெண்கள், தங்களுக்குச் சொந்தமான அடிமைகள், ஆண்களில் (தள்ளாத வயதின் காரணமாக பெண்கள் மீது) நாட்டமில்லாத பணியாளர்கள், பெண்களின் மறைவிடங்களை அறிந்து கொள்ளாத குழந்தைகள் தவிர மற்றவர்களிடம் தமது அலங்காரத்தை அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம். அவர்கள் மறைத்திருக்கும் அலங்காரம் அறியப்பட வேண்டுமென்பதற்காக தமது கால்களால் அடித்து நடக்க வேண்டாம். நம்பிக்கை கொண்டோரே! அனைவரும் அல்லாஹ்வை நோக்கித் திரும்புங்கள்! இதனால் வெற்றியடைவீர்கள். அல்:குர்ஆன் (24: 31) நபியே! (முஹம்மதே!) உமது மனைவியருக்கும், உமது புதல்வியருக்கும், (ஏனைய) நம்பிக்கை கொண்ட பெண்களுக்கும் முக்காடுகளைத் தொங்க விடுமாறு கூறுவீராக! அவர்கள் (ஒழுக்கமுடைய பெண்கள் என்று) அறியப்படவும், தொல்லைப்படுத்தப்படாமல் இருக்கவும் இது ஏற்றது'' என்று கூறுவீராக! அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்.அல் குர்ஆன் (33 : 59) இந்த வசணங்கள் யார் முன்னால் அலங்காரத்தை மறைக்க வேண்டும் யார் முன்னால் மறைக்க வேண்டியதில்லை என்பதை தெளிவாக சொன்னாலும் இதில் விபரங்களை நாம் தெளிவு படுத்த வேண்டியதுள்ளது. இந்த வசனத்தில் தங்களுடைய அலங்காரத்தை வெளிப்படுத்த வேண்டாம் என்று இடம் பெற்றுள்ளது இதில் அலங்காரம் என்று வருகின்ற அரபி வாசகம் ஸீனத் என்பதாகும் இந்த ஸீனத் என்ற வார்த்தைக்கு சிலர் அழகு என விளங்கிக் கொண்டனர். அழகு வேறு, அலங்காரம் வேறு என்பதை இவர்கள் உணர்வதில்லை. இந்த வார்த்தைக்கு என்ன பொருள் என்பதை திருக்குர்ஆனில் இடம் பெற்ற இதே வார்த்தைக்கு என்ன பொருள் செய்யப்பட்டுள்ளது என்பதை கவனித்தால் இதை நாம் தெரிந்து கொள்ளலாம். ''எங்கள் இறைவா! ஃபிர்அவ்னுக்கும், அவனது சபையோருக்கும் இவ்வுலக வாழ்க்கையில் அலங்காரத்தையும், செல்வங்களையும் அளித்திருக்கிறாய்! எங்கள் இறைவா! உன் பாதையி­ருந்து அவர்களை வழி கெடுக்கவே (இது பயன் படுகிறது). எங்கள் இறைவா! அவர்களின் செல்வங்களை அழித்து, அவர்களின் உள்ளங்களையும் கடினமாக்குவாயாக! துன்புறுத்தும் வேதனையைக் காணாமல் அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்'' என்று மூஸா கூறினார். (அல் குர்ஆன் 10:88) இந்த வசனத்தில் இதே ஸீனத் என்ற வார்த்தை இடம் பெருகிறது இந்த வசணத்திறற்கு இந்த பொருளைத்தவிர வேறு பொருள் செய்ய முடியாது. இந்த வார்த்தைக்கு இவர்கள் கூறிவது போன்று அர்த்தம் வைத்து கொண்டால் என்ன பொருள் வரும் யா அல்லாஹ் இவ்வுலகில் இவர்களுக்கு அழகையும் செல்வங்களையும் கொடுத்திருக்கிறாய் என்ற பொருள் வரும் இதி­ருந்து அவர்கள் அனைவúம் வெள்ளையாகவே இருந்தனர் என்று சொல்ல வருகின்றனர். இதே போன்று திருக்குர்ஆனில் இடம் பெற்ற மற்றொரு வசணங்களையும் நாம் எடுத்துக்கொள்வோம்.''பண்டிகை நாளே உங்களுக்குரிய நேரம். முற்பக­ல் மக்கள் ஒன்று திரட்டப்படட்டும்'' என்று அவர் கூறினார். (அல் குர்ஆன் 20:50) இந்த ஆயத்திலும் ஸீனத் என்ற வார்த்தை இடம் பெற்றுள்ளது ஏனென்றால் பண்டிகை நாளில் தான் மக்கள் அலங்கரிப்பார்கள் அதனால் ஸீனத் என்ற வார்த்தை இடம் பெற்றுள்ளது இவர்கள் பொருள் கொள்வதைப்போல வைத்தால் என்னவாகும் இந்த நாளில் மட்டும் அவர்கள் அழகாக இருபபார்கள் என்ற அர்த்தம் வந்து விடும். தனது அலங்காரத்துடன் அவன் தனது சமுதாயத்திடம் சென்றான். ''காரூனுக்குக் கொடுக்கப்பட்டது போன்று நமக்கும் கொடுக்கப்பட்டிருக்கக் கூடாதா? அவன் பெரும் பாக்கியமுடையவனாக இருக்கிறான்'' என்று இவ்வுலக வாழ்க்கையை விரும்புவோர் கூறினர். (அல் குர்ஆன் 28:79) இந்த வசனத்திலும் ஸீனத் என்ற வாôத்தை இடம் பெற்றுள்ளது இதற்கு அலங்காரம் என்று தான் பொருள் இவர்கள் கூறுவதைப் போன்று அழகு என்ற பொருள் கொண்டால் காரூனும் தனது சமுதாயத்திடம் அழகுடன் சென்றான் என்ற அர்த்தம் வரும். இந்த வசணங்களிளெல்லாம் அலங்காரம் என்பது உடலை குறறிக்காது மாறாக அலங்காரத்தை குறிக்கும் என்பதை தெரிந்து கொள்ளலாம். அலங்காரம் என்பது இயற்கையாக ஒருவருக்கு அமைந்துள்ள அழகைக் குறிக்கும் சொல் அல்ல. மாறாக புற சாதனங்களால் ஏற்படுத்தப்படுகின்ற அழகே அலங்காரம் எனப்படும். உதட்டுச் சாயம் பூசுவது, நகை களால் ஜோடனை செய்வது, மேக்கப் பொருட்களைப் பயன்படுத்துவது, ஆடைகளால் அழகை அதிகரிப்பது, இவை ஜீனத் என்ற சொல்­ல் அடங்கும். எனவே இவ்வசனத்தில் கூறப்படுகின்றவர்களைத் தவிர மற்றவர்களுக்கு முன் இது போன்ற உபரியான சாதனங்களால் அலங்காரம் செய்த நிலையில் பெண்கள் காட்சி தரக் கூடாது என்று விளங்க வேண்டும். இரண்டாவதாக இந்த வசணத்தில் இடம் பெரும் கிமார் என்ற வார்த்தைக்கு சிலர் முகத்தை மூடும் ஆடை என்று விளங்கி கொள்கின்றனர் கிமார் என்ற வார்த்தைக்கு பல பொருள்கள் இருந்தாலும் நபி ஸல் அவர்கள் பொண் மொழிகளை கவனித்தால் அல்லாஹ் இந்த அத்தியாயத்தில் எதைக்குறிப்பிடுகிறான் என்பது தெளிவாகி விடும்.முத­ல் முகத்தை மறைக்க வேண்டும் என்று சொல்லக்கூடியவர்களின் ஆதாரங்களை பாôத்து விட்டு முகத்தை மறைக்க வேண்டிய கட்டாயமில்லை விரும்பினால் அணிந்து கொள்ளலாம் என்று வரக்கூடிய ஹதீஸ்களை பார்க்கலாம். நாங்கள் நபி (ஸல்) அவர்களோடு இஹ்ராம் அணிந்தவர்களாக (ஹஜ்ஜுக்காக புறப்படுவோம்) வாகணத்தில் செல்பவர்கள் எங்களை கடந்து செல்வார்கள் அவர்கள் எங்களை நேரிட்டால் நாங்கள் எங்களுடைய மேலங்கியை தலையி­ருந்து முகத்தின் மீது போட்டுக்கொள்வோம் எங்களை அவர்களை கடந்து சென்று விட்டால் நாங்கள் (முகங்களை) திறந்து விடுவோம் என்று ஆயிஷா (ர­) அவர்கள் கூறுகிறார்கள்.நூல்: அபூதாவூத் (1562) முத­ல் இந்த செய்தி ஆதாரப்பூர்வமானது இல்லை ஏனென்றால் இந்த செய்தியின் அறிவிப்பாளர்களில் ஒருவரான யஸீத் பின் அபீ ஸியாத் என்பவர் இடம் பெறற்றுள்ளார் இவரை அறிஞர்கள் விமர்சித்துள்ளனர். இமாம் அஹ்மத் அவர்கள் இவருடைய ஹதீஸ் தகுதியானதாக இல்லை என்றும் இப்னு மயீன் அவர்கள் இவர் பலமானவர் இல்லை என்றும் மறற்றொரு நேரத்தில் பலவீனமானவர் என்றும் அபூ ஸர்ஆ அவர்கள் இவர் பலவீமானவர் இவருடைய ஹதீஸ்களை எழுதிக்கொள்ளலாம் ஆனால் ஆதாரம் பிடிக்க கூடாது என்றும் இமாம் அபூஹாதம் அவர்கள் இவர் உறுதியறற்றவர் என்றும் இப்னு ஹிப்பான் அவர்கள் இவர் நேர்மையாளர்தான் என்றாலும் இவருடைய வயது அதிகமான போது இவருடைய மணண சக்தி மோசமாகி விட்டது. (இந்த நிலையில்) இவர் தனது மணணத்தி­ருந்து சொல்ல ஆர்பித்தார் என்றும் இதனால் நிராகரிக்கப்பட வேண்டிய செய்திகள் வர ஆரம்பித்து விட்டன என்றும் யஃகூப் பின் சுப்யான் அவர்கள் இவர் சரியான அறிவிப்பாளராக இருந்தாலும் இவரை அறிஞர்கள் இவர் மூளை குழம்பிய காரணத்தினால் விமர்சனம் செய்துள்ளனர் என்றும் இவர் முஜாஹிதிடமிருந்து செய்திகளை அறிவிக்கிறார் ஆனால் இவருடைய அவரிடமிருந்து கேட்டதில் ஆட்சேபனை இருக்கிறது என்றும் இமாம் நஸயீ அவர்கள் பலவீனமானவர் என்றும் இமாம் தாரகுத்னி அவர்கள் ஆதாரப்பூர்வமான கிதாபுகளில் இவருடைய பலவீனமான செசய்திகளை பதிவு செய்யக்கூடாது இவர் அதிகமாக தவறிழைப்பவர் இவர் தனக்கு சொல்லப்பட்டதை அப்படியே கூறுவார் என்றும் விமர்சனம் செய்துள்ளனர்.நூல்: தஹ்தீப் தஹ்தீப் (பாகம் 11 பக்கம் 288) எனவே இந்த செய்தியை ஆதாரமாக ஏறற்றுக்கொள்ள முடியாது. இது போன்ற மறற்றொரு செய்தியும் இப்னு குஸைமாவில் இடம் பெறற்றுள்ளது நாங்கள் ஆண்களுக்காக முகங்களை மூடிக்கொள்வோம் இன்னும் அதற்கு முன்னால் தலைவாரிக்கொள்வோம் என்று அஸ்மா பின்த் அபீ பக்கர் (ர­) அவர்கள் கூறுகிறார்கள்.