Thursday, December 2, 2010

தொழும் முறை:

கஅபாவை முன்னோக்குதல்:

தொழுபவர் எந்தத் திசையை நோக்கியும் தொழக் கூடாது. மக்கா நகரில் உள்ள கஅபா என்ற ஆலயம் இருக்கும் திசை நோக்கித் தான் தொழ வேண்டும். கஅபா ஆலயம் தமிழகத்தின் வடமேற்குத்திசையில் இருக்கிறது. இதைக் கண்டுபிடிக்க பல நவீன சாதனங்களும் உள்ளன.

(முஹம்மதே!) உம்முடைய முகம் வானத்தைநோக்கி அடிக்கடி திரும்புவதைக்காண்கிறோம்.

எனவே நீர் விரும்புகிற கிப்லாவை நோக்கி உம்மைத்திருப்புகிறோம். எனவே உமது முகத்தை மஸ்ஜிதுல் ஹராமின் திசையில்திருப்புவீராக! நீங்கள் எங்கே இருந்தாலும் உங்கள் முகங்களை அதன்திசையிலேயே திருப்பிக் கொள்ளுங்கள்! ‘ இதுவே தமது இறைவனிடமிருந்து வந்த

உண்மை ‘ என்று வேதம் கொடுக்கப்பட்டோர் அறிவார்கள். அவர்கள் செய்பவற்றை அல்லாஹ் கவனிக்காதவனாக இல்லை .

அல்குர்ஆன் 2 :144

… நீ தொழுகைக்குத்தயாரானால் (முதலில்) முழுமையாக உளூச் செய்! பின்னர் கிப்லாவை (கஅபாவை)முன்னோக்கு! பின் தக்பீர் கூறு!.. என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) )

நூல்கள்: புகாரீ 6667 , முஸ்லிம்

திசை தெரியவில்லையானால் …

சில நேரங்களில் கஅபா உள்ள திசை தெரியாமல்போகலாம் அப்போது ஏதாவது ஒரு திசையை நோக்கி நாம் தொழுது கொள்ள வேண்டும்.ஏனெனில் எந்த ஒரு மனிதனையும் அவரது சக்திக்கு மீறி அல்லாஹ் சிரமப்படுத்த மாட்டான் . எவரையும் அவரது சக்திக்குட்பட்டே தவிர அல்லாஹ் சிரமப்படுத்தமாட்டான்.

அல்குர்ஆன் 2 :286

கிழக்கும் , மேற்கும் அல்லாஹ்வுக்கே.நீங்கள் எங்கே திரும்பினாலும் அங்கே அல்லாஹ்வின் முகம் உள்ளது. அல்லாஹ்தாராளமானவன் ; அறிந்தவன் .

அல்குர்ஆன் 2 :115

நிய்யத் (எண்ணம் )

முஸ்லிம்கள் எந்த வணக்கத்தைச் செய்வதாக இருந்தாலும் வணக்கம் செய்கின்றோம்

என்ற எண்ணத்துடன் தான் செய்ய வேண்டும். இந்த எண்ணமில்லாமல் வணக்கத்தின்

அனைத்துக் காரியங்களையும் ஒருவர் செய்தாலும் அது வணக்கமாக அமையாது .

உடற்பயிற்சி என்பதற்காகவோ , அல்லது வேறு ஏதோ ஒரு காரணத்துக்காகவோ

தொழுகையில் கடைப்பிடிக்கும் அனைத்துக் காரியங்களையும் ஒருவர்

செய்கின்றார் ; ஆனால் தொழுகின்றோம் என்ற எண்ணம் அவருக்கு இல்லை என்றால்

இவர் தொழுகையை நிறைவேற்றியவராக மாட்டார் . எல்லா வணக்கங்களுக்கும்

நிய்யத் எனும் எண்ணம் அவசியம் என்பதற்குப் பின்வரும் ஹதீஸ் சான்றாக

அமைந்துள்ளது .

‘ அமல்கள் யாவும் எண்ணங்களைப் பொறுத்தே ‘ என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் .

