Friday, October 15, 2010

மவ்லவி P. ஜைனுல் ஆபிதீன்

மவ்லவி P. ஜைனுல் ஆபிதீன்



கேள்வி: ஆறு நோன்பில் இரண்டு தான் வைத்தேன். இன்னும் நான்கு நோன்பு வைக்கவில்லை. ‘களா’ செய்யலாமா?



P.S. ஜியாவுத்தீன், யாகாதிர் டிரேடிங் கம்பெனி, சங்கரன்பந்தல்.



பதில்: ஷவ்வால் மாதம் ஆறு நோன்பு நோற்பது சுன்னத். தவறவிட்டுவிட்டால் ‘களா’ செய்வதற்கு எந்த ஆதாரமும் ஹதீஸ்களில் காணப்படவில்லை.



கேள்வி: பால், வாசனைப் பொருட்கள், பெண்கள் இம்மூன்றும் எனக்கு மிகவும் விருப்பமானவை என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக ஒரு ஆலிம் பயான் செய்தார். அந்த ஹதீஸ் உண்மையானதுதானா? உண்மையானது என்றால் ‘பெண்கள்’ என்று கூறியிருப்பதின் உட்கருத்து என்ன?



M.M. ரசூல் மைதீன், M.O. பில்டிங், தொண்டி.



பதில்: நபி(ஸல்) அவர்கள் சொன்னது இப்படித்தான். “பெண்களும் வாசனைப் பொருட்களும் உலகப் பொருட்களில் எனக்கு விருப்பமுடையதாக்கப்பட்டுள்ளன; என் கண் குளிர்ச்சி தொழுகையில் தான் உண்டு.” அறிவிப்பவர்: அனஸ்(ரழி) நூல் :நஸயீ .



இங்கே பெண்கள் என்று நபி(ஸல்) அவர்கள் குறிப்பிட்டது தம் மனைவியரைப் பற்றித்தான். பொதுவாக எந்த ஆண் மகனுக்கும் மனைவியர் விருப்பமுடையவர்களாகத் தானிருப்பார்கள். இதில் தவறு எதுவும் கிடையாது. ஒளிவு மறைவில்லாமல் தனது நிலையை நபி(ஸல்) அவர்கள் வெளிப் படுத்துகின்றார்கள். மேலும் அந்த ஹதீஸின் வாசகத்தை மீண்டும் ஒருமுறை படித்துப் பாருங்கள். பெண்களும் வாசனைப் பொருட்களும் எனக்கு விருப்பமுடையன என்றாலும் தொழுகையில் தான் கண் குளிர்ச்சியும் மன மகிழ்ச்சியும் உண்டு. நான் விரும்புகின்ற மனைவியரை விடவும் இறைவனுடன் உரையாடும் தொழுகை எனக்கு விருப்பமானது என்பதை இலக்கிய நயத்துடன் சொல்லிக்காட்டுகின்றனர். ‘பால்’ என்று நபி(ஸல்) அவர்கள் சொன்னதாகக் காணமுடியவில்லை.



கேள்வி: தர்ஹாவுக்குச் செல்வதைத் தடுக்கும் நீங்கள் கஃபாவில் உண்ண ‘ஹஜருல் அஸ்வத்’தை முத்தமிடுகிறீர்களே! அது ஷிர்க் அல்லவா? என்று என் முஸ்லிம் நண்பரே கேட்கிறாரே! அவருக்கு என்ன பதில் சொல்வது?



அமீன், நிஹார் எலக்ட்ரிகல்ஸ், சங்கரன் பந்தல்.



பதில்: “நீ ஒரு கல் எனக்கு நிச்சயமாகத் தெரியும். உன்னால் நன்மை தீமையைக் கொண்டு வரவோ, தடுக்கவோ இயலாது என்பது எனக்குத் தெரியும். நபி(ஸல்) அவர்கள் உன்னை முத்தமிட்டதை நான் கண்டிராவிட்டால் உன்னை முத்தமிடமாட்டேன்” என்று உமர்(ரழி) அவர்கள் ‘ஹஜருல் அஸ்வத்’ கல்லைப் பார்த்துச் சொல்வது போல் நம்மவர்க்குப் புரிய வைத்தார்களே, அதை அவருக்கும் சொல்லுங்கள்! (ஆதார நூல் : புகாரி, முஸ்ரிம், அஹ்மத், தாரமி)



நபி(ஸல்) அவர்கள் ஏன் முத்தமிட்டார்கள் என்கிறீர்களா? “ஹஜருல் அஸ்வத்” சுவர்க்கத்திலிருந்து உலகுக்குக் கொண்டுவரப் பட்ட பொருளாகும்” என்று நபி(ஸல்) அவர்களே காரணத்தையும் கூறிவிட்டார்கள். (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரழி), நுால்: நஸயீ) இந்த உலகிலேயே இருக்கின்ற சுவர்க்கத்துப் பொருள் சுவர்க்கத்து மண் கொண்டு கட்டப்பட்டவை அல்ல.) கண் தானம் பற்றிய உங்கள் கேள்விக்கு இன்ஷா அல்லாஹ் அடுத்த இதழில்…



கேள்வி: நபி, ரசூல் வேறுபாடு என்ன? நபிமார்கள் எத்தனை? ரசூல்மார்கள் எத்தனை? K.நதீம் அஹ்மது, ஆம்பூர்.



பதில்: முந்திய சமுதாயத்துக்கு இருந்த சட்டங்களில் சில மாறுதல்களுடன் புதிய சட்டங்கள் கொடுக்கப்பட்டு அனுப்பப்பட்ட இறைதூதரை ரசூல் என்று கூறுகிறோம். ஒரு ரசூல் கொண்டு வந்த சட்டங்கள் மறக்கப்பட்டு விட்ட கால கட்டத்தில் அந்தச் சட்டங்களுக்குப் புத்துயிர் ஊட்ட இறைவனால் அனுப்பபட்டவர் நபி எனப்படுவார். எண்ணிக்கை பற்றி பல்வேறு கருத்துக்கள் காணப்படுகின்றன. அல்லாஹ் அனுப்பிய அனைவரையும் ஏற்றுக் கொள்வதாகப் பொதுப்படையாக நாம் நம்பிக்ைக கொள்ளவேண்டும். அல்லாஹ்வும், அவனது ரசூல் என்று கூறினார்களோ அவர்களை அவ்வாறே ஏற்க வேண்டும்.



கேள்வி: அஹ்மது கபீர்(ரஹ்) அவர்கள் ‘ரவ்லா’வில் நின்று கொண்டு “கையை நீட்டுங்கள்” என்று கூறியவுடன் நபி(ஸல்) அவர்கள் கையை நீட்டியதாகவும் அதனை அவர்கள் முத்தமிட்டதாகவும் அல்லாஹ் அவர்களுக்கு சுல்தானுல் ஆரிபீன் என்று பட்டம் வழங்கியதாகவும் கூறப்படுகிறதே! உண்மையா? M.M. முஹம்மது அபுபக்கர், தமாம்



பதில்: அப்படி ஒரு நிகழ்ச்சி நடந்திருக்குமானால், அதனைப் பல்லாயிரம் பேர் பார்த்திருப்பார்கள். உலக வரலாற்றில் அதிசய நிகழ்ச்சியாகப் பதிவு செய்யப்பட்டிருக்கும்! அஹ்மது கபீர்(ரஹ்) அவர்களை விடப் பல்லாயிரம் மடங்கு நபி(ஸல்) அவர்கள் மீது அன்பு வைத்திருந்த அருமை ஸஹாபாக்களுக்கு நபி(ஸல்) அவர்கள் நமக்குச் சொல்லித் தரவுமில்லை. ஸலாம் சொல்லும்படித்தான் சொல்லிச் சென்றனர். நபி(ஸல்) அவர்கள் காட்டித் தராத எதனையும் அஹ்மது கபீர் (ரஹ்) போன்றவர்கள் செய்ய மாட்டார்கள். நல்லவர்கள் பெயரால் இது போன்ற கதைகள் ஏராளம்! அல்லாஹ் ‘சுல்தானுல் ஆரிபின்’ என்று அஹ்மது கபீர் (ரஹ்) அவர்களுக்குப் பட்டம் வழங்கியதாகக் குர்ஆனில் எந்த ஒரு ஆயத்தையும் காண முடியவில்லை. ஹதீஸையும் காணோம். அல்லாஹ் சொல்வதை, குர்ஆன் மூலமும், நபி(ஸல்) அவர்கள் மூலமும் தான் நாம் அறிய முடியும்.



கேள்வி: ஆண், பெண் இருபாலரும் சுற்றுலா செல்லலாமா? நாம் இருட்டில் தொழலாமா? பெண்கள் கோழி அறுக்கலாமா? H. ஜாஹிர் ஹுஸைன் – திருக்களாச்சேரி.



பதில்: ‘ஹிஜாப்’ புக்குரிய சட்டப்படி செல்ல முடியுமென்றால் கணவன், சகோதரன், தந்தை போன்றவர்களுடன் செல்லலாம். அது பெரும்பாலும் சாத்தியமாகும் என்று சொல்ல முடியாது. விளக்கு எதுவும் இல்லாமல் இரவில் நபி(ஸல்) அவர்கள் தொழுதிருக்கிறார்கள். (அறிவிப்பவர் : ஆயிஷா(ரழி), நூல்கள் : புகாரி, முஸ்லிம்) எனவே இருட்டில் தொழலாம்.



ஒரு பெண்மணி காட்டில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தாள். ஒரு ஆடு மரணத் தறுவாயை நெருங்கியபோது, கூர்மையான ஒரு கல் மூலம் அந்த ஆட்டை அறுத்தாள். பிறகு நபி(ஸல்) அவர்களிடம் வந்து அதைச் சாப்பிடலாமா என்று கேட்டாள். நபி(ஸல்) அதனைச் சாப்பிடும்படி அனுமதி தந்தனர்.



அறிவிப்பவர்: இப்னு உமர்(ரழி) நூல் : புகாரி. எனவே கோழிஅறுப்பதில் தவறு இல்லை.



கேள்வி: சிலர் தொழுது முடிந்ததும், பள்ளியில் இரண்டு அடி முன்னால் நடந்து, பிறகு திரும்புகிறார்களே! ஹதீஸில் இப்படி செய்ய வேண்டும் என்று உள்ளதா? P.M. அப்துல் ஹக், சிட்டி பேன்ஸி. கோவை.



பதில்: நபி(ஸல்) அவர்களும் அவர்களின் அருமைத் தோழர்களும் செய்யாத பித்அத்தாகும்.



கேள்வி: பஜ்ர், மஃரிப், இஷா ஆகிய தொழுகைகளில் சப்தமிட்டும், லுஹர், அஸர் ஆகிய தொழுகைகளில் மெதுவாகவும் ஓதுகிறோம். அன்றைக்குப் பகல் பொழுதில் சப்தமிட்டு ஓதினால் காபிர்கள் தொல்லை ஏற்படும் என்று அஞ்சித்தான் அப்படிச் செய்ததாகச் சொல்கிறார்களே! அது உண்மையா? ஜும்ஆவில் சப்தமிட்டு ஓதுவது எதனால்? P.M. சய்யிது முக்கமது, கோவை



பதில்: பஜ்ர், மஃரிப், இஷா ஜும்ஆ ஆகிய தொழுகைகளில் சப்தமிட்டும், லுஹர், அஸர், தொழுகைகளில் மெதுவாகவும் ஓதி நபி(ஸல்) அவர்கள் தொழுதார்கள்; நாமும் தொழுகிறொம். கூறப்படும் காரணம் ஆதாரமற்றது.