நூல்: இப்னு குஸைமா (பாகம் 4 பக்கம் 203) இந்த ஆதாரப்பூர்வமானது என்றாலும் இந்த செய்தியை மட்டும் வைத்து முடிவுக்கு வரக்கூடாது ஏனென்றால் இதற்கு மாற்றமான செய்திகளும் இருக்கின்றன. (ஆயிஷா (ர­) அவர்கள் அவதூறு சம்மந்தப்பட்ட விஷயத்தில) ஆயிஷா (ர­) அவர்கள் கூறுகிறார்கள் நான் தங்கியிருந்த அந்த இடத்திறற்கு (ஸப்வான் பின் முஅத்தல்) வந்தார் அவர் அங்கே தூங்கி கொண்டிருந்த ஒர் உருவத்தை பார்த்தார் பர்தாவுடைய சட்டம் அருளப்படுவதறற்கு முன்னர் அவர் என்னை பார்த்திருந்தார் ஆகவே என்னை பார்த்ததும் அவர் என்னை அடையாளம் புரிந்து கொண்டார் அவர் என்னை அறிந்து கொண்டு இன்னா ­ல்லாஹி வ இன்னா இலைஹி ராஜீவூன் என்று சப்தத்தை கேட்டு நான் கண் விழித்தேன் உடனே என் முகத்திரையால் என் முகத்தை மறைத்துக் கொண்டேன். (ஹதீஸின் சுருக்கம்)நூல்: புகாரி (4141) இதே கருத்தில் அமைந்திருக்கின்ற மற்றொரு செய்தியும் இருக்கின்றது. இப்னு உமர் (ர­) கூறியதாவது அல்லாஹ்வின் தூதரே இஹ்ராம் அணிந்திருக்கும் போது எந்த ஆடைகளை நாங்கள் அணியலாம் என்று நீங்கள் கட்டளையிடுகின்றீர்கள் ? என்று ஒரு மணிதர் எழுந்து கேட்டார் அதற்கு நபி (ஸல்) அவர்கள் நீங்கள் சட்டைகளையும் கால் சட்டைகளையும் தலைப்பாகையும் தொப்பிகளையும் அணியாயதீர்கள் ஒருவரிடம் செருப்புகள் இல்லை என்றால் அவர் காலுறைகளை கரண்டைக்கி கீழ் உள்ள பகுதி வரை கத்தரித்துக்கொள்ளட்டும் குங்குமப் பூச்சாயம் வர்ஸ் எனும் செடியின் சாயம் தோய்ந்த எதைனையும் அணியாதீர்கள் இஹ்ராம் அணிந்த பெண் முகத்திரையும் அவள் கையுரைகளையும் அணியகக்கூடாது என்று பதிலளித்தார்கள்.நூல்:புகாரி (1838) மேலே குறிப்பிட்ட செய்திகள் அனைத்தும் பெண்கள் ஆண்கள் முன்னிலையில் மறைக்க வேண்டும் என்று காட்டுகின்றன ஆனால் இந்த ஹதீஸின் கருத்துக்கு மாற்றமான கருத்தை தரக்கூடிய செய்திகளும் இருக்கின்றன அந்த செய்திகளை இப்போது பார்ப்போம். பழ்ல் இப்னு அப்பாஸ் (ர­) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு பின்னால் இருந்தார் அப்போது கஸ்அம் குலத்தை சார்ந்த ஒரு பெண்மணி வந்தார் பழ்ல் அவர்கள் அவளையே பார்த்தார் அவளும் அவரை பார்த்தார் நபி ஸல் அவர்கள் பழ்ல் உடைய முகத்தை வேறொரு திசையின் பக்கம் திருப்பினார்கள் அப்போது அப்பேண்மனி நபி (ஸல்) அவர்களை நோக்கி அல்லாஹ்வின் தூதரே நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்கள் மீது ஹஜ்ஜை கடைமையாக்கிருக்கின்றான் ஆனால் எனது வயது முதிர்ந்த தந்தையால் பயணிக்க முடியாது எனவே அவருக்கு பகரமாக ஹஜ் செய்யலாமா எனக்கேட்டார்கள் நபி (ஸல்) அவர்கள் ஆம் என்றார்கள் இது இறுதி ஹஜ்ஜிலங் நடந்தது.நூல்: புகாரி (1513) புகாரி (6228) யின் மற்றொரு ஹதீஸில் முகம் வென்மையான பெண் வந்தாள் என்றும் அவருக்கு அவளுடைய அழகு கவர்ந்தது என்றும் வந்துள்ளது. இதே புகாரி 811 இழக்கம்மிட்ட செய்தியில் அவள் இளைஞியாக இருந்தாள் என்று வந்துள்ளது. மேலே குறிப்பிட்ட செய்தியில் வந்த பெண்மணி முஸ்­ம் என்று வந்திருக்கிறது ஏனென்றால் அந்த பெண்மணி ஹஜ்ஜைப்பற்றி கேட்டிருக்கிறார் இரண்டாவதாக நபி (ஸல்) அவர்ளின் கடைசி காலத்தில் நடந்துள்ளது என்றும் தெரிகிறது. இந்த ஹதீஸின் விளக்கவுரையில் ஹாபிழ் இப்னு ஹஜர் குறிப்பிடும் போது... இதில் முஃமினான பெண்கள் அனைவரும் மீதும் நபி (ஸல்) அவர்களின் மனைவிகள் மீது அவசியம் இல்லை என்பதை காட்டுகிறது அப்படி அவசியம் இருந்தால் அப்பெண்னை (முகத்திரையால்) மூடும் படி ஏவியிருப்பார்கள் பழ்ல் அவர்களுடைய முகத்தை திருப்பயிருக்கவும் மாட்டார்கள் இன்னும் இதில் பெண்களுடைய முகத்தை மறைக்க வேண்டும் என்பது. கட்டாயமில்லை இந்த செய்தியில் அவர்களிடத்தில் தொழுகையில் பெண்கள் முகத்தை மறைக்க வேண்டியது கடமையில்லை என்றும் இஜ்மா ஏற்பட்டு இருக்கிறது என்று ஹாபிழ் இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் எழுதுகிறார்கள். இதே கருத்தில் அமைந்திருக்கின்ற மற்றொரு செய்திகளையும் பார்ப்போம். அப்துர் ரஹஙமான் பின் ஆபிஸ் அவர்கள் கூறியதாவது நான் இப்னு அப்பாஸ் (ர­) அவர்களிடம் நீங்கள் நபி (ஸல்) அவர்களுடன் பெருநாள் தொழகையில் கலந்ததுண்டா என்று கேட்டேன் அதற்கவர்கள் ஆம் நெருக்கமான உறவு இல்லாவிட்டால் நான் சிறுவனாக இருந்த நிலையில் அதில் கலந்து கொண்டிருக்க முடியாது என்று கூறிவிட்டு நபி (ஸல்) அவர்கள் கஸீர் பின் ஸல்த் (ர­) என்பவரின் இல்லத்தினருகில் இருந்த அடையாளனத்திருகில் வந்தார்கள் பிறகு தொழுதுவிட்டு உரை நிகழ்த்தினார்கள் பிறகு பெண்களிடம் வந்தார்கள் அவர்களுடன் பிலால் (ர­) அவர்கள் இருந்தார்கள் பெண்களுக்குப் போதனை செய்து தர்மம் செய்யும்மாறு வ­யுறுத்தினார்கள் அப்பெண்கள் குணிந்து தம் கைகளால் பிலாலுடைய துணியில் பொருட்களைப் போட்டதை நான் பார்த்தேன் பிறகு நபி (ஸல்) அவர்கள் பிலாலுடன் தமது இல்லத்திற்கு புறப்பட்டார்கள் என்றாôகள்.நூல்: புகாரி (977) இந்த செய்தியில் பெண்கள் தங்கள் கைகளால் ஆற்ôரணங்களை கழற்றி போட்டுள்ளார்கள் இந்த செய்தி பெண்கள் தங்களுடைய கைகளையும் மறைக்க வேண்டும் என்று கூறுவோறுக்கு மறுப்பாக அமைந்திருக்கிறது ஷைக் பெண்கள் தங்களுடைய கைகளை மறைக்க வேண்டும் அதுவும் மறைக்கப்பட வேண்டிய உறுப்புகளில் அடங்கும் என்று கூறுவோர் தெளிவான ஆதாரத்தை முன்வைக்க வில்லை இன்னும் சொல்லப்போனால் பொதுவாக எது மக்களிடம் வழக்கத்தில் இருக்கிறதோ அதை ஒரு செய்தியாக அறிவிப்பதில்லை உதாரணமாக காலை உணவு எல்லோறும் சாப்பிடுவார்கள் என்று வைத்துக்கொள்வோம் இதை யாரும் ஒரு செய்தியாக நாங்கள் அனைவரும் காலை உணவு சாப்பிட்டோம் என்றும் சொல்ல மாட்டார்கள் இதே போல்தான் பெண்கள் ஆண்கள் அனைவúம் கைகளை திறந்திருப்பார்கள் இது வழமையானது இதை யாரும் பெண்கள் தங்களது கைகளை திறந்திருந்தார்கள் என்று அறிவிக்க மாட்டார்கள். இதனால்தான் ஹதீஸ்களில் தெளிவாக பெண்கள் கைகளை திறந்திருந்தார்கள் என்று நாம் பார்த்த வரை வர இல்லை பெண்கள் கைகளை மறைத்துதான் இருக்க வேண்டும் என்று சொல்லக்கூடியவர்கள்தான் அதற்கான ஆதாரத்தை சமர்பிக்க வேண்டும். மற்றொரு ஆதாரத்தையும் பார்ப்போம். ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ர­) அவர்கள் கூறியதாவது நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் பெருநாள் தொழுகையில் கலந்து கொண்டேன் அப்போது அவர்கள் உரை நிகழ்த்துவதற்கு முன்பே தொழகை நடத்தினார்கள் பாங்கோ இகாமத்தோ இல்லை பிறகு பிலால் (ர­) அவர்கள் மீது சாய்ந்து கொண்டு இறையச்சத்தை கடைபிடிக்கும் மாறும் இறைவனுக்கும் மாறும் வ­யுறுத்தி மக்களுக்கு அறிவுரையும் நினைவூட்டலும் வலங்கினார்கள் பிறகு அங்கிருந்து புறப்பட்டு பெண்கள் பகுதிக்கு சென்று அவர்களுக்கும் நினைவூட்டி அறிவுரை பகர்ந்தார்கள் மேலும் பெண்களை நோக்கி தர்மம் செய்யுங்கள் நீங்கள் அதிகம் பேர் நரகத்தின் விறகு ஆவிர்கள் என்று கூறினார்கள் அப்போது பெண்கள் நடுவி­ருந்து கன்னங்கள் கருத்த ஒரு பெண்மனி எழுந்து ஏன் அல்லாஹ்வின் தூதரே என்று கேட்டார்கள் அதறட்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நீங்கள் அதிகமாக குறை கூறுகின்றீர்கள் நன்றி மறந்து கணவனை நிராகரிக்கின்றீர்கள் என்று கூறினார்கள் அப்போது அப்பெண்கள் தம் காதனிகள் மோதிரங்கள் உள்ளிட்ட அணிகலன்கனை பிலால் (ர­) அவர்களின் ஆடையில் போட்ôர்கள் நூல்: முஸ்­ம் (1612) இந்த செய்தியில் கண்ணங்கள் கருத்த பெண்மணி எழுந்து கேட்டார் என்று வந்துள்ளது முகத்தை அண்றைய பெண்கள் மறைத்தார்கள் என்று சொன்னார்கள் அந்த பெண்மணி கருத்த கண்ணங்களை கொண்டிருந்தார்கள் என்று பிலால் (ர­) அவர்களுக்கு தெரியும். பெண்கள் முகத்தை முழுவதுமாக திறந்திருந்தால்தான் கண்ணங்கள் தெரிய வாய்பு உள்ளது ஆயிஷா (ர­) கூறியதாவது முஃமினான பெண்கள் தங்களின் ஆடைகளால் போôத்திக்கொண்டு நபி (ஸல்) அவர்களுடன் பஜ்ரு தொழுகையில் கலந்து கொள்பவர்களாக இருந்தார்கள் தொழுகை முடிந்ததும் தங்களின் இல்லங்களுக்கு திரும்புல்வார்கள் இருட்டின் காரணமாக அவர்களை ஒருவரும் அறிந்து கொள்ள முடியாது.நூல்: புகாரி (578) இந்த செய்தியில் இருட்டாக இருந்த காரணத்தினால்தான் பெண்களை அடையாளம் காணமுடியாது என்று கூறுகிறார்கள் இருட்டாக இல்லை என்றால் அவர்களை அடையாளம் காணமுடியம் என்று தெரிகிறது. ஜரீர் பின் அப்தில்லாஹ் (ர­) அவர்கள் கூறுகிறார்கள் நான் நபி (ஸல்) அவர்களிடம் திடீரென (பெண்களைப்) பார்ப்தை பற்றி கேட்டேன் அதற்கு நபியவர்கள் என்னுடைய பார்வையை திருப்பும் படி ஏவினார்கள் என்று கூறுகிறார்கள்.