அறிவிப்பவர்: உமர் பின் கத்தாப் (ரலி)

நூல்கள்: புகாரீ 1 , முஸ்லிம் 3530

நிய்யத் என்பதை முஸ்ம்களில் சிலர் தவறாக விளங்கி வைத்துள்ளனர். குறிப்பிட்ட

வார்த்தைகளை அரபு மொழியில் வாயால் மொழிவது தான் நிய்யத் என்று எண்ணுகின்றனர் . உஸல்லீ ஸலாத்தஸ்ஸுப்ஹி… என்பன போன்ற சில அரபிச் சொற்களைக் கூறுவது தான்

நிய்யத் என்றுகருதுகின்றனர். இதற்கு நபிவழியில் எந்த ஆதாரமும் இல்லை .

நிய்யத் என்றசொல்லுக்கு வாயால் மொழிதல் என்று பொருள் இல்லை. மனதால் நினைத்தல்

என்பதேஅதன் பொருளாகும் . மேலும் உளூச் செய்யும் போதோ , தொழும் போதோ , நோன்பு

நோற்கும் போதோ நபி (ஸல்) அவர்கள் எதனையும் வாயால் மொழிந்து விட்டுச்

செய்ததில்லை . ஹஜ் கடமையை நிறைவேற்றும் போது மட்டுமே வாயால்மொழிந்துள்ளனர்.

மற்ற எந்த வணக்கத்திற்கும் வாயால் மொழிந்ததில்லை . நான்இப்போது தொழப் போகின்றேன் என்ற எண்ணம் உள்ளத்தில் இருக்குமானால் அதுவேநிய்யத் ஆகும். வாயால் எந்தச் சொல்லையும் மொழியக் கூடாது. அவ்வாறுமொழிவது பித்அத் ஆகும்.

இது அவசியம் என்றால் நபி (ஸல்) அவர்கள் வாயால்மொழிந்து நமக்கு வழி காட்டியிருப்பார்கள் . தக்பீர் தஹ்ரீமா தொழுகைக்காககஅபாவை முன்னோக்கிய பின் , முதலில் அல்லாஹு அக்பர் என்று கூற வேண்டும்.இதற்கு தக்பீர் தஹ்ரீமா (தொழுகைக்கு வெளியே நடைபெறும் காரியங்களைத் தடைசெய்வதற்குரிய தக்பீர்) என்று கூறப்படும் . …

நீ தொழுகைக்குத்தயாரானால் (முதலில்) முழுமையாக உளூச் செய்! பின்னர் கிப்லாவை

(கஅபாவை)முன்னோக்கு! பின் தக்பீர் கூறு!.. என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்

. அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்கள்: புகாரீ 6667 , முஸ்லிம் 602

இரு கால்களுக்கிடையில் உள்ள இடைவெளி

நிற்கும் போது இரு கால்களுக்கிடையேஎவ்வளவு இடைவெளி இருக்க வேண்டுமென நபி ( ஸல்) அவர்கள் கூறவில்லை.அவர்களின் செயல் முறைகளிலிருந்தும் அறிந்து கொள்ள முடியவில்லை. எனவே அவரவர் இயல்புக்குத் தக்கவாறு அடுத்தவருக்கு இடையூறு இல்லாத வகையில்

நடுத்தரமாக நின்று கொள்ள வேண்டும் .

இரு கைகளை உயர்த்துதல்

அல்லாஹுஅக்பர் என்று கூறிய பின்னர் இரு கைகளையும் தோள் புஜம் வரை அல்லது

காதின் கீழ்ப் பகுதி வரை உயர்த்த வேண்டும். அப்போது இரு கைகளையும் மடக்காமல்

நீட்டிய வண்ணம் வைத்திருக்க வேண்டும் .

நபி (ஸல்) அவர்கள் தொழுகையைத்துவக்கும் போது தமது இரு கைகளையும் இரு தோள் புஜங்கள் வரைஉயர்த்தக்கூடியவர்களாக இருந்தார்கள் .

அறிவிப்பவர்: உமர் (ரலி)

நூல்கள்:புகாரீ 735 , முஸ்லிம் 586

நபி (ஸல்) அவர்கள் தக்பீர் கூறும் போது தம்இரு கைகளையும் இரு காதுகளின் கீழ்ப்பகுதி

வரை உயர்த்தக்கூடியவர்களாகஇருந்தார்கள் .