கேள்வி: இமாம் குத்பா ஆரம்பிக்கும் முன் மோதினார் பாங்கு சொல்கிறாரே! அது கூடுமா?



பதில்: நபி(ஸல்) அவர்கள் மிம்பரில் அமர்ந்ததும் பள்ளி வாசலின் நுழைவாயில் நிலையில் நபி(ஸல்) அவர்களுக்கு நேராக பிலால்(ரழி) பாங்கு சொல்லி இருக்கிறார்கள். ஆதாரம்: அபூதாவூது, அறிவிப்பவர் : ஸாயிப் இப்னு யஸீத்(ரழி)



தற்பொது தமிழகத்தில் இமாமுக்கு மிக அருகில் நின்று பாங்கு கொல்வது போன்று சொன்னதாக எந்த ஆதாரமும் காண முடியவில்லை.



கேள்வி: பெருநாள் தொழுகையில் முதல் ரக்அத்தில் ஏழு தக்பீர், இரண்டாம் ரக்அத்தில் ஐந்து தக்பீர் என்று ஸலாதுன்னபீ என்ற நூலில் காணப்படுகின்றது. அதற்கு அனுமதி உண்டா?



பதில்: அப்படித்தான் செய்ய வேண்டும். மே இதழிலேயே நாம் அந்த ஹதீஸை வெளியிட்டுள்ளோம்.



கேள்வி: வித்ரு வாஜிபா? சுன்னத்தா?



பதில்: “ஒரு மனிதர் வித்ரை ‘வாஜிபு’ என்று கூறியதை கெட்ட உபாதா இப்னு சாமித்(ரழி) என்ற நபித் தோழர் அவர்கள் அவர் பொய் சொல்வதாகக் குறிப்பிட்டனர்.



(நஸயீ, இப்னுமாஜா, அபூதாவூது, மாலிக், அஹ்மத், இப்னு ஹப்பான், ஹாகிம், பைகஹீ)



“வித்ரு கட்டாயமானது அன்று. (அது நபி வழியாகும்) எனினும் அதை நீங்கள் விட்டு விடாதீர்கள்!” அலி(ரழி).



நூல்: தாரமீ, அஹ்மத்.



கேள்வி: கடல் பிராணிகள் சாப்பிடலாம் என்று ஆதாரத்துடன் எழுதினீர்கள்! அப்படியானால் திமிங்கலம், பாம்பு சாப்பிடலாமா?



பதில்: திமிங்கலம் சாப்பிடலாம் என்பதற்குத் தெளிவான ஆதாரம் உள்ளது. நாம் எடுத்துக்காட்டிய பொது விதியிலும் அது அடங்குகிறது. கடல் பாம்பு சாப்பிடுவதால் ஏதேனும் தீங்கு ஏற்படும் என்று தெரிந்தால் சாப்பிடலாகாது. நாம் முன்பே அதை தெளிவாக்கியுள்ளோம்.



(மேற்கூறிய நான்கு கேள்விகளையும் S.M. முகம்மது இத்ரீஸ், சங்கரன் பந்தல் என்பவர் கேட்டுள்ளார்.)



கேள்வி: “இகாமத் சொன்னதும் உடனே எழக்கூடாது; ஹய்ய அலஸ்ஸலாஹ் என்று கூறும்போதே எழ வேண்டும்” என்று எங்கள் இமாம் பயான் செய்தார்! சரிதானா?



பதில்: தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டால் என்னைக் காணும் வரை நீங்கள் எழ வேண்டாம்’ என்பது நபிமொழி. அறிவிப்பவர்: அபூகதாதா(ரழி), நூல்கள் : புகாரி, முஸ்லிம், அபூதாவுது, நஸயீ, திர்மிதீ, அஹ்மத், தாரமீ. இதிலிருந்து, இமாம் தொழ வைக்கின்ற இடத்திற்கு வந்துவிட்டால் நாம் எழ வேண்டும் என்பதை விளங்கலாம்.



கேள்வி: ஆயிஷா(ரழி) பெண் என்பதால் அவர் சொல்கின்ற 11ரக்அத் பற்றிய ஹதீஸை சேலம் அரபிக்கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் பகிரங்கமாக மறுக்கிறார். பெண்களாக இருந்தால் இரு சாட்சிகள் வேண்டும்; ஒரு பெண் சொல்வதை ஏற்க முடியாது என்கிறார். இதற்கு உங்கள் பதில் என்ன?



பதில்: அல்லாஹ் அவரை மன்னிப்பானாக! அன்னை ஆயிஷா(ரழி) அவர்கள் மூலமாக இஸ்லாத்தின் சுமார் பாதிச் சட்டங்கள் அறிவிக்கப்படுகின்றன. அனைத்தையும் அவர் மறுத்தாலும் மறுக்கலாம். மேலும் அவர் கூறுவதை ஒரு வாதத்திற்காக ஏற்றுக் கொண்டாலும், அன்னை ஆயிஷா(ரழி) அவர்களைத் தவிர இன்னும் ஜாபிர்(ரழி) உபை இப்னு கஃபு(ரழி) ஆகியோர் தராவீஹ் 8ரக்அத் என்று அறிவித்துள்ள ஹதீஸ்களை என்ன செய்யப் போகிறாராம்? நபி(ஸல்) அவர்களின் கூற்றைவிடத் தங்களின் மனோ இச்சை அவர்களுக்குப் பெரிதாக தோன்றுகிறது.



(மேற்கூறிய இரு கேள்விகளையும் கேட்டவர் H. நிஜாமுல்லாஹ், சேலம்-1.)



கேள்வி: அத்தஹியாயத்தில் ‘அல்லாஹும்மஃபீர்லி வலிவாலிதைய்ய’ என்ற துஆ நபி(ஸல்) அவர்கள் சொல்லித் தந்ததா?



K. சையிது முஹம்மது மதனி, தொண்டி.



பதில்: பல்வேறு துஆக்களை அத்தஹியாயத்தில் ஓதும்படி நபி(ஸல்) அவர்கள் கற்றுத் தந்துள்ளனர். அவற்றில் நீங்கள் குறிப்பிட்ட துஆவைக் காண முடியவில்லை. (அல்லாஹ் மிக அறிந்தவன்)



கேள்வி: ரமலான் மாதத்தில், மாதவிடாய் வருவதைத் தவிர்ப்பதற்குள்ள மாத்திரைகளைச் சாப்பிட்டு, நோன்பு வைக்க மார்க்கத்தில் உரிமை உண்டா? -ைமதீன் பாட்சா, கீழவாசல், தஞ்சாவூர்.



பதில்: மாதவிடாய் காரணமாகப் பெண்கள் விடுகின்ற நோன்பைப் பிறகு “களா” செய்ய நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளனர். அல்லாஹ் அவர்களுக்கு அதே கூலியை வழங்குவான். (இன்ஷா அல்லாஹ்) அவ்வாறிருக்க அல்லாஹ்வும், அவனது தூதரும் வழங்கிய சலுகைகளைப் பயன்படுத்துவதுதான் பெண்கள் செய்யவேண்டியது. அல்லாஹ்வுடைய சலுகைகளைப் புறக்கணித்து நன்மை என்ற பெயரால் செயற்கை முறைகளைக் கையாள்வது முறையற்றது. பல சந்தர்ப்பங்களில் அல்லாஹ்வின் சலுகைகளைப் பயன்படுத்தாதவர்களை நபி(ஸல்) அவர்கள் கண்டித்துள்ளனர்.



கேள்வி: நபி(ஸல்) அவர்கள் 40 வயதிலதான் நபியாக்கப்பட்டார்கள். எனவே 40 வயதில் தான் தாடியும் வைத்திருப்பார்கள். அதுபோல் இளைஞர்கள் தாடி வைக்காமல் இருந்துவிட்டு 40 வயதில் வைத்தால் போதுமல்லவா? தாடி வைப்பது சுன்னத் என்று யார் மூலமாகச் சொல்லப் படுகிறது?ஆதாரம் தேவை.



K.M. அப்துல் ஹமீது, திருக்களாச்சேரி,



பதில்: நபி(ஸல்) அவர்கள் 40 வயதில் தான் தொழுதார்கள் என்று சொல்லி நீங்களும் 40 வயதில் தான் தொழ ஆரம்பிப்பீர்களோ? நபி(ஸல்) 40 வயதில் நபியானாலும் அவர்களின் உத்தரவுகள் பருவமடைந்த ஒவ்வொருவரையும் கட்டுப்படுத்தும். தாடி பற்றிய விரிவான விளக்கம் அடுத்த இதழில் இடம்பெறும். -இன்ஷா அல்லாஹ்.



கேள்வி: பொது அனுமதி இல்லாத இடங்களில் ஜும்ஆ நடத்தக் கூடாது என்று பல மதரஸாக்கள் பத்வா வழங்குகின்றனவே! இது சரிதானா? அப்துல் ஜப்பார், பொன்மலை.



பதில்: சரியில்லை. ஜும்ஆ விஷயத்தில் தேயைற்ற பல நிபந்தனைகளை விதித்துள்ளது சரியானதன்று! அன்றைய முஸ்லிம்(?) மன்னர்கள், தங்கள் ஆட்சி ஜும்ஆ பிரசங்கத்தில் விமர்சிக்கப்படலாம் என்று அஞ்சி, தங்கள் அனுமதி இல்லாமல் ஜும்ஆ நடத்தக் கூடாது என்று சட்டமியற்றினர். அதற்கு அன்றைய அறிஞர்களில் பெரும்பான்மையோர் துணைபோயினர்.



எவர் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்புகின்றாரோ அவர் மீது ஜும்ஆ கடமையாகும். நோயாளி, பிரயாணி, பெண், சிறுவன், அடிமை ஆகியோர் நீங்கலாக மற்ற அனைவர் மீதும் ஜும்ஆ கடமையாகும் என்பது நபிமொழி.



அறிவிப்பவர் : ஜாபிர்(ரழி), நூல் : தாரகுத்னீ.



ஜும்ஆ ஜமாஅத்துடன் தொழுவது நால்வர் நீங்கலாக அனைவர் மீதும் கடமையாகும். 1) அடிமை. 2) பெண் 3) சிறுவர் 4)நோயாளி என்பதும் நபிமொழி. அறிவிப்பவர் : தாரிக் இப்னு ஷிஹாப்(ரழி) நூல்: அபூதாவூது.



ஜும்ஆவுக்கு ஆஜராவது கடமையாகும். அறிவிப்பவர் : அன்னை ஹப்ஸா(ரழி) நூல் : நஸயீ.



மேற்கூறிய நபிமொழிகள் உங்களுக்குப் போதுமானதாகும். மனிதர்களின் சொந்த அபிப்பிராயங்களுக்கு நீங்கள் செவி சாய்க்க வேண்டாம்.



கேள்வி: தனியாக ஜும்ஆ நடத்தலாமா? குத்பா எப்படி ஓத வேண்டும்? எத்தனை பேர் வேண்டும்?



K.A. ஹாஜா மைதீன், மத்திய சிறை, சேலம்.