நூல்: முஸ்­ம் (4018) பெண்கள் தங்களுடைய முகத்தை மூட வேண்டும் என்று இருந்தால் நபி (ஸல்) அவர்களிடத்தில் இந்தக்கேள்வியை கேட்டிருக்கவும் மாட்டார்கள் நபி (ஸல்) அவர்கள் பார்வையை திருப்பும் படியும் ஏவியிருக்கவும் மாட்டார்கள் முகத்தை திறந்திருந்த காரணத்தினால்தான் இந்த கேள்வி எழ முடியும். அதா பின் அபீ ரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது இப்னு அப்பாஸ் (ர­) என்னிடம் சொர்க்கவாசியான ஒரு பெண்மணியை காட்டட்டுமா என்று கேட்டார்கள் நான் ஆம் ( காட்டுங்கள்) என்று சொன்னேன் அதற்கு அவர்கள் இந்த கருப்பு நிற பெண்மணிதாம் அவர் இவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து நான் வ­ப்பு நோயால் அவதிப்படுகிறேன் அப்போது என் உட­ருந்து ஆடை வெளிப்பட்டு விடுகிறது ஆகவே எனக்காக அல்லாஹ்விடம் பிரார்தனை செய்யுங்கள் என்றார் நபி (ஸல்) அவர்கள். நீ நினைத்தால் பொருமையாக இருந்து கொள்ளலாம் இதற்கு பதிலாக உனக்கு சொர்க்கம் கிடைக்கும் நீ விரும்பினால் உனக்கு குணம் கிடைக்கும் படி பிரார்த்திக்கிறேன் என்று சொன்னார்கள் இந்தப்பெண்மணி நான் பொருமையாகவே இருந்து விடுகிறேன் ஆனால் உடல் திறந்து விடுகிறது அப்படி திறந்து கொள்ளாலமல் இருக்க அல்லாஹ்விடம் பிரரார்த்தியுங்கள் என்று சொன்னார்கள் அவ்வாறே நபி (ஸல்) அவர்கள் இப்பெண்னுக்கு பிரார்த்தனை செய்தார்கள்.நூல்: புகாரி (5652) இந்த செய்தியை நன்கு கவனித்தால் நமக்கு ஒர் உண்மை புலப்படும் நபி (ஸல்) அவர்கள் காலத்திற்கு பின்பும் நபித்தோழியர்கள் முகத்தை முடாமல் சென்றுள்ளார்கள் இப்படி சென்றிருந்தால்தான் இப்னு அப்பாஸ் (ர­) அவர்கள் தாபிஈ ஆன அதா அவர்களை கூப்பிட்டு அடையாளம் காட்டிருக்கிறார்கள் முகத்தை மூடியிருந்தால் துள்ளியமாக இவர்கள் தான் சொர்க்கத்தைக்கொண்டு நற்செய்தி சொல்லப்பட்ட பெண் என்று சொல்ல முடியுமா? பாத்திமா பினத் கைஸ் (ர­) கூறியதாவது என் கணவர் ஆபூ அம்ர் பின் ஹப்ஸ் (ர­) அவர்கள் என்னை மூன்றாவது தலாக் சொல்­ விட்டார் அப்போது அவர் வெளியூரி­ருந்தார் பின்னர் அவருடைய பிரிதிநிதி தொ­ நீக்கப்படாத சிறிதளவு போதுமையை எனக்கு அனுப்பி வைத்தார் அதைக் கொண்டு நான் எரிச்சலைடைந்தேன் அதற்கு அந்த பிரிதிநிதி அல்லாஹ்வின் மீது ஆனையாக நாங்கள் உனக்கு ஜீவனாம்ஸம் தங்கும் இடம் எதையும் தரவேண்டியதில்லை (இது உதவியாக தரபட்டதுதான்) என்று கூறினார் எனவே நான். அ;லலாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து நடந்தததை அவர்களிடம் தெரிவித்தேன் அப்போது அல்லாஹ்வின் தூதர் அவர்களும் அவர் உனக்கு அவர் ஜிவனாம்ஸம் தங்கும் இடம் எதையும் தரை வேண்டியதில்லை என்று கூறிவிட்டு உம்மு ஷரீக் என்ற பெண்னின் இல்லத்தில் என்னை இத்தா இருக்குமாறு என்னை பணித்தார்கள் பிறகு அவர் எனது தோழர்கள் அடிக்கடி சந்திக்கும் பெண்மணி ஆவார் நீ உன் தந்தையின் சகோதரர் புதல்வர் இப்னு உம்மி மக்தூம் அவர்களிடம் அவர்களது இல்லத்தில் இத்தா இருந்து கொள் ஏனெனில் அவர் கண் பர்வையற்ற மனிதர் ஆவார் நீ உன் (துப்பட்டா) துணியை கழற்றி கொள்ளலாம் நீ இத்தாவை முழுமையாக்கியதும் எனக்கு தெரிவிப்பாயாக என்று கூறினார்கள். அவ்வாறே நான் இத்தாவை முழுமையாக்கியதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்டளிடம் வந்து முஆவியா பின் அபீ சுப்யான் (ர­) அவர்களும் அபூ ஜஹ்ம் பின் ஹீதைபா (ர­) அவர்களும் என்னை பெண் கேட்கின்றனர் என்று சொன்னேன் அதற்கு அ;ல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அபூஜஹம் தனது கைத்தடியை தோளி­ருந்து கீழே வைக்க மாட்டார் கோபக்காரர்) மனைவியை கடுமையாக அடித்து விடுபவர் முஆவியா அவர் ஒர் ஏழை அவரிடம் எந்த செல்வமும் இல்லை நீ உசாமா பின் ஸைதை மணந்து கொள் என்று கூறினார்கள் நான் உசாமாவை விரும்ப வில்லை பிறகு ஸல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நீ உசாமா வை மணந்து கொள் என்று (மீண்டும்) சொன்னார்கனள் ஆகவே நான் அவரை மணந்து கொண்டேன் அல்லாஹ் நன்மையை வைத்திருந்தான் நான் பெருமிதம் அடைந்தேன். நூல் : முஸ்­ம் (2953) இந்த செய்தியிலும் நாம் கருத்துக்கு வழுவூட்டும் பல கருத்துக்கள் இருக்கின்றன பெண்கள் முகத்தை மூட வேண்டும் என்று சொன்னால் ஏன் பாத்திமா அவர்களை கண்பார்வையற்ற ஸஹாபியிடம் இத்தா இருக்க சொல்ல வேண்டும்? மாறாக ஸஹாபிகள் அவர்களை பார்க்க நேரிடும் என்ற காரணத்தினால்தான் இந்த கட்டளையை இட்டார்கள். உபைதில்லாஹ் பின் அப்தில்லாஹ் அவர்கள் கூறியாதாவது என் தந்தை அப்தில்லாஹ் பின் உத்பா (ர­) அவர்கள் உமர் பின் அப்தில்லாஹ் அவர்களுக்கு கடிதம் எழுதினார்கள் அதில் சுபை பின்த் ஹாரிஸ் (ர­) அவர்களிடம் சென்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சுபைஆ மார்க்க தீர்ப்பு கேட்டது பற்றியும் அதற்கு அளித்த பதில் பற்றியும் கேட்டு எழுதுமாறு பணித்திருந்தார்கள் அதன் படி சுபைஆ (ர­) அவர்களில்டம சென்று உமர் பின் அப்தில்லாஹ் அவர்கள் கேட்டரிந்து பின் தனது தந்தைக்கு பதில் இவ்வாறு எழுதினார்கள் சுபைஆ (ர­) பனு ஆமிர் பின் லுஅய் குலத்தை சார்ந்த சஅத் பின் கவ்லா (ர­) அவர்களுக்கு வாழ்க்கை பட்டிருந்தார் சஅத் (ர­) அவர்கள் பத்ரு போரில் கலந்து கொண்ட ஸஹாபியாவார் விடைபெரும் ஹஜ்ஜின் போது ஸஅத் (ர­) அவர்கள் இறந்து விட்டார் அப்போது சுபைஆ (ர­) கற்பம் முற்றிருந்தார் ஸஅத் (ர­) அவர்கள் இறந்து நீண்ட காலம் ஆகியிருக்க வில்லை அதற்குள் சுபைஆ (ர­) அவர்கள் பிரசித்து விட்டார் உதிரப்போக்கி­ருந்து சுபைஆ (ர­) சுத்தமான போது பெண் பேச வருபவர்களுகங்காக தண்னை அலங்கரித்து கொண்டார் அப்போது பனு அப்துத்தார் குலத்தை சார்ந்த அபூ ஸனாபில் (ர­) அவர்கள் சுபைஆ (ர­) அவர்களிடம் திருமணம் புரியம் ஆசையில் திருமணம் புரிபவர்களுக்ôக உங்களை அலங்கரிப்பவர்களாக காண்கிறேன் அல்லாஹ்வின் மீது ஆனையாக நான்கு மாதம் பத்து நாள் முடியும் வரை நீங்கள் மறுமணம் புரிந்து கொள்ள முடியாது என்று கூறினார்கள் சுபைஆ (ர­) அவர்கள் கூறுகிறார்கள் அபூ ஸனாபில் கூறியதை நான் எடுத்துக்கொண்டு நான் மாலை நேரத்தில் எனது உடையை உடுத்திக் கொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடத்தில் இது பற்றி கேட்டேன் அதற்கு அவர்கள் நீ பிரசவித்து விட்ட போதே (மணம் புரிந்து கொள்ள அனுமதிக்கபட்ட வளாக ஆகிவிட்டாய் ) நீ விரும்பினால் மணம் செய்து கொள் என்று நபி (ஸல்) அவர்கள் மார்க்க தீர்ப்பு வங்கினார்கள்.நூல்: புகாரி (3991) இந்த செய்தியில் சுபைஆ (ர­) அவர்கள் அலங்கரித்து கொண்டதினால்தான் சுபைஆ (ர­) அவர்களிடம் அபூ ஸனாபில் கேட்டார் பெண்கள் முகத்தை மறைக்க வேண்டும் என்று இருந்தால் அலங்காரம் செய்திருப்பதை எப்படி பார்த்தார்? இதையெல்லாம் வைத்து பார்க்கும் போது பெண்கள் முகத்தை மறைக்க வேண்டிய கட்டாயமில்லை. இன்னும் சொல்லப்பபோனால் இன்றைய காலகட்டத்தில் இதை அணியாமல் இருப்பது மிகவும் அவசியமானதாகும் ஏனென்று சொன்னால் சமூக விரோதிகள் இதை பயன்படுத்திக்கொண்டு பல தீமைகளில் ஈடுபடுவார்கள் சென்ற வார உணர்வு (ஜீன் 22) இதழில் இடம் பெற்ற ஒரு செய்தியை பார்த்திருப்பீர்கள் ஒரு கல்லூரி மாணவன் தனது சக மாணணவர்களிடம் நான் ஒரு நாள் முழுவதும் பெண் வேடத்தில் இருக்கப் போகிறேன் முடிந்தால் என்னை அடையாளம் கண்டு கொள்ளுங்கள் என்று சொல்­ முஸ்­ம் பெண்கள் அணியக்கூடிய பர்தாவை அணிந்து கொண்டு பெண்கள் இருக்கும் இடத்திற்கும் பெண்கள் போகும் இடத்திற்கெல்லாம் இவனும் சென்றுள்ளான் இறுதியில் போ­ஸிடம் இவன் மாட்டவே விபரம் வெளிவந்தது. பாருங்கள் இஸ்லாம் வ­யுறுத்தாத காரியத்தை பெண்கள் அணிய இன்று அது ஒரு கே­ப் பொருளாக ஆகிவிட்டது இன்று சினிமா காட்சிகளிலும் இந்த ஆடையை அணிந்து கொண்டு இஸ்லாத்தை கொச்சைப்படுத்துகிறார்கள் இதை பெண்கள் உணர்ந்து இந்த முகத்திரையை விட்டால்தான் இந்த மாதிரி குற்றங்களில் ஈடுபடுவோறை தடுக்க முடியும் சினிமாக்களில் கொச்சையாக சித்தரிப்பதையும் நிறுத்த முடியும். இன்னும் சொல்லப்போனால் எவன் எந்தப் பெண்னை அழைத்துக்கொண்டு செல்ல வேண்டும் என்றாலும் அழைத்துச்சென்று விடலாம் இந்த மாதிரி நடப்பதற்கும் வாய்புகள் இருக்கிறது