அறிவிப்பவர்: மாலிக் பின் ஹுவைரிஸ் (ரலி)

நூல்: முஸ்லிம்589

நபி (ஸல்) அவர்கள் தொழுகைக்கு நிற்கும் போது இரு கைகளையும் (மூடாமல்) நீட்டுவார்கள் .

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்கள்: திர்மிதீ 223 , அபூதாவூத் 643 , நஸயீ 873 , அஹ்மத் 8520

நெஞ்சின் மீது கை வைத்தல்

கைகளை உயர்த்தி , வலது கையை இடது கையின் குடங்கையின் மீது வைத்து

நெஞ்சின் மீது வைக்க வேண்டும். அல்லது வலது முன்கையை இடது முன்கையின்

மேற்பகுதி , மணிக்கட்டு , குடங்கை ஆகிய மூன்று இடங்களிலும் படுமாறு

வைக்க வேண்டும் .

‘ நபி (ஸல்) அவர்கள் (தொழுகையில் ஸலாம் கூறும் போது)தமது வலது புறமும் , இடது புறமும் திரும்பியதை நான் பார்த்தேன்.(தொழுகையில்) இதை நெஞ்சின் மீது வைத்ததை நான் பார்த்தேன் ‘ என்றுஹுல்புத்தாயீ (ரலி) கூறினார்கள். இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் யஹ்யா

என்பவர் இதை என்று சொல்லும் போது , வலது கையை இடது கையின் மணிக்கட்டின்

மீது வைத்துக் காட்டினார் என்று இமாம் அஹ்மத் பின் ஹம்பல்குறிப்பிடுகின்றார்கள் .

நூல்: அஹ்மத் 20961

தொழும் போது மக்கள் தம்வலக்கையை இடது குடங்கை மீது வைக்க வேண்டுமெனக்

கட்டளையிடப்பட்டிருந்தார்கள் .

அறிவிப்பவர்: ஸஹ்ல் பின் ஸஅத் (ரலி)

நூல்:புகாரீ 740

நபி (ஸல்) அவர்கள் தமது வலது கையை இடது முன் கை , இடதுமணிக்கட்டு , இடது

குடங்கை ஆகியவற்றின் மீது வைத்தார்கள் .

அறிவிப்பவர்: வாயில் பின் ஹுஜ்ர் (ரலி)

நூல்: நஸயீ 879

நபி (ஸல்)அவர்கள் தொழுகையில் நின்ற போது… தங்களது வலக்கையால் இடக்கையைப்

பிடித்திருந்ததை நான் பார்த்தேன் .

அறிவிப்பவர்: வாயில் பின் ஹுஜ்ர்(ரலி)

நூல்: அபூதாவூத் 624

கையைத் தொப்புளுக்குக் கீழ் வைப்பதற்குஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் இல்லை. தொப்புளுக்குக் கீழே கையை வைப்பதுநபிவழி என்று அலீ (ரலி) அறிவிப்பதாக அபூதாவூத் ( 645) உள்ளிட்ட சில

நூற்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த அனைத்து அறிவிப்புக்களும்அப்துர்ரஹ்மான் பின் இஸ்ஹாக் அல்கூஃபி என்பவர்

வழியாகவேஅறிவிக்கப்படுகின்றன. இவர் பலவீனமானவர் என்று அஹ்மத் பின் ஹம்பல் ,

யஹ்யா பின் மயீன் , புகாரீ , அபூஸுர்ஆ , அபூஹாத்தம் , அபூதாவூத் ஆகியோர் குறிப்பிட்டுள்ளனர். எனவே இதை ஆதாரமாகக் கொள்ள முடியாது .

மேலும் சிலர் நெஞ்சின் இடது புறம் கைகளை வைக்கிறார்கள். இதற்கும் எந்த

ஆதாரமும் கிடையாது .

பார்வை எங்கு இருக்க வேண்டும் ?

தொழும் போது பார்வைவானத்தை நோக்கி இருக்கக் கூடாது. திரும்பியும் பார்க்கக் கூடாது.