பதில்: இதற்கு முன்னால் உள்ள பதிலைப் பாருங்கள்! ஜும்ஆ ஜமாஅத்துடன் தொழ வேண்டும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதை எழுதியிருக்கின்றோம். தனியாகத் தொழ முடியாது. உங்களுடன் இன்னொருவரைச் சேர்த்துக் கொண்டால் ஜமாஅத்தாகி விடும். அல்லாஹ்வைப் புகழ்ந்து நபி(ஸல்) அவர்கள் மீது ஸலவாத் கூறி இறையச்சத்தை ஏற்படுத்துகின்ற விதமாக, குர்ஆன் ஹதீஸ்களைக் கூறுங்கள்! கொஞ்சம் உயரமான இடத்தில் நின்று கொள்ளுங்கள். இரண்டு குத்பாவுக்கு இடையே சிறிது அமர்ந்து கொள்ளுங்கள். நீங்களே ஜும்ஆ நடத்திடலாம்.



கேள்வி: ஜும்ஆ தினத்தில் தொழுகை முடிந்து தான் வெளியூர் செல்ல வேண்டும்; அன்று காலையில் எந்த வெளியூருக்கும் செல்லக் கூடாது என்கிறார்களே! சரிதானா? பாங்கு முடிந்தபின்தான் வெளியே செல்ல வேண்டும் என்றும் சிலர் கூறுகின்றார்களே? சரிதானா?பாங்கு சொல்லப்படும் போது வெளியில் செல்லக் கூடாது என்றும், பாங்கு முடிந்தபின் தான் வெளியே செல்ல வேண்டும் என்றும் சிலர் கூறுகின்றார்கள். அப்படி மீறி நடந்தால் பல வியாதிகள் ஏற்படும் என்கிறார்களே? சரிதானா? K.M. அப்துல் ஹமீது, திருக்களாச்சேரி.



பதில்: ஜும்ஆ கட்டாயம் நிறைவேற்ற வேண்டிய கடமையாகும். சின்னசின்ன காரணங்களுக்காக அதை விட முடியாது. எனினும் நபி(ஸல்) அவர்களே, வெள்ளிக்கிழமையன்று அப்துல்லாஹ் இப்னு ரவாஹா(ரழி) என்பவரை ஒரு சிறு படையுடன் அனுப்பி வைத்துள்ளனர். அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரழி) நூல் : திர்மிதீ.



தவிர்க்க இயலாத காரணங்கள் இருந்தால் அன்று வெளியூர் செல்லத் தடை ஏதும் இல்லை. பாங்கு சொல்லப்படும்போது வெளியே செல்லக் கூடாது என்பதற்கு எவ்வித ஆதாரமும் இருந்ததாகத் தெரியவில்லை. மாறாக, பாங்கோசை கேட்டதும் தொழுகைக்காக அவன் புறப்பட்டுச் செல்வதுதான் முறை. வியாதி ஏற்படும் என்பதெல்லாம் நம்பக்கூடாதவை.



கேள்வி: நபி(ஸல்) அவர்களுக்கே சூனியம் செய்யப்பட்டதாக ஒரு ஆலிம் சொன்னாரே! அது உண்மையா? உண்மை என்றால் மன உறுதி உள்ளவர்களையும் அது பாதிக்குமா? M. சேகு இஸ்மாயில் , தொண்டி.



பதில்: நபி(ஸல்) அவர்கள் சூனியம் செய்யப்பட்டு அதனால் பாதிக்கப்பட்டார்கள் என்ற செய்தி புகாரி உட்பட பல ஹதீஸ் நூல்களில் காணப்படுகின்றது. அது உண்மைதான். நபி(ஸல்) அவர்களுக்கு இவ்வாறு ஏற்படுத்தியதன் மூலம் நாம் ஓர் உண்மையைப் புரிந்து கொள்ள முடிகின்றது. சூனியம் என்று சொல்லிக் கொண்டு கப்ருகளுக்கு செல்பவர்கள், “அங்கே சூனியம் நீக்கப்படும்” என்று கூறுவது பொய் என்பதை இதன் மூலம் புரியலாம். நபி(ஸல்) அவர்களே தனக்கு வைக்கப்பட்ட சூனியத்திலிருந்து தானே தப்பித்துக் கொள்ள முடியவில்லை எனும் போது மற்ற நல்லடியார்களால் என்ன செய்ய இயலும்? பலக், நாஸ் ஆகிய இரு சூராக்களும் போதிக்கின்ற அடிப்படையில் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடிக் கொண்டிருங்கள்! அது தான் நாம் செய்ய வேண்டியது.



கேள்வி: சில ஊர்களில் குர்பானி கொடுக்கும் போது நபி(ஸல்) அவர்களுக்கும் பங்குவைக்கின்றார்களே! இதற்கு அனுமதி உண்டா? சந்தா முகம்மது அய்யூப், பேராணம்பட்டு.



பதில்: அல்லாஹ்வும் அவனது தூதரும் இது போன்ற மூட நம்பிக்கைகளை நமக்குக் கற்றுத் தரவில்லை. குர்பானி எப்படிப் பங்கிடப்பட வேண்டும் என்பது பற்றிய கட்டுரையை இதே இதழில் காண்க.



கேள்வி: பள்ளிவாசல், மத்ரஸா போன்றவற்றை நிர்வகிப்பவர் எப்படிப்பட்ட தகுதிகள் கொண்டவராக இருக்க வேண்டும்? மதுக்கடை வைத்திருப்பவர்கள், சினிமா தியேட்டர்கள் உரிமையாளர்கள் போன்றவர்கள் பள்ளிவாசல் நிர்வாகிகளாக இருக்கலாமா? S. கமால் பாஷா, (ராமராஜபுரம்) துபை.



பதில்: பள்ளிவாசலை நிர்வாகம் செய்வோரின் தகுதிகளை அல்லாஹ் தெளிவாகக் கூறுகின்றான்.



“அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் நம்பிக்கை கொண்டு, தொழுகையை நிலைநாட்டி, ஜகாத்தையும் கொடுத்து, அல்லாஹ்வைத் தவிர வேறு எவருக்கும் அஞ்சாமல் இருப்பவர்கள் தான் அல்லாஹ்வின் பள்ளிவாசல்களை நிர்வாகம் செய்ய வேண்டும்.” (அல்குர்ஆன் 9:18)



இந்த ஒரு வசனம் உங்கள் கேள்வி அனைத்துக்கும் போதுமான பதிலாகும்.



கேள்வி: ஹஜ்ஜுக்குச் செல்வோரிடம் நபி(ஸல்) அவர்களுக்குச் சிலர் ஸலாம் சொல்லி அனுப்புகிறார்களே! ஸஹாபாக்கள் அப்படிச் சொல்லிவிட்டனரா? யு. ஸெய்யது முஸ்தபா, தங்கள் லெதர் ஸ்டோர்ஸ், கோவை.



பதில்: ஹஜ்ஜுக்குச் செல்பரிடம் தனக்காக அங்கே துஆ செய்யும்படி சொல்ல ஆதாரம் உண்டு! நபி(ஸல்) அவர்களே உமர்(ரழி) அவர்கள் உம்ராவுக்குச் சென்றபோது தனக்காக துஆ செய்யும்படி கேட்டுள்ளார்கள். நபி(ஸல்) அவர்களுக்கு ஸஹாபாக்கள் ஸலாம் சொல்லிவிட்டதாக எந்த ஆதாரத்தையும் நாம் காணவில்லை.



கேள்வி: இமாம் அபூஹனீபா(ரஹ்) அவர்கள் ஒரே இரவில் முழுக் குர்ஆனையும் ஓதித் தொழுவார்கள் என்று ஒரு ஆலிம் பயான் செய்தார்? அது உண்மையா? M. மூமினா, பொன்மலை.



பதில்: பச்சைப் பொய்! ஏனெனில் நபி(ஸல்) அவர்கள் “எவர் மூன்று நாட்களுக்குக் குறைவாக, குர்ஆனை ஓதி முடிக்கின்றாரோ அவர் குர்ஆனைப் புரிந்து கொள்ளவில்லை” என்று கூறியுள்ளனர். இமாம் அபூஹனீபா(ரஹ்) அவர்கள் குர்ஆனைப் புரிந்து கொள்ளாதவர் என்று நம்மால் எண்ணிப் பார்க்கக் கூட முடியவில்லை.



கேள்வி: கஃபாவை நோக்கி நாம் காலை நீட்டுவதில்லை. “நீங்கள் ஒரு குறிப்பிட்ட திசைக்கு மட்டும்தான் மரியாதை செய்கிறீர்கள்! அங்கு மட்டும் தான் இறைவன் இருக்கின்றானா?” என்று இந்து நண்பர் ஒருவர் கேட்கிறார். அதற்கு என்ன சொல்வது? H. ஜாஹிர் ஹுஸைன், திருக்களாச்சேரி.



பதில்: கஃபாவை நோக்கி காலை நீட்டக் கூடாது என்று எந்த தடையும் கிடையாது. நீங்கள் விரும்பினால் கஃபாவை நோக்கிக் காலை நீட்டலாம்.



கேள்வி: ஒரு பெண் இறந்த பின் அவருக்காக அவரது மகள் குர்ஆன் ஓதி வருகிறார். அந்தப் பெண் கனவில் தோன்றி “குர்ஆன் ஓதுவதை நிறுத்தி விடாதே! அதனால் எனக்கு கம்பளம் விரித்து, கெளரவம் அளிக்கப்படுகிறது” என்று கூறியதாக சொல்லப்படுகின்றதே! அது உண்மையா! சையத் அலி, சேலம்.



பதில்: கனவில் எதுவேண்டுமானாலும் நடக்கலாம். கனவுகள் மார்க்கத்தில் ஆதாரமாக எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது.



கேள்வி: சிராத்துல் முஸ்தஹீம் என்ற பாலம் பற்றி, கண் முடியை ஏழாகப் பிளந்த அளவு மெல்லியதாக இருக்கும் என்றும் அதன் கீழ் நரகம் இருக்கும் என்றும் சொல்கிறார்களே! அது உண்மையா? S. செல்வ முஹம்மது, தமாம், சவூதி அரேபியா.



பதில்: உங்களில் எவரும் அந்த நரகத்தைக் கடந்தே ஆக வேண்டும் என்பது திருக்குர்ஆனின் கருத்து. (மர்யம் 71) இதற்கு நபி(ஸல்) அவர்கள் பாலத்தைக் கடந்து செல்வது என்று விளக்கம் தந்துள்ளனர். (அறிவிப்பவர் : ஜாபிர்(ரழி), நூல்: முஸ்லிம்)



எவராக இருந்தாலும் “சிராத்” (பாலத்)தைக் கடந்தாக வேண்டும் என்பது குர்ஆன் ஹதீஸிலிருந்து தேளிவாகின்றது. ‘சிராதுல் முஸ்தகீம்’ என்று பெயர் அதற்கு இருப்பதாக நாம் அறிந்தவரை காண முடியவில்லை. முடியை விடவும் ெமல்லியதாக இருக்கும் என்பதற்கும் எவ்வித சஹீஹான ஹதீஸையும் நாம் காணவில்லை.