கருப்பொழுக்கம் உள்ள பெண்களுக்கும் மிகவும் நன்மை பயக்கூடியதாக இருக்கிறது. பெண்கள் பாதங்களை மறைக்க வேண்டுமா? முகத்தை மறைக்க வேண்டும் என்று எபப்படி சொன்னார்களோ அதைப்போன்று பாதங்களை மறைக்க வேண்டும் என்றும் சொல்கின்றனர் இதற்கு அவர்கள் ஒரு ஹதீஸை தவறாக புரிந்த காரணத்தினால்தான் அந்த ஹதீஸை பார்ப்போம். நபி (ஸல்) அவர்கள் யார் தனது ஆடையை பெருமைக்காக இழுத்துச் செல்கிறாரோ அவரை கியாம நாளில் அல்லாஹ் பார்க்கமாட்டான் அப்போது உம்மு ஸல்மா (ர­) அவர்கள் பெண்கள் தங்களுடைய ஆடையின் ஓரங்களை என்ன செய்ய வேண்டும் என்று கேட்டார்கள் அதற்கவர்கள் ஒரு ஜான் இறக்கி கொள்ளட்டும் என்றார்கள் உம்மு ஸல்மா அவர்கள் யாரசூலுல்லாஹ் பாதங்கள் தெரியுமே என்றார்கள் அதற்கவர்கள் ஒரு முழம் இறக்கி கொள்ளட்டும் அதை விட அதிகப்படுத்த வேண்டாம் என்றார்கள். நூல்: திர்மிதி (1653) நபி (ஸல்) அவர்கள் ஒரு ஜான் பெண்கள் முட்டுகா­ருந்து இறக்கி கொள்ளட்டும் என்று சொன்னவுடன் உம்மு ஸல்மா அவர்கள் பாதங்கள் தெரியுமே என்கிறார்கள் அதற்காகத்தான் ஒரு முழம் இறக்கி கொள்ளட்டும் என்று நபியவர்கள் கூறுகிறார்கள் இவர்கள் என்ன விளங்கி கொண்டனர் என்றால் கெண்டைகா­ல் பாதியி­ருந்து தான் ஒரு முழம் இறக்கச் சொன்னார்கள் என்று விளங்கி கொண்டனர் நபி (ஸல்) அவர்கள் சொன்னது கெண்டைக்கா­ல் பாதி­ருந்து இல்லை முட்டி­ருந்து ஒரு முழம் இறக்கச்சொன்னார்கள் இவர்கள் விளங்கி கொண்டது போல் கெண்டைக்கா­ருந்து ஒரு முழத்தை பெண்கள் இறக்கினால் என்னவாகும் பாதத்தி­ந்து ஆடை ஒரு ஜான் கீழே இறங்கியிருக்கும் இந்த மாதிரி பெண்கள் ஆடையை இழுத்துச் செல்ல முடியுமா? பெண்களால் நடக்க முடியுமா? இவர்கள் இந்த மாதிரி சிந்திப்பதில்லை சிந்திக்காத காரனத்தினால்தான் இந்த மாதிரி தவறான போக்கை கையாள்கின்றனர். பெண்கள் முட்டிக்கா­ருந்து ஒரு முழம் இறக்ககுவது கூட கட்டாயம் அன்று ஏனென்று சொன்னால் அஹ்மத் என்ற ஹதீஸ் கிரந்தத்தில் பெண்களுக்கு அனுமதி கொடுத்தார்கள் என்று இடம் பெற்றுள்ளது. அஹ்மத் (4543) பெண்கள் பாதத்;தை மறைக்க வேண்டும் என்று கூறவோர் மற்றொரு செய்தியையும் ஆதாரமாக காட்டுகின்றனர். உம்மு ஸல்மா (ர­) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் ஒரு பெண் கீழங்கி இல்லாத போது நீளமான சட்டை யுடனும் ஒரு முக்காடு உடனும் தொழலாமா என்று கேட்டார் அதற்கு நபி (ஸல்) அவர்கள் நீளமான சட்டை (பென்னுடைய) பாதங்களை மறைக்ககூடிய அளவிற்கு இருந்தால் தொழுது கொள்ளலாம் என்று பதிள­த்தார்கள்.நூல்: அபூதாவூத் (ர­) இதில் அப்துர் ரஹ்மான் பின் அப்தில்லாஹ் (தீனார்) என்பவர் இடப் பெருகிறார் இவர் பலவீமானவர் இவரை அறிஞர்களான இப்னு மயீன் அவர்கள் இவருடைய செய்தியில் பலவீனம் இருக்கிறது என்றும் அபூஹாதம் அவர்கள் இவர் பலவீனமானவர் இவருடைய செய்திகளை எழுதிக்கொள்ளலாம் ஆனால் ஆதாரத்திற்கு எடுத்துக்கொள்ளக்கூடாது என்றும் இப்னு அதீ அவாகள் இவர் அறிவிக்கூடிய செய்திகளில் சிலது நிராகரிக்கப்பட வேண்டியது (பெரும்பாலும்) இவருடைய செய்தியை யாரும் வழிமொழிந்து அறிவிப்பதில்லை மொத்தத்தில் இவர் பலவீமானவர்களின் பட்டிய­ல் எழுதப்பட வேண்டியவர் என்றும் கூறுகின்றனர். நூல்: தஹ்தீபுல் கமால் (பாகம் 17 பக்கம் 208) அது மட்டுமில்லாமல் இந்த செய்தியின் அடிகுறிப்பில் இன்ôம் அபூதாவூத் அவர்கள் இந்த செய்தியை மா­க் பின் அனஸ். பக்ர் பின் முளர். ஹப்ஸ் பின் இயாஸ். இஸ்மாயீல் பின் ஜஃபர். இப்னு அபீ திஃப். இப்னு இஸ்ஹாக். முஹம்மத் பின் ஸைத். இவர்கள் அனைவரும் உம்மு ஸல்மா வின் சொந்தக் கூற்றாகத்தான் அறிவிப்பு செய்துள்ளார்கள் ஆனால் இந்த இப்னு தீனார் மட்டும் தான் நபி (ஸல்) அவர்கள் சொன்னார்ககள் என்று அறிவித்துள்ளார் என்று கூறுகிறார்கள். எனவே இது ஷாத் வகையை சார்ந்த பலவீனமான ஹதீஸாகும் ஆகும் எனவே இவர்கள் காட்டுகின்ற இந்த பலவீனமான செய்தியை ஆதாரத்திற்கு எடுத்துக்கொளள்ள முடியயாது. பெண்கள் பாதங்களை மறைக்க வேண்டியதில்லை என்று நாமாக கூறவில்லை மாறாக இப்படித்தான் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் உள்ள பெண்கள் இருந்திருக்கிறார்கள் என்பதற்கு நேரடி சான்றுகளும் இருக்கின்றன. பாத்திமா பின்த் கைஸ் (ர­) அவர்கள் கூறுகிறார்கள் நான் முகீரா உடைய மகனை திருமணம் செய்து கொண்டேன் அவர் அனறைய நாளில் குரைஷி வா­பர்களிலே சிறந்தவராக இருந்தார் நபி (ஸல்) அவர்கள் செய்த முதல் போரில் காயப்படுத்தப்பட்டார் (அவர் என்னை தலாக் செய்து) நான் விதவையான போது அல்லாஹ்வின் தூதரின் ஒரு குழுவினர் என்னை பெண் பேசினர் அவர்களில் அப்துர் ரஹ்மான் பின் அவ்ப் (ர­) அவர்கள் பெண் பேசினார்கள் நபி (ஸல்) அவர்களும் தன்னால் விடுதலை செய்யப்பட்ட அடிமையின் புதல்வரான உஸாமா பின் ஸைத் (ர­) அவர்களுக்காக பெண் பேசினார்கள் யார் என்னை விரும்புகிறாரோ அவர் உஸாமாவை விரும்பட்டும் என்று நான் ஏற்கனவே நபி (ஸல்) அவர்களின் சொல்லை அறிந்து இருந்தேன் ஆகையால் நபி (ஸல்) அவர்கன் என்னிடம் பேசிய போது என்னுடைய விஷயத்தை உங்களிடத்தில் விட்டு விடுகிறேன் நீங்கள் நாடியவருக்கு என்னை மண முடித்து வையுங்கள் என்று கூறினேன் நபி (ஸல்) அவர்கள் என்னை உம்மு ஷரீக் வீட்டில் இத்தா இருக்க சொன்னார்கள் பிறகு அவர் உம்மு ஷரீக் அன்ஸாரிகளில் பணமுள்ள பெண்ணாக இருக்கிறாô அதிகமாக அல்லாஹ்வின் பாதைளில் செலவிடுபவறாக இருக்கிறார் விருந்தாளிகள் அவரிடத்தில் தங்குபவர்களாக இருக்கிறார் நான் அவ்வாறே செய்கிறேன் என்றேன் பிறகு நபி (ஸல்) அவர்கள் நீ அவ்வாறே செய்யதே ஏனென்றால் உம்மு ஷரீக் இடத்தில விருந்தாளிகள் வருபவர்களாக இருக்கிறார் நான் உன்முடைய முகத்திரையோ உன் கணைக்கா­ருந்து ஆடையோ விலகியிருக்க நீ விரும்பாத சிலவற்றை மக்கள் பார்ப்தை நான் வெறுக்கிறேன் என்று கூறி நீ உன்னுடைய சித்தப்பா மகனாகிய (அம்ர் உம்மு மக்தூம் தம்பதியரான புதல்வரான) உம்மி மக்தூம் வீட்டிற்கு செல் என்று கூறினார்கள். (ஹதீஸ் சுருக்கம்) நூல்: முஸ்­ம் (5235) நாம் கு றிப்பிட்ட இந்த பாத்திமா பின்த் கைஸ் (ர­) அவர்களின் செய்தியில் நபியவர்கள் கூறும் போது உன் கெண்டைக்கா­ருந்து ஆடை விலகி விடுமோ என்று பயப்படுகிறேன் என்று கூறுகிறார்கள் உன் பாதங்களி­ருந்து ஆடை விலகி விடும் என்று சொல்ல வில்லை இதி­ருந்து அன்றைய பெண்கள் கெண்டைக்கால் வரைதான் ஆடை அணிந்துள்ளார்கள் என்று தெரிகிறது. பெண்கள் ஆடை அணிவதின் ஒழுக்கங்கள். ஆண்களுக்கு ஆடை வடிஷய்தில் பெண்களுக்கும் ஆடை விஷயத்தில் சில ஒழுக்கங்கள் இருக்கிறது. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் இரு பிரிவினர் நரகவாசிகளில் அடங்குவர் அவ்விரு பிரிவினரை நான் பார்த்ததில்லை (முதலாம் பிரிவினர் யாùனில்) பசுமாட்டின் வாலைப்போன்று நீண்ட சாடடைகளை தம்மிடம் வைத்துக் கொண்டு மக்களை அடிக்கும் கூட்டத்தினர் (இரண்டாம் பிரிவினர் யாரெனில்) மெல்­ய உடை அணிந்து தம் தோள்களைன சாய்த்த படி (குலுக்கி குலுக்கி கர்வத்துடன்) நடந்து (அந்நிய ஆடவர்களின் கவனத்தை) தம் பக்கம் ஈர்க்ககூடிய பெண்கள் ஆவர் அவர்களின் தலை (முடி) சரிந்து நடக்ககூடிய கழுத்து நீண்ட ஒட்டகத்தைப்போன்று இருக்கும் இவர்கள் சொர்க்கத்தில் நுழைய மாட்ôர்கள் (ஏன்) அதன் வாதையை கூட நுகர மாட்டார்கள் சொர்க்கத்தின் நறுமணமோ இவ்வளவு தொலைவி­ருந்து வீசிக்கொண்டிருக்கும்.