முன்னால் உள்ளவர்களைப் பார்ப்பது தவறில்லை .

‘ தொழும் போது தங்கள்பார்வைகளை வானத்தின் பக்கம் உயர்த்துவோருக்கு என்ன நேர்ந்து விட்டது ?இதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும் ; இல்லை எனில் அவர்களின் பார்வைகள்

பறிக்கப்பட்டு விடும் ‘ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் .

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்கள்: புகாரீ 750 , முஸ்லிம் 649

தொழுகையில் திரும்பிப் பார்ப்பது பற்றி நபி (ஸல்) அவர்களிடம் நான்கேட்டேன். ‘ ஒரு அடியானுடைய தொழுகையை ஷைத்தான் அதன் மூலம் பறித்துச்செல்கிறான் ‘ என்று

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் .

அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி)

நூல்: புகாரீ 751

‘ நபி (ஸல்) அவர்கள் லுஹரிலும் , அஸரிலும்ஓதுவார்களா ?’ என்று கப்பாப் (ரலி)

அவர்களிடம் கேட்டோம். அதற்கவர்கள் ஆம் என்றார்கள். ‘ நீங்கள் எப்படி அறிந்து

கொண்டீர்கள் ?’ என்று நாங்கள் கேட்டோம். ‘ நபி (ஸல்) அவர்களின் தாடி

அசைவதிலிருந்து இதைஅறிந்து கொள்வோம் ‘ என்று கப்பாப் (ரலி) அவர்கள் பதிலளித்தார்கள் .

அறிவிப்பவர்: அபூமஃமர்

நூல்: புகாரீ 746

தொழுகையின் ஆரம்ப துஆ:

கைகளைநெஞ்சில் கட்டிய பின்னர் பின் வரும் துஆக்களில் ஏதாவது ஒன்றை ஓத

வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் தொழுகைக்காக தக்பீர் கூறினால் குர்ஆன்வசனங்களை ஓதுவதற்கு

முன்பு சிறிது நேரம் மவுனமாக இருப்பார்கள். ‘இறைத்தூதரே! என் தாயும் , தந்தையும்

தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்!தக்பீருக்கும் , கிராஅத்துக்கும் ( குர்ஆன் ஓதுதலுக்கும்) இடையே தாங்கள்என்ன ஓதுகிறீர்கள் ?’ என நான் கேட்டேன். அதற்கு ,

‘ அல்லாஹும்ம பாயித்பைனீ வ பைன கதாயாய கமா பாஅத்த பைனல் மஷ்ரி(க்)கி வல் மக்ரிப்.

அல்லாஹும்ம நக்கினீ மினல் கதாயா கமா யுனக்கஸ் ஸவ்புல் அப்யலு மினத்

தனஸ். அல்லாஹும் மக்ஸில் கதாயாய பில்மாயி வஸ்ஸல்ஜி வல்பரத்

என்று ஓதுவேன்’ என நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள் .

பொருள்:

இறைவா! கிழக்குக்கும், மேற்குக்கும் இடையே வெகு தூரத்தை நீ ஏற்படுத்தியதைப் போல் எனக்கும் ,என் தவறுகளுக்குமிடையே நீ தூரத்தை ஏற்படுத்துவாயாக! இறைவா! வெண்மையான

ஆடை அழுக்கிலிருந்து தூய்மைப்படுத்தப்படுவது போல் என்னை என்தவறுகளிலிருந்து தூய்மைப்படுத்துவாயாக! இறைவா! தண்ணீராலும் ,பனிக்கட்டியாலும் , ஆலங்கட்டியாலும் என் தவறுகளைக் கழுவி விடுவாயாக !

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரீ 744

நபி (ஸல்) அவர்கள்தொழுகையைத் துவக்கும் போது தக்பீர் கூறுவார்கள். பிறகு பின்வரும் துஆவைஓதி விட்டு கிராஅத் ஓதுவார்கள் .