கேள்வி: பாங்கு சொல்லும் போது வீட்டின் முன் வாயிலைத் திறந்து பின்வாயிலை அடைகின்றனர். முன்வாயில் வழியாக ரஹ்மத்துடைய மலக்குகள் வருவார்களாம். பின்வாயில் திறந்திருந்தால் அந்த விழியே அவர்கள் சென்று விடுவார்களாம். அதற்காகத் தான் இந்த முன்னெச்சரிக்கை என்றும் கூறுகின்றனர். சரியா? பினன்து ஆயிஷா, கடையநல்லார்.



பதில்: இதற்கெல்லாம் ஆதாரம் எதுவும் கிடையாது. மலக்குகள் வர, போக இந்த வாசல்கள் எதுவும் தேவை இல்லை. கதவை இறுக்கமாக அடைத்து விட்டால் ‘மலக்குல் மவ்த்’ வரமாட்டார் என்று சொல்லாத வரை சரிதான்.



கேள்வி: நபி(ஸல்) அவர்களின் பெற்றோர்கள் முஸ்லிம்களா? மவ்லவி M. ஷிஹாபுத்தீன், கோட்டகுப்பம்.



பதில்: அபூபக்ருல் கதீப், அபுல் காசிம் சுஹைலீ, ஆபூ அப்துல்லாஹ் குர்துபீ ஆகியோர் “திரும்பவும் நபி(ஸல்) அவர்களின் பெற்றோர் உயிர் கொடுக்கப்பட்டு இஸ்லாத்தைத் தழுவினர்” என்பதாக அறிவித்துள்ளனர். அதன் அறிவிப்பாளர் வரிசையில் வருகின்ற பலர் ஹதீஸ்கலை வல்லுனர்களால் நிராகரிக்கப்பட்டவர்கள். இது திட்டமிட்டு இட்டுக் கட்டப்பட்ட ஹதீஸ் என்பதில் ஹதீஸ்கலை வல்லுனர்களில் எவரும் கருத்து வேறுபாடு கொள்ளவில்லை. இமாம் சுயூத்தி(ரஹ்) அவர்கள் மட்டும் இந்த இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களின் அடிப்படையில் இதை நிலை நிறுத்த முயன்றுள்ளார்கள். ஸஸீஹான ஹதீஸ்களைப் பார்ப்போம். “ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து என் தந்தை எங்கே இருக்கின்றார்?” என்று கேட்டபோது நபி(ஸல்) அவர்கள் நரகில் இருப்பதாக கூறினார்கள். அவர் திரும்பிச் செல்லும்போது அவரை அழைத்து ‘என் தந்தையும், உன் தந்தையும் நரகில்தான் உள்ளனர்’ என்று கூறினாாகள். (முஸ்லிம்)



“என் தாயின் கப்ரை ஜியாரத் செய்ய அல்லாஹ்விடம் அனுமதி வேண்டினேன். அல்லாஹ் அனுமதி அளித்தான். என் தாய்க்காப் பாவமன்னிப்புக் கோர என் இறைவனிடம் அனுமதி கோரினேன். என் இறைவன் மறுத்து விட்டான்” என்பதும் நபிமொழி. (முஸ்லிம்) இவற்றிலிருந்து நபி(ஸல்) அவர்களின் பெற்றோர்கள் முஸ்லிம்களல்லர் என்பதைத் தெளிவாகப் புரியலாம்.



கேள்வி: நபி(ஸல்) அவர்கள் காலத்தில் பெண்களை உயிருடன் புதைக்கக் காரணம் என்ன?



பதில்: எல்லா அரபிகளும் பெண்களை உயிருடன் புதைத்துக் கொண்டிருந்ததில்லை. அப்படி இருந்தால் பெண்களே உயிருடன் இருந்திருக்க மாட்டார்கள். ஒரு குறிப்பிட்ட பிரிவினர் மட்டும்தான் அவ்வாறு செய்துள்ளனர். அவர்களிடம் எத்தகைய சமுதாயக் கொடுமை நடந்ததோ தெரியவில்லை. “என்ன காரணத்திற்காகக் கொல்லப்பட்டாள் என்று உயிருடன் புதைக்கப்பட்ட பெண் குழந்தை விசரிக்கப்படுவாள்” (அல்குர்ஆன் 81:8) என்ற வசனத்திலிருந்து எவ்விதக் காரணமின்றி அறியாமையின் காரணமாகவே அவர்கள் செய்திருக்கக் கூடும் என்று அறிய முடிகின்றது. பல்வேறு சஹாபாக்கள் நபி(ஸல்) அவர்களிடம் வந்து தாங்கள் அறியாமைக் காலத்தில் தங்கள் பெண் குழந்தைகளைப் புதைத்து விட்டதாகச் சொல்லி வருந்தி இருக்கின்றனர். அவர்களெல்லாம் அறியாமையைத் தான் காரணமாகக் காட்டியுள்ளனர்.



பொதுவாகவே மனித இயல்பை உற்று நோக்கினால், பெரும்பாலும் ஆண் குழந்தையை விரும்பும் தன்மையிலும், பெண் குழந்தையை வெறுக்கும் தன்மையிலும் அமைந்துள்ளதைக் காண முடிகின்றது. இதற்கு அறிவு பூர்வமாக எந்தக் காரணத்தையும் சொல்ல முடியாது. அவ்வாறே அன்றைய அரபிகளில் சிலர் செய்து வந்ததற்கும் அறிவு பூர்வமான காரணங்களை வரையறுத்துச் சொல்ல முடியாது. என்ன காரணம் கூறப்பட்டாலும், அது மனிதர்களால் செய்யப்படும் அனுமானமாகத்தான் இருக்குமே தவிர சரியானதென்று உறுதி சொல்ல முடியாது.



கேள்வி: புராக் என்றால் எது? அதன் அமைப்பு எத்தகையது? அது வாத்து வடிவமுள்ளதா?



பதில்: புகாரி, முஸ்லிம் ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளபடி கோவேறுக் கழுதையை விட சற்று சிறியதாக, கழுதையைவிட சற்று பெரியதாக ‘புராக்’ இருந்ததாக நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளனர். அதன் அளவு மட்டும் தான் தெளிவாக்கப்பட்டுள்ளது. அது நீங்கள் கேட்டபடி வாத்து வடிவமுள்ளது என்றோ, மற்ற வடிவங்களில் உள்ளது என்றோ தெளிவாக்கப்படவில்லை. “புராக்” என்ற சொல் “பர்க்” என்ற சொல்லிலிருந்து பிறந்துள்ளது. மின்னல் வேக வாகனம் என்று அதற்குப் பொருள் வருகின்றது. மொத்தத்தில் அது விரைந்து செல்லக்கூடிய வாகனம் என்பது மட்டும் உறுதி.



கேள்வி: நபி(ஸல்) அவர்களின் மனைவியரில் கன்னியாக இருந்தது ஒருவர் என்று பழனிபாபாவும், இருவர் என்று அடியாரும் கூறுகின்றனர். எது சரி?



பதில்: கன்னிப் பெண்ணாக இருந்தது ஆயிஷா நாயகி மட்டும் தான். இந்த விஷயத்தில் பழனிபாபா சொல்வதே சரி.



கேள்வி: வீடுகளில் புறா, முயல் போன்றவை வளர்க்கலாமா? அதனால் முஸீபத் ஏற்படுமாமே!



பதில்: பாங்கோசை கேட்காத இடத்தில் ஒருவன் தனித்துத் தொழுதாலும் பாங்கு சொல்வதே சிறப்பு. “ஒரு மலை உச்சியில் ஆடு மேய்த்துக் கொண்டிருப்பவர் தொழுகைக்காக பாங்கு சொல்லி பின்னர் தொழுவதைப் பற்றி அல்லாஹ் மலக்குளிடம் புகழ்ந்துரைக்கிறான்” என்று “நஸயீ” யில் ஹதீஸ் உள்ளது. அதுபோல் இகாமத் சொல்வதற்கும் ஹதீஸ் உள்ளது. உங்களின் கடைசி கேள்விக்குத் தனியாக ஒரு கட்டுரை விரைவில் வெளிவரும்.



மேற்கூறிய ஐந்து கேள்விகளையும் தொண்டி A.M. பசீர் அலிகான் என்பவர் கேட்டுள்ளார்.



கேள்வி: “தப்பத் யதா” என்ற சூராவை அடிக்கடி ஓதக் கூடாது என்கிறார்களே! ஏன்? K.M.A. ஹிப்பத்துல்லா, தொண்டி.



பதில்: ஏனோ தெரியவில்லை. பரவலாக அப்படிப் பேசிக் கொள்கின்றனர். நாம் அறிந்தவரை அப்படி ஒரு ஹதீஸைக் காணவில்லை. குர்ஆனில் தனக்குத் தெரிந்ததை ஓதும்படிப் பொதுவாகத் தான் நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளனர்.



கேள்வி: பாங்கு சொல்லும் போது நாம் மல ஜலம் கழித்துக் கொண்டோ, பெருந்தொடக்காகவோ, மாதவிலக்காகவோ இருந்தால் பாங்கைக் கேட்கும் போது ஓத வேண்டிய திக்ருகளைச் செய்யலாமா? இந்த நேரங்களில் ஸலாம் கூறலாமா?



M.I. ஷம்ஸுத்தீன், காயல்பட்டினம்.



பதில்: மல ஜலம் கழிக்கும் போது எந்த திக்ருகளையும் சொல்லக் கூடாது. இரண்டு நபர்கள் மல ஜலம் கழிக்கும் போது பேசிக் கொண்டிருப்பதையே அல்லாஹ் வெறுக்கிறான் என்பது நபி மொழி. (அஹ்மத், அபூதாவூத், இப்னுமாஜா) உலகப் பேச்சுக்களையே பேசக்கூடாது என்னும் போது திக்ருகள் செய்யலாகாது என்பதை எவரும் உணரலாம். மேலும் மலஜலம் கழிக்கும்போது ஸலாம் சொல்லவும் கூடாது. யாரேனும் ஸலாம் சொன்னால் அந்த நேரத்தில் அதற்குப் பதில் சொல்லவும் கூடாது. “நபி(ஸல்) அவர்கள் சிறுநீர் கழிக்கும் போது ஒருவர் ஸலாம் கூறினார். நபி(ஸல்) அவர்கள் அதற்குப் பதில் கூறவில்லை” என்ற ஹதீஸ் இப்னு உமர்(ரழி) அவர்களால் அறிவிக்கப்பட்டு ‘நஸயீ’யில் இடம் பெற்றுள்ளது. பெருந்தொடக்காகவோ, மாதவிடாயாகவோ, இருப்பவர் தொழுவது நோன்பு நோற்பது, தவாபு செய்வது, குர்ஆன் ஒதுவதைத் தவிர மற்ற திக்ருகள் செய்யலாம்; ஸலாம் கூறலாம். ஏனெனில் நபி(ஸல்) அவர்கள் இவைகளுக்குத்தான் தடை விதித்துள்ளனர்.



கேள்வி: ரமலான் மாதத்தில் முழுகுர்ஆனையும் ஓதிக் கேட்டுத் தான் ஆக வேண்டுமா? 27-க்குப் பிறகு உள்ள மூன்று நாட்களில் ‘சபீனா’ என்ற பெயரில் முழு குர்ஆனையும் தராவீஹில் ஓதுகின்றனரே! இதற்கு ஆதாரம் உண்டா? பெருநாள் தொழுகை முடிந்ததும் கபரஸ்தானுக்குச் சென்று பாத்திஹா ஓத வேண்டும் என்கின்றனர். இதற்கும் ஆதாரம் உண்டா? மூன்று கேள்விகளுக்கும், விரிவாக விளக்கமாகப் பதில் தரும்படி கேட்கிறேன்.