நூல்: முஸ்­ம் (5098) இந்த செய்தியி­ருந்து பல்வேறு கருத்துக்களை பெறுகிறோம் முதலாவது முழுமையான ஆடையைத்தான் அணிய வேண்டும் என்று முழுமையற்ற ஆடைகளை அணியக்கூடாது என்று தெரிகிறது இன்று பெண்களில் சிலர் முழுமையற்ற ஆடைகளை அணிவதினால்தான் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. இரண்டாவதாக கண்ணாடி போன்ற மென்மையான ஆடைகளை அணியக்கூடாது இதுவும் தேவையற்ற பிரச்சனைகளை உண்டாக்கும் இதை விட்டும் பெண்கள் தவிர்நது கொள்ள வேண்டும் சில பெண்கள் புர்கா அணிகிறார்கள் அதுவும கூட உள்ளே அணிந்திருக்கிற ஆடை முதல் அனைத்தையும் வெளிகாட்டும் விதமாக அமைந்திருக்கிறது புர்கா என்பது உடைலையும் அலங்காரத்தையும் மற்ற ஆண்களை விட்டும் மறைப்பதற்காத்தான் ஆனால் இன்று இந்த மாதிரி புர்காக்கள் அணிவது மூலம் அந்த நோக்கம் நிறைவேறாமல் போய் விடுகிறது. ஸீன்றாவதாக இறுகலான ஆடைகளை அணியக்கடாது இறுகலான ஆடைகளை அணிவது நமது உடம்பின் பருமண்களை எடுத்துக்காட்டும் இந்த மாதிரியான ஆடைகளாக இல்லாமல் ஒரு விசாலமான ஆடைகளை அணிந்து கொள்ள வேண்டும். ஆண்களுக்கு ஒப்பாக பெண்கள் பாவனைகள் கூடாது. பெண்களைப் போன்று ஆண்கள் ஒப்பாக நடப்பதையும் ஆண்களைப்போன்று பெண்கள் ஒப்பாக நடப்பதையும் நபி (ஸல்) அவர்கள் சபித்தார்கள். நூல்: புகாரி (5885) நபி (ஸல்) அவர்கள் பெண்களைப் போன்று ஒப்பனை செய்து கொள்ளும் ஆண்களையும் ஆண்களைப் போன்று ஒப்பனை செய்து கொள்ளும் பெண்களைும் சபித்தார்கள் அ­களை உங்கள் வீடுகளி­ருந்து வெளியேற்றுங்கள் என்றும் சொன்னார்கள் அவ்வாறே நபி (ஸல்) அவர்கள் இன்னாறை வெளியேற்றினார்கள்.நூல் : புகாரி (5886) இன்று மாற்று மதத்தில் உள்ள பெண்கள் ஆண்கள் அணிவதைப்போன்ற பேன்ட்டுகளை அணிகிறார்கள் இவர்களைப்பாôத்து மார்க்கத்தை சரியாக தெரியாத முஸ்­ம் பெண்களும் பேன்ட்டுகளை அணிகிறார்கள் மாற்று மதத்தில் உள்ள பெண்கள் இறுகலான சட்டைகள் டைட் சட்டைகள் கட் சர்ட் அணிவதைப்போன்று இன்று மார்க்கத்தை அறியாத நமது பெண்களும் மாற்று மத ஆண்கள் அணிவதைப்போன்று அணிகிறார்கள் இதை விட்டும் நமது பெண்கள் தவிர்ந்து கொள்ள வேண்டும் இல்லை என்றால் அல்லாஹ்வின் சாபத்தை சுமக்க நேரிடும் அல்லாஹ் இதை விட்டும் நம்மை காப்பானாக. பெண்கள் மற்ற பெண்களோடு இருக்கும் போது. பொதுவாக பெண்கள் மற்ற பெண்களோடு தனியாக இருக்கும் போது மஹ்ரமான (திருமணம் செய்வதற்கு தடை செய்யப்பட்டவர்கள்) ஆண்கள் முன்னால் எந்த உடையில் இருக்கலாம் இதற்கு எந்த தடையும் இல்லை என்றாலும் சில ஒழுக்கங்களை கடைபிடித்தாக வேண்டும். எங்கள் மறை உறுப்புகளில் எதை மறைக்க வேண்டும் எவற்றை மறைக்காமல் இருக்கலாம் என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்டேன் அதற்கு நபி (ஸல்) அவர்கள் உன் மனைவி உன் அடிமை பெண்களிடம் தவிர மற்றவர்களிடம் உன் மறை உறுப்பிகளை பாதுகாத்து கொள் என்று விடையளித்தார்கள் ஒரு ஆண் இன்னொரு ஆணுடன் இருக்கும் போது மறை உறுப்பை காத்து கொள்ள வேண்டுமா? என்று கேட்டேன் அதற்கு நபி (ஸல்) அவர்கள் வெட்கப்படுவதற்கு அல்லாஹ் மிகத்தகுதியானவன் என்று விடையளித்தார்கள் இதை மூவியா பின் ஹைதா (ர­) அவர்கள் அறிவிக்கிறார்கள்.நூல்: திர்மிதி (2693) (3718) ஒரு பெண் தன் கணவன் முன்னால் எப்படியும் இருந்து கொள்ளலாம் ஆனால் தனியாக இருக்கும் போது கணவன் முன்னால் அமருவதைப்போன்று அமரக்கூடாது ஏனென்றால் ஆண்களுக்கு தனியாக இருக்கும் போது என்ன தடை போட்டார்களோ அதை தடை பெண்களுக்கும் பொருந்தும் எனவே பெண்களும் தனியாக இருக்கும் போது மறும உறுப்பை காத்துக்கொள்ள வேண்டும். 2. ஒரு ஆடையில் இருவர் அமரவோ படுக்கவோ கூடாது. ஒரு ஆண் மற்றொரு ஆணுடைய மறை உறுப்பை பார்க்க வேண்டாம் ஒரு பெண் மற்றொரு பெண்ணுடைய மறும உறுப்பை பார்க்க வேண்டாம் ஒரு ஆன் மற்றொரு ஆணுடன் ஒரு ஆடைக்குள் படுக்க வேண்டாம் ஒரு பெண் மற்றொரு பெண்ணோடு ஒரு ஆடைக்குள் படுக்க வேண்டாம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஸயீத் அல் குத்ரி (ரழி­) அவர்கள் அறிவிக்கிறார்கள். நூல்: முஸ்­ம் 512திர்மிதி (2717) அபூதாவூத் (3502) மேலே சொன்ன நடைமுறைகளை பெண்களும் பேணி பாதுகொள்ள வேண்டும். பெண்கள் வெளியே செல்லுதல்.பெண்கள் தேவையில்லாமல் வெளியே செல்லக்கூடாது அவசியம் இருந்தால் வெளியே செல்லாம் தேவையில்லாமல் வெளியே செல்வது தேவையில்லாத பிரச்சனைகளை கொண்டு வரும். மேலே சொன்ன மாதிரி பெண்கள் ஆடைகளை ஒழுக்கங்களை கடைபிடித்தார்கள் என்று சொன்னால் அவர்கள் வெளியே செல்லலாம் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் உள்ள பெண்கள் போர்களத்திற்கும் பெருநாள் தொழும் இடத்திற்கும் வந்துள்ளார்கள் என்பதை பார்க்கமுடிகிறது. ஹப்ஸா (ர­) அவர்கள் கூறியதாவது நாங்கள் இரு பெருநாளிலும் தொழும் இடத்திற்கு செல்வதை விட்டும் குமரிப்பெண்களை தடுத்துக்கொண்டு இருந்தோம் அந்த சமயத்தில் ஒரு பெண் வந்து பனீ கலப் வம்சத்தில் தங்கி இருந்தனர் அவர் தமது சகோதரி உம்மு அதிய்யா (ர­) அவர்களின் வழியாக வந்த செய்தியை அறிவித்தார் அவரது சகோதரி உம்மு அதிய்யா (ர­) நபி (ஸல்) அவர்களோடு தம் கணவர் கலந்து கொண்ட பன்னிரெண்டு போர்களில் ஆறு போர்களில் கணவரோடு இருந்தார் உம்மு அதிய்யா (ர­) அவர்கள் கூறியதாவது நாங்கள் போர்களத்தில் காயமுற்றவர்களுக்காக சிகிச்சையளிப்போம் நோயாளிகளை கவனிப்போம் நான் நபி (ஸல்) அவர்களிடம் எங்களில் ஒருத்திக்கு மேலங்கி இல்லா விட்டால் பெருநாள் தொழுகைக்கு செல்லாது இருப்பது குற்றமா எனக்கேட்டேன் அதற்கு அவளது தோழி தனது உபரியான மேலங்கியை அவளுக்கு அணிவிக்க கொடுக்கட்டும் அவள் நண்மையான காரியங்களிலும் முஸ்­ம்களிடைய பிரச்சாரங்களிலும் பங்கெடுத்துக்கொள்ளட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். உம்மு அதிய்யா (ர­) அவர்கள் என்னிடம் வந்த போது நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூற நீங்கள் கேட்டீர்களா என நான் கேட்டேன் அவர் அதற்கு அவர் தனது தந்தை அர்பணமாகட்டும் ஆம் நான் கேட்டேன் எனக்கூறினார்கள் அவர் நபி (ஸல்) அவர்களுடைய பெயரைக் கூறும்போதெல்லாம் தனது தந்தை அர்பணமாகட்டும் என்பதையும் சேர்த்துக்கொள்வார்கள். கன்னிப் பெண்களும் மாத விடாய் பெண்களும் பெருநாள் அன்று வெளியே சென்று நன்மையான காரியங்களிலும் முஸ்­ம்களிடத்தில் பிராச்சாரத்தலும் பங்கு கொள்ளட்டும் பெருநாள் தொழுகை நடக்கும் இல்த்திற்கு செல்லும் மாதவிடாய் பெண்கள் தொழும் இடத்தை விட்டும் ஒதுங்கியிருப்பார்கள் எனவும் உம்மு அதிய்யா (ர­) அவர்கள் கூறுவார்கள் இதைக்கேட்ட நான் மாத விடாய் பெண்களுமா எனக்கேட்ட போது மாதவிடாய் பெண் அரபாவிலும் மற்ற இல்ங்களுக்கும் செல்வதில்லையா என உம்மு அதிய்யா (ர­) அவர்கள் கேட்டார்கள்.நூல்: புகாரி (324) மஹ்ரமாணவர்களிடத்தில் இருக்கும் போது... திருமணம் செய்வதற்கு தடை செய்யப்பட்ட ஆண்களிடம் பெண்கள் அண்ணிய ஆண்களிடம் முழுமையாக மறைக்க வேண்டிய போன்று அவசியம் இல்லை இதை பின் வரும் நபி மொழி­ருந்து விலங்கி கொள்ளலாம். நபி (ஸல்) அவர்கள் பாத்திமா (ர­) அவர்களுக்ôக ஒரு அடிமையை அன்பளிப்பாக கொடுத்தார்கள் அப்போது பாத்திமா (ர­) அவர்கள் மீது (சிறிய) ஆடை ஒன்று இருந்தது அந்த ஆடை மூலம் அவர்களது தலையை மூடினால் கால் மூடாமல் இருந்தது காலை மூடினால் தலை தெரிந்தது இதை நபி (ஸல்) அவர்கள் கவனித்த போது ? உன்னிடத்தில் உனது தந்தையும் அடிமையும் தான் இருக்கிறார்கள் அதனால் உன் மீது குறற்ம் இல்லை என்று கூறினார்கள். நூல்: அபூதாவூத் (3582) அல்லாஹ் அவனது தூதர் ஸல் அவர்களும் எதைச் சொன்னார்களோ அதை எற்று நடக்க கூடிய மக்களாக அல்லாஹ் நம் அனைவரையும் ஆக்கி அருள் புரிவனாக. (முற்றும்) தூயவழி என்னும் தளத்திலிருந்து எடுக்கப்பட்டது

No comments:

Post a Comment


நீச்சலுடையை எறிந்து விட்டு நிகாபுக்கு ஏன் மாறினேன்?


முன்னால் அமெரிக்க நடிகை ''ஸாரா போக்கர்''
Niqab is the new symbol of woman's liberation.

[ நான் 'நிகாப்' அணிந்து கொண்ட செய்தி வெளியானதுதான் தாமதம் அமெரிக்காவில் ஏதோ பூகம்பமே வெடித்துவிட்டதுபோல் அங்குள்ள அரசியல்வாதிகளும், வாடிகனைச்சேர்ந்த மதகுருமார்களுடன், (போலியான) பெண் விடுதலைக்காக போராடக் கூடியவர்களும், உலக மனித உரிமைக்கழகமும் குய்யோ முறையோ என்று ஒப்பாரி வைக்க ஆரம்பித்தனர்.உலகெங்கிலுமுள்ள எல்லா ஊடகங்களிலும், விருப்பத்துடனோ, விருப்பமின்றியோ, 'ஸ்டைல்' என்ற பெயரில் மிகமிகக் குறைவாக, ஏறத்தாழ உடையே இல்லை என்று சொல்லுமளவுக்கு அணிவதற்கு பெண்கள் வற்புறுத்தப்படுகிறார்கள். ஹிஜாபை நான் அணிந்து கொண்டதால் எனக்குக் கிடைத்ததுபோன்று, ஒரு பெண்ணுக்குக் கிடைக்கும் நிம்மதி, மகிழ்ச்சி ஆகியவைப் பற்றி அறிந்து கொள்ள பெண்களுக்கு உரிமை இருக்கிறது.