வஜ்ஜஹ்து வஜ்ஹிய லில்லதீ ஃபதரஸ்ஸமாவா(த்)தி வல்அர்ள ஹனீஃபன் வமா அன மினல் முஷ்ரி(க்)கீன். இன்னஸலா(த்)தீ வநுசு(க்)கீ வமஹ்யாய வமமா(த்)தீ லில்லாஹி ரப்பில் ஆலமீன்.

லாஷரீ(க்)கலஹு வபிதாலி(க்)க உமிர்(த்)து வஅன மினல் முஸ்லிமீன்.

அல்லாஹும்ம அன்(த்)தல் மலி(க்)கு லாயிலாஹ இல்லா அன்(த்)த , வஅனஅப்து(க்)க ளலம்(த்)து நஃப்ஸீ , வஃதரஃப்(த்)து பிதன்பீ ஃபஃக்பிர்லீதுனூபி ஜமீஆ , லாயஃக்ஃபிருத் துனூப இல்லா அன்(த்)த வஹ்தினீ லி அஹ்ஸனில்அக்லா(க்)கி லா யஹ்தீ லிஅஹ்ஸனிஹா இல்லா அன்(த்)த , வஸ்ரிஃப் அன்னீஸய்யிஅஹா , லாயஸ்ரிஃபு அன்னீ ஸய்யிஅஹா இல்லா அன்(த்)த , லப்பை(க்)க

வஸஃதை(க்)க வல்கைரு குல்லுஹு ஃபீயதை(க்)க வஷ்ஷர்ரு லைஸ இலை(க்)க அன

பி(க்)க வஇலை(க்)க தபாரக்(த்)த வ(த்)தஆலை(த்)த அஸ்தஃபிரு(க்)க ,வஅ(த்)தூபு இலை(க்)க

பொருள்:

இணை வைத்தவர்களில் ஒருவனாக நான் இல்லாமல்கட்டுப்பட்டவனாக , வானங்களையும் பூமியையும் படைத்தவனை நோக்கி என்முகத்தைத் திருப்புகிறேன்.

என் தொழுகையும் , என் இதர வணக்கங்களும் ,என் வாழ்வும் , என் மரணமும் அகில உலகையும் படைத்து இரட்சிக்கும்இறைவனுக்கே உரியன. அவனுக்கு நிகராக எவருமில்லை. இவ்வாறு தான்ஏவப்பட்டுள்ளேன். கட்டுப்பட்டு நடப்பவர்களில் நானும் ஒருவன். இறைவனே!

நீயே அதிபதி. உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு எவருமில்லை. நான்

உனது அடிமை. எனக்கே நான் அநீதி இழைத்து விட்டேன். என் குற்றத்தை ஒப்புக்

கொண்டு விட்டேன். எனவே என் குற்றங்கள் அனைத்தையும் மன்னிப்பாயாக!

உன்னைத் தவிர வேறு யாரும் குற்றங்களை மன்னிக்க முடியாது. நற்குணத்தின்

பால் எனக்கு வழி காட்டுவாயாக! உன்னைத் தவிர யாரும் வழி காட்ட முடியாது.

தீய குணங்களை விட்டும் என்னைக் காப்பாயாக! உன்னைத் தவிர யாரும் தீய

குணங்களை விட்டும் காக்க முடியாது. இதோ உன்னிடம் வந்து விட்டேன்.

அனைத்து நன்மைகளும் உன் கைகளிலே உள்ளன. தீமைகள் உன்னைச் சேராது. நான்

உன்னையே சார்ந்துள்ளேன். உன்னிடமே சரணடைந்தேன். நீ பாக்கியம் மிக்கவன்.

உயர்ந்தவன். உன்னிடம் பாவமன்னிப்பு தேடுகின்றேன். உன்னை நோக்கி

மீள்கின்றேன் .

அறிவிப்பவர்: அலீ (ரலி)

நூல்: நஸயீ 887 இந்த ஹதீஸ்முஸ்லிம் 1290 லும் இடம் பெற்றுள்ளது .

ஸுப்ஹானக்கல்லாஹும்ம வபிஹம்திக்கதபாரகஸ்முக்க வதஆலா ஜத்துக்க வலாயிலாஹ கைருக.

என்ற ஸனாவை சிலர் தொழுகையின் ஆரம்ப துஆவாக ஓதி வருகின்றார்கள்.