A. அப்ஸர் பாஷா, B.Sc., மின்சார வாரியம், வெள்ளாளகுண்டம்.



பதில்: ஆதாரம் இல்லாதவைகளுக்கு விரிவாக எப்படிப் பதில் தர முடியும்? நீங்கள் குறிப்பிட்ட மூன்று விஷயங்களுக்கும் எவ்வித ஆதாரமும் நாம் காணவில்லை. யார் இப்படிச் செய்கிறார்களோ அவர்களிடம் தான் நீங்கள் ஆதாரம் கேட்க வேண்டும்.



கேள்வி: மஹ்ஷர் மைதானத்தில் இறைவன் மனிதர்களை அவர்களின் தாய், தந்தை இருவரில் யார் பெயரைச் சொல்லி அழைப்பான்?



பதில்: தாய், தந்தை போன்ற உறவுகளுக்கெல்லாம் அங்கே எந்த மதிப்பும் கிடையாது. அவரவர் பெயரை மட்டும் கூறித்தான் அழைப்பான். இதற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளன.



அல்லாஹ் (மறுமையில் ஈஸாவை நோக்கி) “ஈஸாவே” என்று அழைக்கப் போவதாக 5:116 வசனம் தெளிவாக்குகின்றது. மர்யமுடைய மகன் ஈஸாவே! என்று குறிப்பிடாமல், ஈஸாவே என்று மட்டும் தான் அழைக்கப்படும் என்பதைத் திருக்குர்ஆன் தெளிவாகச் சொல்கின்றது. ஈஸா(அலை) அவர்களுக்குத் தந்தை இல்லாததால் அவர்களை மட்டும் தான் அப்படி அழைப்பான் என்று கூற முடியாது. காரணம் நபி(ஸல்) அவர்களை அல்லாஹ் மறுமையில் “முஹம்மதே” என்று தான் அழைப்பான் என்பதாக நூற்றுக்கணக்கான ஹதீஸ்கள் உள்ளன. அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மதே! என்றோ, ஆமினாவின் மகன் முஹம்மதே என்றோ ஹதீஸ்களில் வரவில்லை.



கேள்வி: ஆட்டுக்கால், தலை இவற்றின் ரோமத்தை நீக்கிவிட்டு அந்தத் தோலைச் சாப்பிடலாமா? ஆட்டு எலும்புக்குள் உள்ள இரத்தத்தைச் சாப்பிடலாமா?



பதில்: ஆட்டு எலும்புக்குள் இருப்பது இரத்தம் அன்று! நீங்கள் கேட்டுள்ளவற்றைச் சாப்பிட எந்தத் தடையையும் நாம் ஹதீஸ்களில் காண முடியவில்லை.



கேள்வி: இறந்து போனவர்களை அடக்கம் செய்துவிட்டு இஷாவிலிருந்து சுபுஹ் வரை மூன்று நாட்கள் குர்ஆன் ஓதுகிறார்களே! நபி(ஸல்) அவர்கள், ஸஹாபாக்கள் காலத்தில் இப்படி நடந்துள்ளதா? எந்தக் காலத்தில் இது தோன்றியது?



பதில்: நபி(ஸல்) காலத்திலோ, ஸஹாபாக்கள் காலத்திலோ இப்படி நடக்கவில்லை. மக்களிடம் பணம் பறிக்கும் நோக்கத்தில் பிற்காலத்தில் நுழைக்கப்பட்ட பழக்கமே இது.



கேள்வி: தாய், தந்தை இவர்களின் கால்களில் விழலாமா? ஆதாரத்துடன் விளக்கம் தரவும்?



பதில்: கூடாது. நபி(ஸல்) அவர்களுக்கோ, அவர்களின் அன்பு தோழர்களுக்கோ அவர்களின் பிள்ளைகள் இவ்வாறு செய்ததில்லை.



“தன் சகோதரனையோ, நண்பனையோ , சந்திக்கும் போது அவனுக்காகக் குனிந்து மரியாதை செய்யலாமா? என்று ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டபோது,”கூடாது” என்று கூறினார். அறிவிப்பவர் : அனஸ்(ரழி) நூல் : திர்மிதி



குனிந்து செய்யும் மரியாதையைக் கூட ஒரு மனிதனுக்குச் செய்யக் கூடாது என்று நபி(ஸல்) அவர்கள் தடுத்துள்ளனர் என்னும் போது நீங்கள் கேட்டது நிச்சயமாகக் கூடாது!



கேள்வி: ஆதம்(அலை) அவர்களின் பாதம் இலங்கையில் ஒரு மலையில் இருப்பதாகக் கூறுகின்றார்களே! அது உண்மையா?



பதில்: அவ்வாறு கூறப்படுவதைத் தவிர வேறு ஆதாரம் எதுவும் கிடையாது. ஹிந்துக்கள் அதைச் சிவனடிபாதம் என்றும், புத்தர்கள் அதை புத்தரின் பாதம் என்றும், முஸ்லிம்கள் ஆதம்(அலை) அவர்கள் பாதம் என்றும் கூறிக் கொள்கின்றனர்.



கேள்வி: ‘முபஸ்மிலன், முஹம்திலன், முஸல்லியன், முஸல்லிமா’ என்று சில திருமணப் பத்திரிகைகளில் காணப்படுகின்றதே! அதன் பொருள் என்ன?



பதில்: பிஸ்மில்லாஹ், அல்ஹம்துலில்லாஹ், ஸலவாத் சொல்லித் துவக்குகிறோம் என்று பொருள். மேற்கூறிய கேள்விகளை கேட்டவர் A. அபுல்ஹஸன், (நாகூர்) துபை.

No comments:

Post a Comment


நீச்சலுடையை எறிந்து விட்டு நிகாபுக்கு ஏன் மாறினேன்?


முன்னால் அமெரிக்க நடிகை ''ஸாரா போக்கர்''
Niqab is the new symbol of woman's liberation.