எனக்குத்தெரிந்து ஏராளமான மேற்கத்திய பெண்கள் 'நிகாப்' அணிகிறார்கள். திருமணம் முடிக்காதவர்கள் கூட அதில் அடக்கம். ஒரு விஷயம் மிகத்தெளிவானது, 'நிகாப்' அணியும் பெண்ணுக்கு குடும்பத்தார்களின், சுற்றத்தார்களின், சமூகத்தின் ஆதரவு இருக்கிறதோ இல்லையோ அதைப்பற்றி அவர்கள் கவலைப்படமாட்டார்கள். ஏனெனில் அவர்கள் மனதில் ''அந்த உடை அல்லாஹ்வுக்கு பிடித்தமானது'' என்கின்ற நம்பிக்கை அழுத்தமாக பதிந்துவிட்டது.பெண்களின் புதிய சுதந்திரக் குறியீடு 'நிகாப்' தான். நீச்சலுடை அல்ல. - முன்னால் அமெரிக்க நடிகை ஸாரா போக்கர் ]
அமெரிக்காவின் இதயப்பகுதியில் பிறந்த அமெரிக்கப்பெண் நான். மற்றவர்களைப்போல் நானும் அந்தப் பெரிய நகரத்தின் கவர்ச்சிகளுக்கு ஆட்பட்டவளாகத் தான் வளர்ந்தேன். கவர்ச்சிக்கேந்திரமான ஃபுளோரிடாவுக்கு, தெற்கு மியாமி கடர்கரையின் நாகரீக வாழ்வைத்தேடி ஓடினேன்.
ஒரு சாதாரண மேற்கத்திய பெண் எப்படி இருப்பாளோ அப்படியேதான் நானும் இருந்தேன்; ஆம்! என் அழகின்மீது அதிக ஈடுபாடு கொண்டவளாக இருந்தேன். நான் வளர வளர, நாகரீகத்துக்கு அடிமையாகி விட்டேன் என்பதை நன்றாகவே புரிந்து கொண்டேன். எனது அழகான தோற்றமே என்னை பிணைக்கைதியாக்கி விட்டதை உணர்ந்தேன்.
நாகரீக வாழ்வை மேற்கொண்டால் வாழ்க்கையின் தேவைகளுக்கான பொருளாதாரத்துக்கு என்ன செய்வது? இரண்டுக்கும் இடைவெளி அதிகமானது. மதுபானங்கள் பரிமாறப்படும் கேளிக்கை பார்ட்டியை விட்டு விலகி தியானம், சமூக சேவை போன்றவற்றில் கவனத்தை திருப்பினேன். ஆனால் இவைகளால் பெரிய பலன் ஏதும் கிட்டவில்லை. அவ்வப்போது போட்டுக்கொள்ளும் வலி மாத்திரைகள் தற்காலிக நிவாரணத்தைத்தானே கொடுக்கும். அதற்கு மேல் எந்த பலனையும் கொடுக்காது அல்லாவா? என்னுடைய மன வலிக்கு அழுத்தமான தீர்வுதான் என்ன?
செப்டம்பர் 11, 2001. அப்பொழுதுதான் இஸ்லாத்தைப்பற்றி, இஸ்லாமிய கலச்சாரத்தைப்பற்றி, அதன் மதிப்பைப்பற்றி கேள்விப்படுகிறேன். அதுவரை இஸ்லாம் என்றாலே பெண்களை ''கூடாரத்துக்குள்'' அடைத்து வைத்து கொடுமைப்படுத்தும் மதம், மனைவியாக வருபவளை அடித்து உதைக்கும் மதம், பயங்கரவாத மதமாகத்தான் அறிந்து வைத்திருந்தேன்.
அப்பொழுதுதான் ஒருநாள் திருக்குர்ஆனை காணும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. ஒரே மாதிரியான மேற்கத்திய கருத்துக்களுக்கு மாற்றமான அதன் நடை என்னை மிகவும் கவர்ந்தது. இருப்பு, வாழ்க்கை, படைப்பு, படைத்தவனுக்கும் படைப்புகளுக்கும் உள்ள தொடர்பு ஆகியவற்றைப் பற்றிய விளக்கங்கள் என்னை மிகவும் கவர்ந்தன.
இதயத்தோடு ஒன்றிப்போகும் அதன் வார்ததைகளை விளக்க எவருமே தேவையில்லை எனும் அளவுக்கு என் ஆன்மாவோடு (அதன் வார்த்தைகள்) ஒன்றிப்போனது என்றுதான் சொல்வேன். இறுதியாக உண்மை எது என்பதை விளங்கிக்கொண்டேன். கடைவீதிக்குச்சென்று நீளமான அழகான 'கவுன்' ஒன்றை வாங்கி வந்தேன். முஸ்லீம் பெண்மணிகள் தலையை மறைக்க அணியும் துணியையும் கட்டிக்கொண்டு நான் தினசரி நடந்து செல்லும் வீதிகளில் நடக்க ஆரம்பித்தேன். அதே வீதியில்தான் நேற்றுவரை கவர்ச்சிகரமான குட்டையான (ஷார்ட்ஸ்) மற்றும் நீச்சலுடைகளுடன் நடந்து சென்றேன். வீதியில் அதே பழைய முகங்கள், அதே பழைய கடைகளைத்தான் பார்க்கிறேன். ஆனால் மிகப்பெரிய வேறுபாட்டை என் உள்ளம் காண்கிறது. ஆம் சுதந்திரப்பெண்மணியாக இப்போது என்னை நான் உணர்கிறேன். மற்றவர்கள் என் கவர்ச்சியான உடலமைப்பை ஆசையோடு நோக்கும் அந்த பார்வையிலிருந்து தப்பித்து நான் விடுதலை அடைந்து விட்டது போல், என்னை சுற்றியிருந்த விலங்குகள் அறுந்து விழுவது போல் உணர்ந்தேன்.
உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் கவர்ச்சியான என் உடலமைப்பை வேட்டையாடும் மனிதர்களிடமிருந்து எனக்கு முழு விடுதலை கிடைத்துவிட்டது என்று உள்ளம் குதூகளித்தது. அந்த நேரத்தில் என் மனம் அடைந்த நிம்மதியை எப்படி வர்ணிப்பது என்று எனக்கு சொல்லத் தெரியவில்லை.அதுமட்டுமின்றி எனது தோள்களில் இருந்து 'பெரிய சுமை' கீழிறக்கி வைக்கப்பட்டது போல் உணர்ந்தேன். முன்போல நான் ஷாப்பிங் செய்வதிலும், ஒப்பனை செய்து கொள்வதிலும், கூந்தலைச் சரி செய்து கொள்வதிலும் எனது நேரத்தையெல்லாம் வீணடிப்பது நின்றுபோனது. நான் முழு சுதந்திரம் அடைந்துவிட்டதாக என்று உணர்ந்தேன்.
''பெண்களை அவமதிக்கும் மதம்'' என்று சிலரால் வர்ணிக்கப்படுகின்ற இஸ்லாத்தை உளப்பூர்வமாக முழு மனதோடு ஏற்றுக்கொண்டேன். அவர்கள் சொல்லும் காரணமே, இஸ்லாத்தை எனக்கு இன்னும் நெறுக்கமாக்கியது. முஸ்லீமான ஒருவரை நான் திருமணமும் செய்து கொண்டேன். நான் ஹிஜாபை (Hijab) அணிந்து கொண்டாலும் நிகாபை (Niqab) அணிந்து கொள்ள வேண்டும் என்பதிலேயே மிகவும் ஆர்வமாக இருந்தேன்.
எனது முஸ்லீம் கணவரிடம் எனது எண்ணத்தை வெளிப்படுத்தியபோது 'ஹிஜாப்' அணிந்து கொள்வதுதான் பெண்களுக்கு கடமையே தவிர 'நிகாப்' அல்ல, என்றார். (ஹிஜாப் என்பது பெண்கள் முகம் மற்றும் கை கால்கள் தவிர உடம்பின் மற்ற பகுதிகளை மறைப்பது, 'நிகாப்' என்பது முகத்தையும் மறைப்பது கண்களைத்தவிர)ஒன்றரை ஆண்டுகளுக்குப்பிறகு என் கணவரிடம் மறுபடியும் எனது 'நிகாப்' இன் மீது உள்ள ஆசையை தெரிவித்தேன். இம்முறை நான் சொன்ன காரணத்தை அவரால் மட்டுமல்ல வேறு எவராலும் தட்ட முடியாது. ஆம்! என் பிரியமுள்ள கணவரிடம் சொன்னேன், "நான் 'நிகாப்' அணிவது அல்லாஹ்வுக்கு மிகவும் பிடித்தமானதாக இருக்கும், அத்துடன் அதிக அடக்கமாக இருப்பதனால் என் மன அமைதியையும் அது அதிகப்படுத்தும் என்று நம்புகின்றேன்'' என்றேன்.
இம்முறை என் இனிய கணவர் என் கருத்துக்கு மறுப்பேதும் சொல்லாமல் உடனே ஏற்றுக் கொண்டார். அதுமட்டுமின்றி என்னை உடனே கடை வீதிக்கு அழைத்துச்சென்று அதனை வாங்கியும் கொடுத்து விட்டார். அல்ஹம்துலில்லாஹ்.
நான் 'நிகாப்' அணிந்து கொண்ட செய்தி வெளியானதுதான் தாமதம் அமெரிக்காவில் ஏதோ பூகம்பமே வெடித்துவிட்டதுபோல் அங்குள்ள அரசியல்வாதிகளும், வாடிகனைச்சேர்ந்த மதகுருமார்களுடன், (போலியான) பெண் விடுதலைக்காக போராடக் கூடியவர்களும், உலக மனித உரிமைக்கழகமும் குய்யோ முறையோ என்று ஒப்பாரி வைக்க ஆரம்பித்தனர். அந்த ஒப்பாரியுடன் எகிப்து நாட்டு (!!!) அதிகாரிகளும் சேர்ந்து கொண்டு 'நிகாப்'' அணிவது பிற்போக்குத்தனம் என்று புலம்பித்தீர்த்தனர்.
பெண்களின் உரிமைக்காக போராடுவதில் நானும் சளைத்தவள் அல்ல. ஆனால் தற்போது ஒரு முஸ்லீம் பெண்மணியாக இருந்து பெண்களுக்கு கிடைக்க வேண்டிய உண்மையான உரிமைகளுக்காக போராடுகிறேன். குடும்பத்தில் பெண்களுக்கு உள்ள முக்கியத்துவம் பற்றிய கருத்துக்களை முன்னிறுத்துகிறேன். நல்ல முஸ்லிம்களாக இருப்பதற்கும், கணவன்மார்களுக்கு ஆதரவு கொடுத்து பொறுப்புகளை எடுத்துக் கொள்வதற்கும், குழந்தைகளை நல்லவர்களாக வளர்த்து மனித சமுதாயத்திற்கு வழிகாட்டக் கூடியவர்களாக ஆக்குவதற்கு முஸ்லிம் பெண்களுக்கு என்னால் ஆனதைக் கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறேன்.
நம்மைப் படைத்த அல்லாஹ்வை திருப்திப் படுத்துவதற்காக, 'நிகாப்' அல்லது 'ஹிஜாப்' அணியும் நமது உரிமைக்காகப் போராடும் அதே வேளையில்; ஹிஜாப், நிகாப் அணியாத பெண்களுக்கு, நாம் இதை ஏன் அணிய வேண்டும், ஏன் இது நமக்கு மிகவும் அவசியம் என்பதை எல்லாம் எடுத்துச் சொல்ல வேண்டும்.உலகெங்கிலுமுள்ள எல்லா ஊடகங்களிலும், விருப்பத்துடனோ, விருப்பமின்றியோ, 'ஸ்டைல்' என்ற பெயரில் மிகமிகக் குறைவாக, ஏறத்தாழ உடையே இல்லை என்று சொல்லுமளவுக்கு அணிவதற்கு பெண்கள் வற்புறுத்தப்படுகிறார்கள். ஹிஜாபை நான் அணிந்து கொண்டதால் எனக்குக் கிடைத்ததுபோன்று, ஒரு பெண்ணுக்குக் கிடைக்கும் நிம்மதி, மகிழ்ச்சி ஆகியவைப் பற்றி அறிந்து கொள்ள பெண்களுக்கு உரிமை இருக்கிறது. இதை நான் முஸ்லிமல்லாத முன்னாள் பெண்மணியாகவும் உரக்கச்சொல்வேன்.