நபி (ஸல்) அவர்கள் இதை ஓதினார்கள் என்பதற்கு ஆதாரப்பூர்மான ஹதீஸ்கள்எதுவும் இல்லை .

சூரத்துல் பாத்திஹா ஓதுதல்

தொழுகையின் முதல் துஆ ஓதியபின்னர் சூரத்துல் பாத்திஹா ஓத வேண்டும் .

‘ சூரத்துல் ஃபாத்திஹாஓதாதவருக்குத் தொழுகையில்லை ‘ என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் .

அறிவிப்பவர்: உபாதா (ரலி)

நூல்கள்: புகாரீ 756 , முஸ்லிம் 595

சூரத்துல் ஃபாத்திஹாவின் வசனங்கள் :

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர்ரஹீம்.

அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்.

அர்ரஹ்மானிர் ரஹீம்.

மாலி(க்)கி யவ்மித்தீன்.

இய்யா(க்)க நஅபுது வஇய்யா(க்)க நஸ்(த்)தயீன்.

இஹ்தினஸ் ஸிரா(த்)தல் முஸ்த(க்)கீம்.

ஸிரா(த்)தல்லதீன அன்அம்(த்) தஅலைஹிம்

கைரில் மக்லூபி அலைஹிம் வலழ்ழாள்ளீன்

பொருள் :

அளவற்ற அருளாளனும்நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்… எல்லாப் புகழும்

அகிலம் அனைத்தையும் படைத்து இரட்சிக்கும் இறைவனுக்கே! அளவற்ற அருளாளன் ;

நிகரற்ற அன்பாளன். தீர்ப்பு நாளின் அதிபதி. இறைவா! உன்னையே நாங்கள்

வணங்குகிறோம். உன்னிடமே உதவியும் தேடுகிறோம். நீ எவர்களுக்கு பாக்கியம்

புரிந்தாயோ அவர்களின் வழியில் எங்களை நடத்துவாயாக! உன் கோபத்துக்கு

ஆளானவர்களின் வழியுமல்ல ; நெறி கெட்டவர்களின் வழியுமல்ல .

பிஸ்மில்லாஹ்ஓத வேண்டுமா

ஒவ்வொரு ரக்அத்திலும் சூராக்களை ஆரம்பிக்கும் போதுபிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என சப்தமிட்டோ , மெதுவாகவோ கூறவேண்டும் . ‘ பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் ‘ என்பது சூரத்துல்ஃபாத்திஹாவின் ஒரு வசனம் என்பதால் அதையும் ஓத வேண்டும் .

‘ நபி (ஸல்)அவர்களின் கிராஅத் (குர்ஆன் ஓதுதல்) எவ்வாறு இருந்தது ?’

என அனஸ் (ரலி)யிடம் விசாரிக்கப்பட்ட போது ‘ அவர்கள் நீட்டி நிறுத்தி ஓதினார்கள் ‘

என்று கூறிவிட்டு பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்பதில் ரஹ்மான்

ரஹீம் என்ற வார்த்தைகளை நீட்டி ஓதிக் காட்டினார்கள் .

அறிவிப்பவர்:கதாதா ,

நூல்: புகாரீ 5046

‘ நபி (ஸல்) அவர்கள் , அபூபக்ர் (ரலி) ,உமர் (ரலி) , உஸ்மான் (ரலி) ஆகியோர் அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்என்றே தொழுகையைத் துவங்குவார்கள் .

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்கள்:புகாரீ 743 , முஸ்லிம் 229

நபி (ஸல்) அவர்கள் பிஸ்மில்லாஹ்வைச்சப்தமின்றி ஓதினார்கள் என்பதற்கு மேற்கண்ட ஹதீஸ் ஆதாரமாகும். சப்தமிட்டுபிஸ்மில்லாஹ் ஓதுவதற்குப் பின்வரும் ஹதீஸ் ஆதாரமாக அமைந்துள்ளது .

நான்அபூஹுரைரா (ரலி) அவர்களைப் பின்பற்றித் தொழுதேன். அவர்கள் பிஸ்மில்லாஹிர்

ரஹ்மானிர் ரஹீம் என்று ஓதி விட்டுப் பிறகு அல்ஹம்து சூராவைஓதினார்கள்….