[ நான் 'நிகாப்' அணிந்து கொண்ட செய்தி வெளியானதுதான் தாமதம் அமெரிக்காவில் ஏதோ பூகம்பமே வெடித்துவிட்டதுபோல் அங்குள்ள அரசியல்வாதிகளும், வாடிகனைச்சேர்ந்த மதகுருமார்களுடன், (போலியான) பெண் விடுதலைக்காக போராடக் கூடியவர்களும், உலக மனித உரிமைக்கழகமும் குய்யோ முறையோ என்று ஒப்பாரி வைக்க ஆரம்பித்தனர்.உலகெங்கிலுமுள்ள எல்லா ஊடகங்களிலும், விருப்பத்துடனோ, விருப்பமின்றியோ, 'ஸ்டைல்' என்ற பெயரில் மிகமிகக் குறைவாக, ஏறத்தாழ உடையே இல்லை என்று சொல்லுமளவுக்கு அணிவதற்கு பெண்கள் வற்புறுத்தப்படுகிறார்கள். ஹிஜாபை நான் அணிந்து கொண்டதால் எனக்குக் கிடைத்ததுபோன்று, ஒரு பெண்ணுக்குக் கிடைக்கும் நிம்மதி, மகிழ்ச்சி ஆகியவைப் பற்றி அறிந்து கொள்ள பெண்களுக்கு உரிமை இருக்கிறது.
எனக்குத்தெரிந்து ஏராளமான மேற்கத்திய பெண்கள் 'நிகாப்' அணிகிறார்கள். திருமணம் முடிக்காதவர்கள் கூட அதில் அடக்கம். ஒரு விஷயம் மிகத்தெளிவானது, 'நிகாப்' அணியும் பெண்ணுக்கு குடும்பத்தார்களின், சுற்றத்தார்களின், சமூகத்தின் ஆதரவு இருக்கிறதோ இல்லையோ அதைப்பற்றி அவர்கள் கவலைப்படமாட்டார்கள். ஏனெனில் அவர்கள் மனதில் ''அந்த உடை அல்லாஹ்வுக்கு பிடித்தமானது'' என்கின்ற நம்பிக்கை அழுத்தமாக பதிந்துவிட்டது.பெண்களின் புதிய சுதந்திரக் குறியீடு 'நிகாப்' தான். நீச்சலுடை அல்ல. - முன்னால் அமெரிக்க நடிகை ஸாரா போக்கர் ]
அமெரிக்காவின் இதயப்பகுதியில் பிறந்த அமெரிக்கப்பெண் நான். மற்றவர்களைப்போல் நானும் அந்தப் பெரிய நகரத்தின் கவர்ச்சிகளுக்கு ஆட்பட்டவளாகத் தான் வளர்ந்தேன். கவர்ச்சிக்கேந்திரமான ஃபுளோரிடாவுக்கு, தெற்கு மியாமி கடர்கரையின் நாகரீக வாழ்வைத்தேடி ஓடினேன்.
ஒரு சாதாரண மேற்கத்திய பெண் எப்படி இருப்பாளோ அப்படியேதான் நானும் இருந்தேன்; ஆம்! என் அழகின்மீது அதிக ஈடுபாடு கொண்டவளாக இருந்தேன். நான் வளர வளர, நாகரீகத்துக்கு அடிமையாகி விட்டேன் என்பதை நன்றாகவே புரிந்து கொண்டேன். எனது அழகான தோற்றமே என்னை பிணைக்கைதியாக்கி விட்டதை உணர்ந்தேன்.
நாகரீக வாழ்வை மேற்கொண்டால் வாழ்க்கையின் தேவைகளுக்கான பொருளாதாரத்துக்கு என்ன செய்வது? இரண்டுக்கும் இடைவெளி அதிகமானது. மதுபானங்கள் பரிமாறப்படும் கேளிக்கை பார்ட்டியை விட்டு விலகி தியானம், சமூக சேவை போன்றவற்றில் கவனத்தை திருப்பினேன். ஆனால் இவைகளால் பெரிய பலன் ஏதும் கிட்டவில்லை. அவ்வப்போது போட்டுக்கொள்ளும் வலி மாத்திரைகள் தற்காலிக நிவாரணத்தைத்தானே கொடுக்கும். அதற்கு மேல் எந்த பலனையும் கொடுக்காது அல்லாவா? என்னுடைய மன வலிக்கு அழுத்தமான தீர்வுதான் என்ன?
செப்டம்பர் 11, 2001. அப்பொழுதுதான் இஸ்லாத்தைப்பற்றி, இஸ்லாமிய கலச்சாரத்தைப்பற்றி, அதன் மதிப்பைப்பற்றி கேள்விப்படுகிறேன். அதுவரை இஸ்லாம் என்றாலே பெண்களை ''கூடாரத்துக்குள்'' அடைத்து வைத்து கொடுமைப்படுத்தும் மதம், மனைவியாக வருபவளை அடித்து உதைக்கும் மதம், பயங்கரவாத மதமாகத்தான் அறிந்து வைத்திருந்தேன்.
அப்பொழுதுதான் ஒருநாள் திருக்குர்ஆனை காணும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. ஒரே மாதிரியான மேற்கத்திய கருத்துக்களுக்கு மாற்றமான அதன் நடை என்னை மிகவும் கவர்ந்தது. இருப்பு, வாழ்க்கை, படைப்பு, படைத்தவனுக்கும் படைப்புகளுக்கும் உள்ள தொடர்பு ஆகியவற்றைப் பற்றிய விளக்கங்கள் என்னை மிகவும் கவர்ந்தன.
இதயத்தோடு ஒன்றிப்போகும் அதன் வார்ததைகளை விளக்க எவருமே தேவையில்லை எனும் அளவுக்கு என் ஆன்மாவோடு (அதன் வார்த்தைகள்) ஒன்றிப்போனது என்றுதான் சொல்வேன். இறுதியாக உண்மை எது என்பதை விளங்கிக்கொண்டேன். கடைவீதிக்குச்சென்று நீளமான அழகான 'கவுன்' ஒன்றை வாங்கி வந்தேன். முஸ்லீம் பெண்மணிகள் தலையை மறைக்க அணியும் துணியையும் கட்டிக்கொண்டு நான் தினசரி நடந்து செல்லும் வீதிகளில் நடக்க ஆரம்பித்தேன். அதே வீதியில்தான் நேற்றுவரை கவர்ச்சிகரமான குட்டையான (ஷார்ட்ஸ்) மற்றும் நீச்சலுடைகளுடன் நடந்து சென்றேன். வீதியில் அதே பழைய முகங்கள், அதே பழைய கடைகளைத்தான் பார்க்கிறேன். ஆனால் மிகப்பெரிய வேறுபாட்டை என் உள்ளம் காண்கிறது. ஆம் சுதந்திரப்பெண்மணியாக இப்போது என்னை நான் உணர்கிறேன். மற்றவர்கள் என் கவர்ச்சியான உடலமைப்பை ஆசையோடு நோக்கும் அந்த பார்வையிலிருந்து தப்பித்து நான் விடுதலை அடைந்து விட்டது போல், என்னை சுற்றியிருந்த விலங்குகள் அறுந்து விழுவது போல் உணர்ந்தேன்.
உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் கவர்ச்சியான என் உடலமைப்பை வேட்டையாடும் மனிதர்களிடமிருந்து எனக்கு முழு விடுதலை கிடைத்துவிட்டது என்று உள்ளம் குதூகளித்தது. அந்த நேரத்தில் என் மனம் அடைந்த நிம்மதியை எப்படி வர்ணிப்பது என்று எனக்கு சொல்லத் தெரியவில்லை.அதுமட்டுமின்றி எனது தோள்களில் இருந்து 'பெரிய சுமை' கீழிறக்கி வைக்கப்பட்டது போல் உணர்ந்தேன். முன்போல நான் ஷாப்பிங் செய்வதிலும், ஒப்பனை செய்து கொள்வதிலும், கூந்தலைச் சரி செய்து கொள்வதிலும் எனது நேரத்தையெல்லாம் வீணடிப்பது நின்றுபோனது. நான் முழு சுதந்திரம் அடைந்துவிட்டதாக என்று உணர்ந்தேன்.
''பெண்களை அவமதிக்கும் மதம்'' என்று சிலரால் வர்ணிக்கப்படுகின்ற இஸ்லாத்தை உளப்பூர்வமாக முழு மனதோடு ஏற்றுக்கொண்டேன். அவர்கள் சொல்லும் காரணமே, இஸ்லாத்தை எனக்கு இன்னும் நெறுக்கமாக்கியது. முஸ்லீமான ஒருவரை நான் திருமணமும் செய்து கொண்டேன். நான் ஹிஜாபை (Hijab) அணிந்து கொண்டாலும் நிகாபை (Niqab) அணிந்து கொள்ள வேண்டும் என்பதிலேயே மிகவும் ஆர்வமாக இருந்தேன்.
எனது முஸ்லீம் கணவரிடம் எனது எண்ணத்தை வெளிப்படுத்தியபோது 'ஹிஜாப்' அணிந்து கொள்வதுதான் பெண்களுக்கு கடமையே தவிர 'நிகாப்' அல்ல, என்றார். (ஹிஜாப் என்பது பெண்கள் முகம் மற்றும் கை கால்கள் தவிர உடம்பின் மற்ற பகுதிகளை மறைப்பது, 'நிகாப்' என்பது முகத்தையும் மறைப்பது கண்களைத்தவிர)ஒன்றரை ஆண்டுகளுக்குப்பிறகு என் கணவரிடம் மறுபடியும் எனது 'நிகாப்' இன் மீது உள்ள ஆசையை தெரிவித்தேன். இம்முறை நான் சொன்ன காரணத்தை அவரால் மட்டுமல்ல வேறு எவராலும் தட்ட முடியாது. ஆம்! என் பிரியமுள்ள கணவரிடம் சொன்னேன், "நான் 'நிகாப்' அணிவது அல்லாஹ்வுக்கு மிகவும் பிடித்தமானதாக இருக்கும், அத்துடன் அதிக அடக்கமாக இருப்பதனால் என் மன அமைதியையும் அது அதிகப்படுத்தும் என்று நம்புகின்றேன்'' என்றேன்.
இம்முறை என் இனிய கணவர் என் கருத்துக்கு மறுப்பேதும் சொல்லாமல் உடனே ஏற்றுக் கொண்டார். அதுமட்டுமின்றி என்னை உடனே கடை வீதிக்கு அழைத்துச்சென்று அதனை வாங்கியும் கொடுத்து விட்டார். அல்ஹம்துலில்லாஹ்.
நான் 'நிகாப்' அணிந்து கொண்ட செய்தி வெளியானதுதான் தாமதம் அமெரிக்காவில் ஏதோ பூகம்பமே வெடித்துவிட்டதுபோல் அங்குள்ள அரசியல்வாதிகளும், வாடிகனைச்சேர்ந்த மதகுருமார்களுடன், (போலியான) பெண் விடுதலைக்காக போராடக் கூடியவர்களும், உலக மனித உரிமைக்கழகமும் குய்யோ முறையோ என்று ஒப்பாரி வைக்க ஆரம்பித்தனர். அந்த ஒப்பாரியுடன் எகிப்து நாட்டு (!!!) அதிகாரிகளும் சேர்ந்து கொண்டு 'நிகாப்'' அணிவது பிற்போக்குத்தனம் என்று புலம்பித்தீர்த்தனர்.
பெண்களின் உரிமைக்காக போராடுவதில் நானும் சளைத்தவள் அல்ல. ஆனால் தற்போது ஒரு முஸ்லீம் பெண்மணியாக இருந்து பெண்களுக்கு கிடைக்க வேண்டிய உண்மையான உரிமைகளுக்காக போராடுகிறேன். குடும்பத்தில் பெண்களுக்கு உள்ள முக்கியத்துவம் பற்றிய கருத்துக்களை முன்னிறுத்துகிறேன். நல்ல முஸ்லிம்களாக இருப்பதற்கும், கணவன்மார்களுக்கு ஆதரவு கொடுத்து பொறுப்புகளை எடுத்துக் கொள்வதற்கும், குழந்தைகளை நல்லவர்களாக வளர்த்து மனித சமுதாயத்திற்கு வழிகாட்டக் கூடியவர்களாக ஆக்குவதற்கு முஸ்லிம் பெண்களுக்கு என்னால் ஆனதைக் கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறேன்.
நம்மைப் படைத்த அல்லாஹ்வை திருப்திப் படுத்துவதற்காக, 'நிகாப்' அல்லது 'ஹிஜாப்' அணியும் நமது உரிமைக்காகப் போராடும் அதே வேளையில்; ஹிஜாப், நிகாப் அணியாத பெண்களுக்கு, நாம் இதை ஏன் அணிய வேண்டும், ஏன் இது நமக்கு மிகவும் அவசியம் என்பதை எல்லாம் எடுத்துச் சொல்ல வேண்டும்.உலகெங்கிலுமுள்ள எல்லா ஊடகங்களிலும், விருப்பத்துடனோ, விருப்பமின்றியோ, 'ஸ்டைல்' என்ற பெயரில் மிகமிகக் குறைவாக, ஏறத்தாழ உடையே இல்லை என்று சொல்லுமளவுக்கு அணிவதற்கு பெண்கள் வற்புறுத்தப்படுகிறார்கள். ஹிஜாபை நான் அணிந்து கொண்டதால் எனக்குக் கிடைத்ததுபோன்று, ஒரு பெண்ணுக்குக் கிடைக்கும் நிம்மதி, மகிழ்ச்சி ஆகியவைப் பற்றி அறிந்து கொள்ள பெண்களுக்கு உரிமை இருக்கிறது. இதை நான் முஸ்லிமல்லாத முன்னாள் பெண்மணியாகவும் உரக்கச்சொல்வேன்.
எனக்குத்தெரிந்து ஏராளமான மேற்கத்திய பெண்கள் 'நிகாப்' அணிகிறார்கள். திருமணம் முடிக்காதவர்கள் கூட அதில் அடக்கம். ஒரு விஷயம் மிகத்தெளிவானது, 'நிகாப்' அணியும் பெண்ணுக்கு குடும்பத்தார்களின், சுற்றத்தார்களின், சமூகத்தின் ஆதரவு இருக்கிறதோ இல்லையோ அதைப்பற்றி அவர்கள் கவலைப்படமாட்டார்கள். ஏனெனில் அவர்கள் மனதில் ''அந்த உடை அல்லாஹ்வுக்கு பிடித்தமானது'' என்கின்ற நம்பிக்கை அழுத்தமாக பதிந்துவிட்டது. அடித்துச்சொல்வேன் பெண்களின் புதிய சுதந்திரக் குறியீடு 'நிகாப்' தான் என்று.
சௌத் பீச்சில் என் நீச்சலுடையையும், கவர்ச்சியான மேற்கத்திய வாழ்க்கை முறையையும் கழற்றி எறிந்து விட்டு, என்னைப் படைத்தவனோடு நிம்மதியாக இருப்பதிலும் சுயமரியாதையுடனும் கண்ணியத்துடனும் வாழும் ஒரு பெண்ணாக என்னைச் சுற்றியிருப்பவர்களோடு வாழ்வதில்தான் எனக்கு அளவிலா மகிழ்ச்சியும் நிம்மதியும் இருக்கிறது. அதனால்தான் நான் 'நிகாப்' அணிவதைத் தேர்ந்தெடுத்துக் கொண்டேன். அதை அணியும் உரிமைக்காக நான் உயிரை விடவும் தயார் தான். நேற்றுவரை நீச்சலுடையை பெண்ணினத்தின் சுதந்திரக் குறியீடாக நினைத்திருந்தேன். ஆனால் அது முற்றிலும் தவறு. பெண் விடுதலையின் குறியீடு 'நிகாப்'தான். அது கொடுக்கும் கண்ணியத்தை விட்டுவிட்டு, அசிங்கமான மேற்கத்திய வாழ்க்கை முறையைத் தேர்வு செய்யும் பெண்களே, ''நீங்கள் எதை இழந்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை அறிய மாட்டீர்கள்.''
தமிழ் மொழியாக்கம் . எம்.ஏ. முஹம்மது அலீ,
adm. www.nidur.info
[ Sara Bokker is a former actress, model, fitness instructor, and activist. Currently, Sara is director of communications at The March for Justice, a cofounder of The Global Sisters Network, and producer of the infamous Shock & Awe Galleryய©.]
For read in English please click below
:
http://www.nidur.info/en/index.php?option=com_content&view=article&id=153:why-i-shed-bikini-for-niqab-former-actress-sara-bokker-&catid=20:stories-of-new-muslims&Itemid=24