எனக்குத்தெரிந்து ஏராளமான மேற்கத்திய பெண்கள் 'நிகாப்' அணிகிறார்கள். திருமணம் முடிக்காதவர்கள் கூட அதில் அடக்கம். ஒரு விஷயம் மிகத்தெளிவானது, 'நிகாப்' அணியும் பெண்ணுக்கு குடும்பத்தார்களின், சுற்றத்தார்களின், சமூகத்தின் ஆதரவு இருக்கிறதோ இல்லையோ அதைப்பற்றி அவர்கள் கவலைப்படமாட்டார்கள். ஏனெனில் அவர்கள் மனதில் ''அந்த உடை அல்லாஹ்வுக்கு பிடித்தமானது'' என்கின்ற நம்பிக்கை அழுத்தமாக பதிந்துவிட்டது. அடித்துச்சொல்வேன் பெண்களின் புதிய சுதந்திரக் குறியீடு 'நிகாப்' தான் என்று.
சௌத் பீச்சில் என் நீச்சலுடையையும், கவர்ச்சியான மேற்கத்திய வாழ்க்கை முறையையும் கழற்றி எறிந்து விட்டு, என்னைப் படைத்தவனோடு நிம்மதியாக இருப்பதிலும் சுயமரியாதையுடனும் கண்ணியத்துடனும் வாழும் ஒரு பெண்ணாக என்னைச் சுற்றியிருப்பவர்களோடு வாழ்வதில்தான் எனக்கு அளவிலா மகிழ்ச்சியும் நிம்மதியும் இருக்கிறது. அதனால்தான் நான் 'நிகாப்' அணிவதைத் தேர்ந்தெடுத்துக் கொண்டேன். அதை அணியும் உரிமைக்காக நான் உயிரை விடவும் தயார் தான். நேற்றுவரை நீச்சலுடையை பெண்ணினத்தின் சுதந்திரக் குறியீடாக நினைத்திருந்தேன். ஆனால் அது முற்றிலும் தவறு. பெண் விடுதலையின் குறியீடு 'நிகாப்'தான். அது கொடுக்கும் கண்ணியத்தை விட்டுவிட்டு, அசிங்கமான மேற்கத்திய வாழ்க்கை முறையைத் தேர்வு செய்யும் பெண்களே, ''நீங்கள் எதை இழந்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை அறிய மாட்டீர்கள்.''
தமிழ் மொழியாக்கம் . எம்.ஏ. முஹம்மது அலீ,
adm. www.nidur.info
[ Sara Bokker is a former actress, model, fitness instructor, and activist. Currently, Sara is director of communications at The March for Justice, a cofounder of The Global Sisters Network, and producer of the infamous Shock & Awe Galleryய©.]
For read in English please click below
:
http://www.nidur.info/en/index.php?option=com_content&view=article&id=153:why-i-shed-bikini-for-niqab-former-actress-sara-bokker-&catid=20:stories-of-new-muslims&Itemid=24

அல்லாஹ்வின் திருமறையும் அண்ணலாரின் வழிமுறையும்


பிரிட்டனைச் சேர்ந்த பத்திரிகை நிருபர் யுவான் ரிட்லியைக் கவர்ந்த இஸ்லாம்


[''நான் தாலிபான்களால் சிறை பிடிக்கப்படும் வரை புர்கா அணிந்த பெண்களை மிகவும் ஒடுக்கப்பட்ட படைப்பினமாகவே கருதி வந்தேன். செப்டம்பர் 2001-ல் அமெரிக்காவில் பயங்கரவாத தாக்குதல் நடைபெற்று சற்றே 15 நாட்களுக்குப் பிறகு ஒரு நீல நிற புர்காவில் என்னை மறைத்துக்கொண்டு ஆப்கானிஸ்தான் எல்லையைக் கடந்து உள்ளே புகுந்தேன்.
தாலிபான்களின் கொடுமையான ஆட்சியில் சராசரி மனித வாழ்க்கையைப் பற்றி நான் பணியாற்றிய பத்திரிகைக்கு செய்திகள் திரட்டும் நான் கண்டுபிடிக்கப்பட்டு, கைது செய்யப்பட்டபோது என்னைக் கைது செய்தவர்கள் முகத்தில் துப்பினேன், ஆக்ரோஷமாக எதிர்த்தேன்.... எனது சொந்த ஊரான லண்டன் திரும்பிய பிறகு நான் தாலிபான்களுக்கு அளித்த வாக்குறுதியைக் காப்பாற்றுவதற்காக இஸ்லாத்தைப் பற்றி அறியத் துவங்கினேன்.
நான் படிக்கப்படிக்க இனம்புரியாத ஆச்சரியம் என்னை ஆட்கொள்ளத் துவங்கியது. பெண்ணின விடுதலையை ஒங்கி ஒலிக்கும் திருக்குர்ஆனின் நல்லுபதேசங்களைக் கண்டு திகைத்துப் போனேன்.
மேற்கத்திய பெண் விடுதலைப் போராளிகள் 1970-களில் போராடிப் பெற்ற அனைத்துப் பெண்ணிய உரிமைகளும் 1400 வருடங்களுக்கு முன்னரே முஸ்லிம் பெண்மணிகளுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இஸ்லாமியப் பெண்கள் ஆன்மிகத்திலும், கல்வியிலும், சொத்துரிமையிலும் ஆண்களுக்கு நிகரான உரிமைப் பெற்றுத் திகழ்கின்றனர். ]
அமெரிக்க, ஐரோப்பிய, இஸ்ரேலிய ஏகாதிபத்திய சக்திகள் எவ்வளவுதான் இஸ்லாத்திற்கு எதிராக அவதூறான பிரச்சாரங்களை மேற்க்கொண்டாலும் இஸ்லாத்தின் அன்பு மற்றும் சமாதானத்தின் நற்செய்தி மக்களால் அடையாளம் காணப்படும் ஒரு நாள் வந்தே தீரும் என பிரபல பத்திரிகையாளரும், சர்வதேச மனித உரிமைப் போராளியுமான யுவானி ரிட்லி கூறினார்.
கேரள மாநிலம் குற்றிப்புரம் ஸஃபா நகரில் ஜமாஅத்தே இஸ்லாமியின் பெண்கள் மாநாட்டை துவக்கி வைக்கவிருந்தார் அவர். ஆனால் லண்டனில் இந்திய தூதரகம் அவருக்கு இந்தியா செல்ல விசா மறுத்ததால் வீடியோ கான்ஃப்ரன்சிங் மூலமாக மாநாட்டை துவக்கி வைத்து உரையாற்றினார். "அமெரிக்க ஏகாதிபத்தியம் இஸ்லாத்திற்கெதிராக அவதூறான பிரச்சாரங்களை நடத்திக் கொண்டிருக்கிறது. அவர்களை ஆக்கிரமிப்புகளையும் அருவருக்கத்தக்க நடவடிக்கைகளையும் மறைப்பதற்காகத்தான் இந்தப்பிரச்சாரத்தை மேற்க்கொள்கிறார்கள்.ஃபலஸ்தீனில் துயரத்தில் ஆழ்ந்துள்ள மக்களுக்கு ஆதரவாக பேசுகிறேன் என்பதற்காகவே என்னை ஏகாதிபத்திய சக்திகள் நோட்டமிடுகின்றன. ஃபலஸ்தீனிலும், ஆஃப்கானிலும், ஈராக்கிலும் கொடூரமான தாக்குதல்கள் மூலமும், கூட்டுக்கொலைகள் மூலமும் குண்டுகளை வீசுவதன் மூலமும் முஸ்லிம்களின் மீது நிரந்தரமாக ஏகாதிபத்திய சக்திகள் போரிட்டு வருகின்றன.
இஸ்லாம் பெண்களுக்கெதிரான மார்க்கம் என்ற மேற்கத்திய வாதிகளின் பொய் பிரச்சாரம் வெற்றிப்பெறாது. ஆஃப்கானிஸ்தானில் தாலிபான்களின் வசம் சிக்கிய என்னை இஸ்லாத்தை நோக்கி திருப்பியது அவர்களுடைய கண்ணியமான நடவடிக்கைகளும் சுத்தமான நிலைபாடுகளும் தான். இஸ்லாம் பெண்களுக்கெதிரான மார்க்கம் என்றால் தாலிபான் போராளிகள் என்னிடம் ஒருபோது கண்ணியமாக நடந்துக் கொண்டிருக்க மாட்டார்கள். மேலும் எனது வாழ்வில் அது திருப்புமுனையும் ஆகியிருக்காது.
ஏகாதிபத்தியமும், சியோனிஷமுதான் இன்று உலகம் சந்திக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தல்கள். இவ்விரண்டு சக்திகளும் இஸ்லாத்திற்கு மட்டுமல்ல விரோதிகள் மனிதர்கள் அனைவருக்குமே விரோதிகள் தான். முஸ்லிம் பெண்கள் காலக்கட்டத்தின் சவால்களை புரிந்துக்கொண்டு களமிறங்கவேண்டும்." இவ்வாறு ரிட்லி உரையாற்றினார்
தி வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கையில் பிரிட்டனைச் சேர்ந்த சகோதரி யுவான் ரிட்லி எழுதிய கட்டுரை இது. இனி அவரது சொந்த நடையில்....''நான் தாலிபான்களால் சிறை பிடிக்கப்படும் வரை புர்கா அணிந்த பெண்களை மிகவும் ஒடுக்கப்பட்ட படைப்பினமாகவே கருதி வந்தேன்.
செப்டம்பர் 2001-ல் அமெரிக்காவில் பயங்கரவாத தாக்குதல் நடைபெற்று சற்றே 15 நாட்களுக்குப் பிறகு ஒரு நீல நிற புர்காவில் என்னை மறைத்துக்கொண்டு ஆப்கானிஸ்தான் எல்லையைக் கடந்து உள்ளே புகுந்தேன்.
தாலிபான்களின் கொடுமையான ஆட்சியில் சராசரி மனித வாழ்க்கையைப் பற்றி நான் பணியாற்றிய பத்திரிகைக்கு செய்திகள் திரட்டுவது என் ரகசிய திட்டம். ஆனால் நான் கண்டுபிடிக்கப்பட்டு, கைது செய்யப்பட்டு, பத்து நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டேன்.
என்னைக் கைது செய்தவர்கள் முகத்தில் துப்பினேன், ஆக்ரோஷமாக எதிர்த்தேன். அதனால் அவர்கள் என்னை ஒரு ''கெட்ட பெண்'' என்று அழைத்தார்கள். ஆனால் நான் குர்ஆனைப் படிப்பதாகவும், இஸ்லாத்தைப் பற்றி தெரிந்து கொள்ளப் போவதாகவும் வாக்களித்த பிறகு என்னை விடுதலை செய்து விட்டார்கள். (உண்மையைச் சொல்லப் போனால் நான் விடுதலையான போது யார் மகிழ்ந்தார்கள் என்று எனக்கு சொல்லத் தெரியவில்லை'' நானா? அல்லது அவர்களா?)
எனது சொந்த ஊரான லண்டன் திரும்பிய பிறகு நான் தாலிபான்களுக்கு அளித்த வாக்குறுதியைக் காப்பாற்றுவதற்காக இஸ்லாத்தைப் பற்றி அறியத் துவங்கினேன்.
நான் படிக்கப்படிக்க இனம்புரியாத ஆச்சரியம் என்னை ஆட்கொள்ளத் துவங்கியது. குர்ஆனில் நான் மனைவிமார்களை எப்படி அடிப்பது என்றும், மகள்களை எப்படி அடக்கி ஒடுக்கி துன்புறுத்துவது என்றும் ஆண்களுக்கு உபதேசிக்கும் வசனங்கள் இருக்கும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் பெண்ணின விடுதலையை ஒங்கி ஒலிக்கும் திருக்குர்ஆனின் நல்லுபதேசங்களைக் கண்டு திகைத்துப் போனேன்.
எனது கைதுக்குப் பிறகு இரண்டரை வருடங்கள் கழித்து நான் இஸ்லாமை எனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டேன். எனது இந்த மாற்றம் எனது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் திகைப்பு, ஏமாற்றம், உற்சாகம் போன்ற உணர்வுகளின் கலவையான நிலைமையை உண்டு பண்ணியது.