‘ அல்லாஹ்வின் மீதாணையாக நபி (ஸல்) அவர்கள் தொழுதுகாட்டியது போல் நான்

உங்களுக்குத் தொழுது காட்டினேன் ‘ என்று அபூஹுரைரா(ரலி) குறிப்பிட்டார்கள் .

அறிவிப்பவர்: நுஐம் அல்முஜ்மிர்

நூல்: ஹாகிம்1 /357

பின்பற்றித் தொழுபவர் சூரத்துல் ஃபாத்திஹா ஓத வேண்டுமா ?

இமாமைப்பின்பற்றித் தொழுபவர் இமாம் சப்தமிட்டு ஓதும் தொழுகையில் இமாம் ஓதுவதைக்

கேட்க வேண்டும். வேறு எதையும் ஓதக் கூடாது .

குர்ஆன் ஓதப்படும் போதுஅதைச் செவிமடுங்கள்! வாய் மூடுங்கள்! நீங்கள் அருள் செய்யப்படுவீர்கள்!

அல்குர்ஆன் 7 :204

நாங்கள் தொழுகையில் , இன்னார் மீது ஸலாம் , இன்னார்மீது ஸலாம் என்று கூறிக் கொண்டிருந்தோம். அப்போது தான் ‘ குர்ஆன்ஓதப்படும் போது அதைச் செவிமடுங்கள்! வாய் மூடுங்கள்! நீங்கள் அருள்செய்யப்படுவீர்கள்! ‘ என்ற 7 :204 குர்ஆன் வசனம் வந்தது .

அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி)

நூல்: தப்ஸீர் தப்ரீ , பாகம்: 9 ,பக்கம்: 162

‘ இமாம் ஓதும் போது நீங்கள் மவுனமாக இருங்கள்! ‘ என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் .

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்:முஸ்லிம் 612

ஆமீன் கூறுதல்

சூரத்துல் ஃபாத்திஹா ஓதி முடித்ததும் ‘ஆமீன் ‘ கூற வேண்டும். சப்தமிட்டு ஓதும் தொழுகைகளில் இமாம் சூரத்துல்ஃபாத்திஹாவை ஓதி முடித்ததும் இமாமும் , பின் நின்று தொழுபவரும் ஆமீன்கூற வேண்டும் .

‘ இமாம் ‘ கைரில் மக்லூபி அலைஹிம் வலழ்ழாள்ளீன் ‘ எனக்கூறும் போது நீங்கள் ஆமீன் கூறுங்கள்! ஏனெனில் எவர் கூறும் ஆமீன் ,மலக்குகள் கூறும் ஆமீனுடன் ஒத்து அமைந்து விடுகிறதோ அவரது முன் பாவங்கள்மன்னிக்கப்படுகின்றன ‘ என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் .

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரீ 782

இந்த ஹதீஸில் கூறப்படும்கூலூ (நீங்கள் சொல்லுங்கள்) என்ற அரபி வாசகம் , மெதுவாகச் சொல்வதையும்சப்தமிட்டுச் சொல்வதையும் எடுத்துக் கொள்ளும். இந்த வாசகத்திற்கு

நபித்தோழர்கள் சப்தமிட்டுக் கூறுதல் என்று புரிந்துள்ளார்கள்என்பதற்குப் பின்வரும் செய்தி

சான்றாக உள்ளது. எனவே ஆமீன் என்பதைச்சப்தமிட்டும் சொல்லலாம். விரும்பினால் சப்தமில்லாமலும் சொல்லலாம் . ‘

இந்தப் பள்ளிவாசலில் 200 நபித்தோழர்களைக் கண்டுள்ளேன். இமாம் ‘ கைரில்

மக்லூபி அலைஹிம் வலழ்ழாள்ளீன் ‘ எனக் கூறும் போது அந்த நபித்

தோழர்களிடமிருந்து ‘ ஆமீன் ‘ என்ற பெரும் சப்தத்தை நான் கேட்டுள்ளேன் .