அல்லாஹ்வின் திருமறையும் அண்ணலாரின் வழிமுறையும்


பிரிட்டனைச் சேர்ந்த பத்திரிகை நிருபர் யுவான் ரிட்லியைக் கவர்ந்த இஸ்லாம்


[''நான் தாலிபான்களால் சிறை பிடிக்கப்படும் வரை புர்கா அணிந்த பெண்களை மிகவும் ஒடுக்கப்பட்ட படைப்பினமாகவே கருதி வந்தேன். செப்டம்பர் 2001-ல் அமெரிக்காவில் பயங்கரவாத தாக்குதல் நடைபெற்று சற்றே 15 நாட்களுக்குப் பிறகு ஒரு நீல நிற புர்காவில் என்னை மறைத்துக்கொண்டு ஆப்கானிஸ்தான் எல்லையைக் கடந்து உள்ளே புகுந்தேன்.
தாலிபான்களின் கொடுமையான ஆட்சியில் சராசரி மனித வாழ்க்கையைப் பற்றி நான் பணியாற்றிய பத்திரிகைக்கு செய்திகள் திரட்டும் நான் கண்டுபிடிக்கப்பட்டு, கைது செய்யப்பட்டபோது என்னைக் கைது செய்தவர்கள் முகத்தில் துப்பினேன், ஆக்ரோஷமாக எதிர்த்தேன்.... எனது சொந்த ஊரான லண்டன் திரும்பிய பிறகு நான் தாலிபான்களுக்கு அளித்த வாக்குறுதியைக் காப்பாற்றுவதற்காக இஸ்லாத்தைப் பற்றி அறியத் துவங்கினேன்.
நான் படிக்கப்படிக்க இனம்புரியாத ஆச்சரியம் என்னை ஆட்கொள்ளத் துவங்கியது. பெண்ணின விடுதலையை ஒங்கி ஒலிக்கும் திருக்குர்ஆனின் நல்லுபதேசங்களைக் கண்டு திகைத்துப் போனேன்.
மேற்கத்திய பெண் விடுதலைப் போராளிகள் 1970-களில் போராடிப் பெற்ற அனைத்துப் பெண்ணிய உரிமைகளும் 1400 வருடங்களுக்கு முன்னரே முஸ்லிம் பெண்மணிகளுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இஸ்லாமியப் பெண்கள் ஆன்மிகத்திலும், கல்வியிலும், சொத்துரிமையிலும் ஆண்களுக்கு நிகரான உரிமைப் பெற்றுத் திகழ்கின்றனர். ]
அமெரிக்க, ஐரோப்பிய, இஸ்ரேலிய ஏகாதிபத்திய சக்திகள் எவ்வளவுதான் இஸ்லாத்திற்கு எதிராக அவதூறான பிரச்சாரங்களை மேற்க்கொண்டாலும் இஸ்லாத்தின் அன்பு மற்றும் சமாதானத்தின் நற்செய்தி மக்களால் அடையாளம் காணப்படும் ஒரு நாள் வந்தே தீரும் என பிரபல பத்திரிகையாளரும், சர்வதேச மனித உரிமைப் போராளியுமான யுவானி ரிட்லி கூறினார்.
கேரள மாநிலம் குற்றிப்புரம் ஸஃபா நகரில் ஜமாஅத்தே இஸ்லாமியின் பெண்கள் மாநாட்டை துவக்கி வைக்கவிருந்தார் அவர். ஆனால் லண்டனில் இந்திய தூதரகம் அவருக்கு இந்தியா செல்ல விசா மறுத்ததால் வீடியோ கான்ஃப்ரன்சிங் மூலமாக மாநாட்டை துவக்கி வைத்து உரையாற்றினார். "அமெரிக்க ஏகாதிபத்தியம் இஸ்லாத்திற்கெதிராக அவதூறான பிரச்சாரங்களை நடத்திக் கொண்டிருக்கிறது. அவர்களை ஆக்கிரமிப்புகளையும் அருவருக்கத்தக்க நடவடிக்கைகளையும் மறைப்பதற்காகத்தான் இந்தப்பிரச்சாரத்தை மேற்க்கொள்கிறார்கள்.ஃபலஸ்தீனில் துயரத்தில் ஆழ்ந்துள்ள மக்களுக்கு ஆதரவாக பேசுகிறேன் என்பதற்காகவே என்னை ஏகாதிபத்திய சக்திகள் நோட்டமிடுகின்றன. ஃபலஸ்தீனிலும், ஆஃப்கானிலும், ஈராக்கிலும் கொடூரமான தாக்குதல்கள் மூலமும், கூட்டுக்கொலைகள் மூலமும் குண்டுகளை வீசுவதன் மூலமும் முஸ்லிம்களின் மீது நிரந்தரமாக ஏகாதிபத்திய சக்திகள் போரிட்டு வருகின்றன.
இஸ்லாம் பெண்களுக்கெதிரான மார்க்கம் என்ற மேற்கத்திய வாதிகளின் பொய் பிரச்சாரம் வெற்றிப்பெறாது. ஆஃப்கானிஸ்தானில் தாலிபான்களின் வசம் சிக்கிய என்னை இஸ்லாத்தை நோக்கி திருப்பியது அவர்களுடைய கண்ணியமான நடவடிக்கைகளும் சுத்தமான நிலைபாடுகளும் தான். இஸ்லாம் பெண்களுக்கெதிரான மார்க்கம் என்றால் தாலிபான் போராளிகள் என்னிடம் ஒருபோது கண்ணியமாக நடந்துக் கொண்டிருக்க மாட்டார்கள். மேலும் எனது வாழ்வில் அது திருப்புமுனையும் ஆகியிருக்காது.
ஏகாதிபத்தியமும், சியோனிஷமுதான் இன்று உலகம் சந்திக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தல்கள். இவ்விரண்டு சக்திகளும் இஸ்லாத்திற்கு மட்டுமல்ல விரோதிகள் மனிதர்கள் அனைவருக்குமே விரோதிகள் தான். முஸ்லிம் பெண்கள் காலக்கட்டத்தின் சவால்களை புரிந்துக்கொண்டு களமிறங்கவேண்டும்." இவ்வாறு ரிட்லி உரையாற்றினார்
தி வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கையில் பிரிட்டனைச் சேர்ந்த சகோதரி யுவான் ரிட்லி எழுதிய கட்டுரை இது. இனி அவரது சொந்த நடையில்....''நான் தாலிபான்களால் சிறை பிடிக்கப்படும் வரை புர்கா அணிந்த பெண்களை மிகவும் ஒடுக்கப்பட்ட படைப்பினமாகவே கருதி வந்தேன்.
செப்டம்பர் 2001-ல் அமெரிக்காவில் பயங்கரவாத தாக்குதல் நடைபெற்று சற்றே 15 நாட்களுக்குப் பிறகு ஒரு நீல நிற புர்காவில் என்னை மறைத்துக்கொண்டு ஆப்கானிஸ்தான் எல்லையைக் கடந்து உள்ளே புகுந்தேன்.
தாலிபான்களின் கொடுமையான ஆட்சியில் சராசரி மனித வாழ்க்கையைப் பற்றி நான் பணியாற்றிய பத்திரிகைக்கு செய்திகள் திரட்டுவது என் ரகசிய திட்டம். ஆனால் நான் கண்டுபிடிக்கப்பட்டு, கைது செய்யப்பட்டு, பத்து நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டேன்.
என்னைக் கைது செய்தவர்கள் முகத்தில் துப்பினேன், ஆக்ரோஷமாக எதிர்த்தேன். அதனால் அவர்கள் என்னை ஒரு ''கெட்ட பெண்'' என்று அழைத்தார்கள். ஆனால் நான் குர்ஆனைப் படிப்பதாகவும், இஸ்லாத்தைப் பற்றி தெரிந்து கொள்ளப் போவதாகவும் வாக்களித்த பிறகு என்னை விடுதலை செய்து விட்டார்கள். (உண்மையைச் சொல்லப் போனால் நான் விடுதலையான போது யார் மகிழ்ந்தார்கள் என்று எனக்கு சொல்லத் தெரியவில்லை'' நானா? அல்லது அவர்களா?)
எனது சொந்த ஊரான லண்டன் திரும்பிய பிறகு நான் தாலிபான்களுக்கு அளித்த வாக்குறுதியைக் காப்பாற்றுவதற்காக இஸ்லாத்தைப் பற்றி அறியத் துவங்கினேன்.
நான் படிக்கப்படிக்க இனம்புரியாத ஆச்சரியம் என்னை ஆட்கொள்ளத் துவங்கியது. குர்ஆனில் நான் மனைவிமார்களை எப்படி அடிப்பது என்றும், மகள்களை எப்படி அடக்கி ஒடுக்கி துன்புறுத்துவது என்றும் ஆண்களுக்கு உபதேசிக்கும் வசனங்கள் இருக்கும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் பெண்ணின விடுதலையை ஒங்கி ஒலிக்கும் திருக்குர்ஆனின் நல்லுபதேசங்களைக் கண்டு திகைத்துப் போனேன்.
எனது கைதுக்குப் பிறகு இரண்டரை வருடங்கள் கழித்து நான் இஸ்லாமை எனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டேன். எனது இந்த மாற்றம் எனது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் திகைப்பு, ஏமாற்றம், உற்சாகம் போன்ற உணர்வுகளின் கலவையான நிலைமையை உண்டு பண்ணியது.
இன்று! மத நல்லிணக்கத்திற்கு இடையூறாக இருக்கிறது என்று முஸ்லிம் பெண்களின் முகத்திரையைப் பற்றி பிரிட்டனின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜாக் ஸ்டிரா விமர்சனம் செய்திருப்பது என்னை ஏமாற்றமும், அச்சமும் கொள்ள வைக்கிறது. இவருக்கு பிரிட்டனின் பிரதமர் டோனி பிளேர், எழுத்தாளர் சல்மான் ருஷ்டி மற்றும் இத்தாலியப் பிரதமர் ரெமானோ ப்ரோடி ஆகியோர் வேறு ஆதரவளிக்கின்றனர் என்பதுதான் வேடிக்கையான வேதனை.புர்காவுக்கு வெளியேயும், உள்ளேயும் இரண்டு மாறுபட்ட வாழ்க்கை முறையை உணர்ந்த ஒரு பெண் என்ற அடிப்படையில் சொல்கிறேன்: இஸ்லாமிய உலகில் வாழ்கின்ற முஸ்லிம் பெண்களின் அடக்குமுறையைப் பற்றி ஆரவாரமாக கவலைப்படுகிற கிட்டத்தட்ட அனைத்து மேற்கத்திய அரசியல்வாதிகளும் சரி, பத்திரிக்கையாளர்களும் சரி இஸ்லாத்தைப் பற்றியும், அது பெண்களுக்கு வழங்கியுள்ள உரிமைகள் பற்றியும் ஒன்றுமே தெரியாதவர்களாகத்தான் இருக்கின்றார்கள்.