இன்று! மத நல்லிணக்கத்திற்கு இடையூறாக இருக்கிறது என்று முஸ்லிம் பெண்களின் முகத்திரையைப் பற்றி பிரிட்டனின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜாக் ஸ்டிரா விமர்சனம் செய்திருப்பது என்னை ஏமாற்றமும், அச்சமும் கொள்ள வைக்கிறது. இவருக்கு பிரிட்டனின் பிரதமர் டோனி பிளேர், எழுத்தாளர் சல்மான் ருஷ்டி மற்றும் இத்தாலியப் பிரதமர் ரெமானோ ப்ரோடி ஆகியோர் வேறு ஆதரவளிக்கின்றனர் என்பதுதான் வேடிக்கையான வேதனை.புர்காவுக்கு வெளியேயும், உள்ளேயும் இரண்டு மாறுபட்ட வாழ்க்கை முறையை உணர்ந்த ஒரு பெண் என்ற அடிப்படையில் சொல்கிறேன்: இஸ்லாமிய உலகில் வாழ்கின்ற முஸ்லிம் பெண்களின் அடக்குமுறையைப் பற்றி ஆரவாரமாக கவலைப்படுகிற கிட்டத்தட்ட அனைத்து மேற்கத்திய அரசியல்வாதிகளும் சரி, பத்திரிக்கையாளர்களும் சரி இஸ்லாத்தைப் பற்றியும், அது பெண்களுக்கு வழங்கியுள்ள உரிமைகள் பற்றியும் ஒன்றுமே தெரியாதவர்களாகத்தான் இருக்கின்றார்கள்.
ஹிஜாபைப் பற்றியும், பருவமடையாத மணப்பெண்கள் பற்றியும், பெண்கள் கத்னாவைப் பற்றியும், கௌரவக் கொலைகளைப் பற்றியும், கட்டாயத் திருமணங்கள் பற்றியும் இவர்கள் சகட்டுமேனிக்கு எழுதியும் பேசியும் வருகிறார்கள். இந்த வன்கொடுமைகள் அத்தனைக்கும் இவர்கள் இஸ்லாத்தைக் குற்றவாளி ஆக்குகின்றார்கள். இவர்களது இந்த வெறித்தனமானப் போக்கு இவர்களது அறியாமையைத்தான் பறைசாற்றுகின்றது.
மேற்கண்ட வெறுக்கத்தக்க விஷயங்கள் கலாச்சாரம் மற்றும் சமூக சடங்கு சம்பிரதாயங்களுக்கு உட்பட்டவை. இவற்றுக்கும் இஸ்லாத்திற்கும் எள்ளளவும் சம்பந்தம் இல்லை. திருக்குர்ஆனை கருத்தூன்றிப் படித்தால் ஒர் உண்மை விளங்கும்.
மேற்கத்திய பெண் விடுதலைப் போராளிகள் 1970-களில் போராடிப் பெற்ற அனைத்துப் பெண்ணிய உரிமைகளும் 1400 வருடங்களுக்கு முன்னரே முஸ்லிம் பெண்மணிகளுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
இஸ்லாமியப் பெண்கள் ஆன்மிகத்திலும், கல்வியிலும், சொத்துரிமையிலும் ஆண்களுக்கு நிகரான உரிமைப் பெற்றுத் திகழ்கின்றனர். ஒரு குழந்தையைப் பெற்றெடுத்து அதனை சரிவர வளர்க்கும் பெண்மணி பெரும் பாக்கியம் நிறைந்தவளாகக் கருதப் படுகின்றாள்.
இவ்வாறு இஸ்லாம் பெண்ணினத்திற்குத் தேவையான எல்லாவற்றையும் வழங்கி மேன்மைப்படுத்தி இருக்கும்போது, இந்த மேற்கத்திய ஆண்கள் ஏன் முஸ்லிம் பெண்களின் ஆடை விஷயத்தில் மட்டும் முதலைக்கண்ணீர் வடிக்கின்றனர்?
பிரிட்டிஷ் அரசின் அமைச்சர்களான கோர்டன் பிரவுன் மற்றும் ஜான் ரீட் ஆகியோர் முஸ்லிம் பெண்களின் முகத்திரையைப் பற்றி தரக்குறைவாக விமர்சித்துள்ளனர்.
இதில் வேடிக்கை என்னவென்றால், இவர்கள் இருவருமே ஆண்கள் கூட பாவாடை அணியும் ஸ்காட்லாந்து நாட்டு எல்லையோரத்தைச் சேர்ந்தவர்கள்.
நான் இஸ்லாத்திற்கு மாறி முக்காடு அணியத் துவங்கியபோது மிகப்பெரிய அளவில் விளைவுகளை எதிர்கொள்ள நேரிட்டது. நான் செய்ததெல்லாம் எனது தலையையும், தலைமுடியையும் மூடிக் கொண்டேன், அவ்வளவுதான். ஆனால் உடனே நான் இரண்டாந்தர குடிமகளாக்கப்பட்டேன்.
ஏதோ கொஞ்சம் இஸ்லாமிய எதிர்ப்புணர்வுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்று நினைத்திருந்தேன். ஆனால் அனைத்துத் தரப்பு மக்களிடமிருந்தும் இந்தளவிற்கு இனவெறியை நான் எதிர்பார்க்கவில்லை. ''வாடகைக்கு'' என்ற வாசகத்தடன் என்னைக் கடந்து சென்று நின்ற டாக்ஸியிலிருந்து ஒரு வெள்ளைக்காரப் பெண் இறங்கினாள்.
நான் அந்த டாக்ஸியில் ஏறுவதற்காக எத்தனித்தேன். ஆனால் என்னைக் கூர்ந்து கவனித்த டிரைவர் என்னை நிராகரித்து விட்டு விருட்டென்று காரை ஒட்டிச் சென்று விட்டான்.
மற்றொரு டாக்ஸி டிரைவரோ என்னிடம் ''பின் ஸீட்டில் வெடிகுண்டு எதையும் வைத்து விட்டுப் போய்விடாதே'' என்றும் ''பின்லேடன் எங்கே ஒளிந்து இருக்கிறான் தெரியுமா?'' என்றும் கமெண்ட் அடித்தான்.
ஆம்! பெண்கள் கண்ணியமாக உடை உடுத்த வேண்டும் என்பது ஒர் இஸ்லாமியக் கடமை. நான் அறிந்தவரை பெரும்பான்மையான முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் - அதாவது முகம் மட்டும் வெளியில் தெரியும் வண்ணம் உடை அணிகின்றனர். வெகு சிலரே முகத்தையும் மறைக்கும் நிகாப் எனும் முகத்திரை அணிந்து வெளியில் வருகின்றனர். என்னைப் பொறுத்தவரை, ஒரு முஸ்லிம் பெண் கண்ணியத்திற்காக ஹிஜாப் அணிகிறாள், அவளுக்கு அந்த கண்ணியத்தைக் கொடுத்து விட்டுப் போங்களேன்! வால் ஸ்டிரீட்டில் இயங்குகின்ற ஒரு வங்கியின் அதிகாரி தன்னை ஒரு சீரியஸான பிஸினஸ்மேனாக பிறர் கருத வேண்டும் என்பதற்காகத்தானே கோட் சூட் அணிகிறார்! - அதுபோலத்தான் இதுவும்.
நான் ஒரு நேரத்தில் மேற்கத்திய பெண்ணிய வாதியாகத்தான் இருந்தேன். ஆனால் பிறகுதான் உணர்ந்தேன்.. முஸ்லிம் பெண்ணியவாதிகள் பிறரைவிட மிகத் தீவிரமாக பெண் விடுதலைக்காக போராடக் கூடியவர்கள் என்று! அநாகரீகமான அழகிப் போட்டிகளை நாம் வெறுக்கின்றோம். ஆனால் நமக்கு எரிச்சலூட்டும் விதமாக 2003-ல் நடந்த பிரபஞ்ச அழகிப் போட்டியில் ஆப்கானிஸ்தானிய பெண் ஒருத்தி நீச்சல் உடையில் பங்கேற்ற நிகழ்ச்சியை அந்தப் போட்டியின் நடுவர்கள் இஸ்லாமியப் பெண்களின் விடுதலைக்கான ஆரம்பம் இது என்று வர்ணித்தனர்.
ஹிஜாப் அணிவது சமூக உறவைப் பேணுவதற்கு மிகவும் தடையாக இருக்கிறது என்று இத்தாலியப் பிரதமர் ப்ரோடி கூறியிருக்கிறார். இந்த முட்டாள்தனமான வாதத்தைக் கேட்கும்போது எனக்கு அழுவதா அல்லது சிரிப்பதா? என்று தெரியவில்லை.
இவர் சொல்வது சரியென்றால் இன்றைய விஞ்ஞான யுகத்தில் நாம் அன்றாடம் உபயோகிக்கும் செல்போன், சாதா போன், பேக்ஸ், எஸ்.எம். எஸ். தகவல்கள் மற்றும் ரேடியோ ஆகியவை அர்த்தமற்றவையாகி விடும். இந்த உபகரணங்களை தொடர்பில் இருப்பவர்களின் முகத்தைப் பார்த்துக் கொண்டா நாம் உபயோகிக்கிறோம்?
இஸ்லாத்தின் கீழ் நான் மதிக்கப்படுகின்றேன். எனக்குத் திருமணம் ஆகியிருந்தாலும், ஆகாவிட்டாலும் எனக்கு கல்வி கற்க உரிமை உண்டு என்றும், கல்வியைத் தேடிப்பெற வேண்டியது எனது கடமை என்றும் இஸ்லாம் எனக்கு சொல்லித் தருகின்றது.. இஸ்லாத்தின் இந்த கட்டமைப்பிலும் பெண்களாகிய நாங்கள் ஆண்களுக்கு சமைப்பது, துவைப்பது, சுத்தம் செய்வது போன்ற சேவகங்கள் செய்துதர வேண்டும் என்று கட்டளையிடப்படவே இல்லை.
இன்னும் சொல்லப் போனால், பெண்களுக்கெதிரான வன்கொடுமைகள் ஒரு குறிப்பிட்ட மதத்தையோ, இனத்தையோ அல்லது தேசத்தையோ சார்ந்தது அல்ல. இது மதம், மொழி, இனம், கலாச்சாரம் ஆகிய அனைத்தையும் கடந்து பெண்ணினத்தை பாதித்து வரும் ஒர் உலகளாவிய பிரச்சினையாகும்.
உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால்ஸ. National Domestic Violence Survey நடத்திய ஆய்வில் அமெரிக்காவில் 12 மாத கால அளவில் 4 மில்லியன் பெண்கள் ஆண்களது கொடுமைக்குள்ளாகி வருகின்றனர். மேலும் ஒரு நாளில் மட்டும் 3 பெண்கள் தங்களது காதலன் அல்லது கணவனால் கொல்லப்பட்டு வருகின்றனர்.
ஆண்கள் தங்கள் மனைவிமார்களை கைநீட்டி அடிக்க அனுமதிக்கிறது இஸ்லாம் என்ற கூற்றை எடுத்துக் கொண்டால் - இது முற்றிலும் தவறாகப் புரிந்து கொள்ளப் பட்டுள்ளது. இஸ்லாத்தை விமர்சிப்பவர்கள் அடிக்கடி குர்ஆன் வசனங்களையும், நபிமொழி குறிப்புகளையும் மேற்கோள் காட்டுகின்றனர்.
ஆனால் அந்த வசனங்கள் மற்றும் நபிமொழிகளின் உள்ளர்த்தங்களை தவறாக விளங்கிக் கொள்வதால் எற்படும் விளைவுதான் இது. ஒர் ஆண் தனது மனைவியை அடிக்கத்தான் வேண்டுமாயின், அவளது உடலில் எவ்விதக் காயமோ அடையாளமோ இல்லாமல்தான் அடிக்க வேண்டும் என்று குர்ஆன் சொல்கிறது. இது குர்ஆனுக்கே உரிய தனித்துவமிக்க சொல்லாளுமையாகும். இதன் உள்ளர்த்தத்தை நெருக்கமாகச் சொல்லப் போனால்... முட்டாளே! உனது மனைவியை அடிக்காதே!! என்பதுதான்.
இதற்கு மேலும் இஸ்லாம் பெண்களை அடிமைப்படுத்தி வைக்கிறது என்று வாதிடுவோர்களின் கவனத்திற்கு ஒன்றைச் சொல்கிறேன்:
அமெரிக்காவின் ஆன்மீகக் குரு ரெவரண்ட் பேட் ராபெர்ட்ஸன் 1992-ல் கூறிய கருத்து இதோ: ''பெண் விடுதலை என்பது சமூக சீர்கேட்டை உருவாக்கி, குடும்ப பாரம்பரியத்தை சீர்குலைத்து, கணவர்களை விட்டு ஒடுகின்ற, தங்கள் குழந்தைகளைக் கொல்கின்ற, ஒரினச் சேர்க்கையில் பெண்களை ஈடுபடுத்துகின்ற ஓர் இயக்கமாகும்''. இப்போது சொல்லுங்கள்! யார் நாகரீகமானவர்கள்? யார் நாகரீகமற்றவர்கள்? என்று.