ஹிஜாபைப் பற்றியும், பருவமடையாத மணப்பெண்கள் பற்றியும், பெண்கள் கத்னாவைப் பற்றியும், கௌரவக் கொலைகளைப் பற்றியும், கட்டாயத் திருமணங்கள் பற்றியும் இவர்கள் சகட்டுமேனிக்கு எழுதியும் பேசியும் வருகிறார்கள். இந்த வன்கொடுமைகள் அத்தனைக்கும் இவர்கள் இஸ்லாத்தைக் குற்றவாளி ஆக்குகின்றார்கள். இவர்களது இந்த வெறித்தனமானப் போக்கு இவர்களது அறியாமையைத்தான் பறைசாற்றுகின்றது.
மேற்கண்ட வெறுக்கத்தக்க விஷயங்கள் கலாச்சாரம் மற்றும் சமூக சடங்கு சம்பிரதாயங்களுக்கு உட்பட்டவை. இவற்றுக்கும் இஸ்லாத்திற்கும் எள்ளளவும் சம்பந்தம் இல்லை. திருக்குர்ஆனை கருத்தூன்றிப் படித்தால் ஒர் உண்மை விளங்கும்.
மேற்கத்திய பெண் விடுதலைப் போராளிகள் 1970-களில் போராடிப் பெற்ற அனைத்துப் பெண்ணிய உரிமைகளும் 1400 வருடங்களுக்கு முன்னரே முஸ்லிம் பெண்மணிகளுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
இஸ்லாமியப் பெண்கள் ஆன்மிகத்திலும், கல்வியிலும், சொத்துரிமையிலும் ஆண்களுக்கு நிகரான உரிமைப் பெற்றுத் திகழ்கின்றனர். ஒரு குழந்தையைப் பெற்றெடுத்து அதனை சரிவர வளர்க்கும் பெண்மணி பெரும் பாக்கியம் நிறைந்தவளாகக் கருதப் படுகின்றாள்.
இவ்வாறு இஸ்லாம் பெண்ணினத்திற்குத் தேவையான எல்லாவற்றையும் வழங்கி மேன்மைப்படுத்தி இருக்கும்போது, இந்த மேற்கத்திய ஆண்கள் ஏன் முஸ்லிம் பெண்களின் ஆடை விஷயத்தில் மட்டும் முதலைக்கண்ணீர் வடிக்கின்றனர்?
பிரிட்டிஷ் அரசின் அமைச்சர்களான கோர்டன் பிரவுன் மற்றும் ஜான் ரீட் ஆகியோர் முஸ்லிம் பெண்களின் முகத்திரையைப் பற்றி தரக்குறைவாக விமர்சித்துள்ளனர்.
இதில் வேடிக்கை என்னவென்றால், இவர்கள் இருவருமே ஆண்கள் கூட பாவாடை அணியும் ஸ்காட்லாந்து நாட்டு எல்லையோரத்தைச் சேர்ந்தவர்கள்.
நான் இஸ்லாத்திற்கு மாறி முக்காடு அணியத் துவங்கியபோது மிகப்பெரிய அளவில் விளைவுகளை எதிர்கொள்ள நேரிட்டது. நான் செய்ததெல்லாம் எனது தலையையும், தலைமுடியையும் மூடிக் கொண்டேன், அவ்வளவுதான். ஆனால் உடனே நான் இரண்டாந்தர குடிமகளாக்கப்பட்டேன்.
ஏதோ கொஞ்சம் இஸ்லாமிய எதிர்ப்புணர்வுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்று நினைத்திருந்தேன். ஆனால் அனைத்துத் தரப்பு மக்களிடமிருந்தும் இந்தளவிற்கு இனவெறியை நான் எதிர்பார்க்கவில்லை. ''வாடகைக்கு'' என்ற வாசகத்தடன் என்னைக் கடந்து சென்று நின்ற டாக்ஸியிலிருந்து ஒரு வெள்ளைக்காரப் பெண் இறங்கினாள்.
நான் அந்த டாக்ஸியில் ஏறுவதற்காக எத்தனித்தேன். ஆனால் என்னைக் கூர்ந்து கவனித்த டிரைவர் என்னை நிராகரித்து விட்டு விருட்டென்று காரை ஒட்டிச் சென்று விட்டான்.
மற்றொரு டாக்ஸி டிரைவரோ என்னிடம் ''பின் ஸீட்டில் வெடிகுண்டு எதையும் வைத்து விட்டுப் போய்விடாதே'' என்றும் ''பின்லேடன் எங்கே ஒளிந்து இருக்கிறான் தெரியுமா?'' என்றும் கமெண்ட் அடித்தான்.
ஆம்! பெண்கள் கண்ணியமாக உடை உடுத்த வேண்டும் என்பது ஒர் இஸ்லாமியக் கடமை. நான் அறிந்தவரை பெரும்பான்மையான முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் - அதாவது முகம் மட்டும் வெளியில் தெரியும் வண்ணம் உடை அணிகின்றனர். வெகு சிலரே முகத்தையும் மறைக்கும் நிகாப் எனும் முகத்திரை அணிந்து வெளியில் வருகின்றனர். என்னைப் பொறுத்தவரை, ஒரு முஸ்லிம் பெண் கண்ணியத்திற்காக ஹிஜாப் அணிகிறாள், அவளுக்கு அந்த கண்ணியத்தைக் கொடுத்து விட்டுப் போங்களேன்! வால் ஸ்டிரீட்டில் இயங்குகின்ற ஒரு வங்கியின் அதிகாரி தன்னை ஒரு சீரியஸான பிஸினஸ்மேனாக பிறர் கருத வேண்டும் என்பதற்காகத்தானே கோட் சூட் அணிகிறார்! - அதுபோலத்தான் இதுவும்.
நான் ஒரு நேரத்தில் மேற்கத்திய பெண்ணிய வாதியாகத்தான் இருந்தேன். ஆனால் பிறகுதான் உணர்ந்தேன்.. முஸ்லிம் பெண்ணியவாதிகள் பிறரைவிட மிகத் தீவிரமாக பெண் விடுதலைக்காக போராடக் கூடியவர்கள் என்று! அநாகரீகமான அழகிப் போட்டிகளை நாம் வெறுக்கின்றோம். ஆனால் நமக்கு எரிச்சலூட்டும் விதமாக 2003-ல் நடந்த பிரபஞ்ச அழகிப் போட்டியில் ஆப்கானிஸ்தானிய பெண் ஒருத்தி நீச்சல் உடையில் பங்கேற்ற நிகழ்ச்சியை அந்தப் போட்டியின் நடுவர்கள் இஸ்லாமியப் பெண்களின் விடுதலைக்கான ஆரம்பம் இது என்று வர்ணித்தனர்.
ஹிஜாப் அணிவது சமூக உறவைப் பேணுவதற்கு மிகவும் தடையாக இருக்கிறது என்று இத்தாலியப் பிரதமர் ப்ரோடி கூறியிருக்கிறார். இந்த முட்டாள்தனமான வாதத்தைக் கேட்கும்போது எனக்கு அழுவதா அல்லது சிரிப்பதா? என்று தெரியவில்லை.
இவர் சொல்வது சரியென்றால் இன்றைய விஞ்ஞான யுகத்தில் நாம் அன்றாடம் உபயோகிக்கும் செல்போன், சாதா போன், பேக்ஸ், எஸ்.எம். எஸ். தகவல்கள் மற்றும் ரேடியோ ஆகியவை அர்த்தமற்றவையாகி விடும். இந்த உபகரணங்களை தொடர்பில் இருப்பவர்களின் முகத்தைப் பார்த்துக் கொண்டா நாம் உபயோகிக்கிறோம்?
இஸ்லாத்தின் கீழ் நான் மதிக்கப்படுகின்றேன். எனக்குத் திருமணம் ஆகியிருந்தாலும், ஆகாவிட்டாலும் எனக்கு கல்வி கற்க உரிமை உண்டு என்றும், கல்வியைத் தேடிப்பெற வேண்டியது எனது கடமை என்றும் இஸ்லாம் எனக்கு சொல்லித் தருகின்றது.. இஸ்லாத்தின் இந்த கட்டமைப்பிலும் பெண்களாகிய நாங்கள் ஆண்களுக்கு சமைப்பது, துவைப்பது, சுத்தம் செய்வது போன்ற சேவகங்கள் செய்துதர வேண்டும் என்று கட்டளையிடப்படவே இல்லை.
இன்னும் சொல்லப் போனால், பெண்களுக்கெதிரான வன்கொடுமைகள் ஒரு குறிப்பிட்ட மதத்தையோ, இனத்தையோ அல்லது தேசத்தையோ சார்ந்தது அல்ல. இது மதம், மொழி, இனம், கலாச்சாரம் ஆகிய அனைத்தையும் கடந்து பெண்ணினத்தை பாதித்து வரும் ஒர் உலகளாவிய பிரச்சினையாகும்.
உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால்ஸ. National Domestic Violence Survey நடத்திய ஆய்வில் அமெரிக்காவில் 12 மாத கால அளவில் 4 மில்லியன் பெண்கள் ஆண்களது கொடுமைக்குள்ளாகி வருகின்றனர். மேலும் ஒரு நாளில் மட்டும் 3 பெண்கள் தங்களது காதலன் அல்லது கணவனால் கொல்லப்பட்டு வருகின்றனர்.
ஆண்கள் தங்கள் மனைவிமார்களை கைநீட்டி அடிக்க அனுமதிக்கிறது இஸ்லாம் என்ற கூற்றை எடுத்துக் கொண்டால் - இது முற்றிலும் தவறாகப் புரிந்து கொள்ளப் பட்டுள்ளது. இஸ்லாத்தை விமர்சிப்பவர்கள் அடிக்கடி குர்ஆன் வசனங்களையும், நபிமொழி குறிப்புகளையும் மேற்கோள் காட்டுகின்றனர்.
ஆனால் அந்த வசனங்கள் மற்றும் நபிமொழிகளின் உள்ளர்த்தங்களை தவறாக விளங்கிக் கொள்வதால் எற்படும் விளைவுதான் இது. ஒர் ஆண் தனது மனைவியை அடிக்கத்தான் வேண்டுமாயின், அவளது உடலில் எவ்விதக் காயமோ அடையாளமோ இல்லாமல்தான் அடிக்க வேண்டும் என்று குர்ஆன் சொல்கிறது. இது குர்ஆனுக்கே உரிய தனித்துவமிக்க சொல்லாளுமையாகும். இதன் உள்ளர்த்தத்தை நெருக்கமாகச் சொல்லப் போனால்... முட்டாளே! உனது மனைவியை அடிக்காதே!! என்பதுதான்.
இதற்கு மேலும் இஸ்லாம் பெண்களை அடிமைப்படுத்தி வைக்கிறது என்று வாதிடுவோர்களின் கவனத்திற்கு ஒன்றைச் சொல்கிறேன்:
அமெரிக்காவின் ஆன்மீகக் குரு ரெவரண்ட் பேட் ராபெர்ட்ஸன் 1992-ல் கூறிய கருத்து இதோ: ''பெண் விடுதலை என்பது சமூக சீர்கேட்டை உருவாக்கி, குடும்ப பாரம்பரியத்தை சீர்குலைத்து, கணவர்களை விட்டு ஒடுகின்ற, தங்கள் குழந்தைகளைக் கொல்கின்ற, ஒரினச் சேர்க்கையில் பெண்களை ஈடுபடுத்துகின்ற ஓர் இயக்கமாகும்''. இப்போது சொல்லுங்கள்! யார் நாகரீகமானவர்கள்? யார் நாகரீகமற்றவர்கள்? என்று.