அறிவிப்பவர்: அதா

நூல்: பைஹகீ

துணை சூராக்கள்

சூரத்துல் பாத்திஹா ஓதியபின்னர் குர்ஆனில் நமக்குத் தெரிந்த முழு அத்தியாயத்தையோ , அல்லது சிலவசனங்களையோ ஓத வேண்டும் . முதல் இரண்டு ரக்அத்களில் சூரத்துல்

பாத்திஹாவும் , துணை சூராவும் நபி (ஸல்) அவர்கள் ஓதியுள்ளார்கள்.

பிந்திய ரக்அத்களில் சூரத்துல் பாத்திஹா மட்டும் ஓதியுள்ளார்கள். சிலசமயங்களில் துணை சூராவும் சேர்த்து ஓதியுள்ளார்கள்.

நபி ( ஸல்) அவர்கள்லுஹர் தொழுகையின் முதல் இரண்டு ரக்அத்களில் அல்ஹம்து அத்தியாயத்தையும்துணை அத்தியாயங்கள் இரண்டையும் ஓதுவார்கள். பிந்திய இரண்டு

ரக்அத்களில்அல்ஹம்து அத்தியாயத்தை ஓதுவார்கள். ஒரு சில வசனங்களை எங்களுக்குக்

கேட்கும் அளவிற்கு ஓதுவார்கள். இரண்டாவது ரக்அத்தை விட முதல் ரக்அத்தில்

நீளமாக ஓதுவார்கள். இவ்வாறே அஸரிலும் , சுப்ஹிலும் செய்வார்கள் .

அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி)

நூல்கள்: புகாரீ 776 , முஸ்லிம் 686

நபி(ஸல்) அவர்கள் லுஹர் தொழுகையில் முப்பது வசனங்கள் அளவு ஒவ்வொரு

ரக்அத்திலும் ஓதுவார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: நஸயீ472

ஒரு அத்தியாயத்தை எல்லா ரக்அத்களிலும் ஓதுதல் நபி (ஸல்) அவர்கள்சுப்ஹுத் தொழுகையில் இதா ஸுல்ஸிலத்தில் அர்லு ‘ என்று தொடங்கும்அத்தியாயத்தை இரண்டு ரக்அத்களிலும் ஓதினார்கள்.

நூல்: அபூதாவூத் 693

வரிசை மாற்றி ஓதுதல்

துணை அத்தியாயங்களை ஓதும் போது குர்ஆனில் உள்ளவரிசைப்படி ஓத வேண்டும் என்பது அவசியமில்லை. வரிசை மாற்றியும் ஓதலாம்.

உதாரணமாக 114 வது அத்தியாயமாக உள்ள நாஸ் அத்தியாயத்தை ஓதிவிட்டு 113

வது அத்தியாயமாக உள்ள ஃபலக் என்ற அத்தியாயத்தை ஓதலாம் .

ஒரு நாள் இரவுநபி (ஸல்) அவர்களுடன் தொழுதேன். அப்போது முதலில் (இரண்டாவது

அத்தியாயமான) ஸூரத்துல் பகராவை ஓத ஆரம்பித்தார்கள். பின்னர் (நான்காவது

அத்தியாயமான) ஸூரத்துந் நிஸாவை ஓத ஆரம்பித்தார்கள். பின்னர் (மூன்றாவது

அத்தியாயமான) ஸூரத்து ஆலஇம்ரானை ஓத ஆரம்பித்தார்கள். (ஹதீஸின் சுருக்கம்)

அறிவிப்பவர்: ஹுதைஃபா (ரலி)

நூல்: முஸ்லிம் 1291

ஒரு அத்தியாயத்தைப்பிரித்து ஓதுதல் துணை சூரா ஓதும் போது ஒரு அத்தியாயத்தைப் பகுதி

பகுதியாகப் பிரித்து ஓதுவதும் கூடும் .

நபி (ஸல்) அவர்கள் மஃரிப்தொழுகையில் ஸூரத்துல் அஃராஃப் அத்தியாயத்தை இரண்டு ரக்அத்துகளில்பிரித்து ஓதினார்கள் .

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: நஸயீ 981

ருகூவுசெய்தல்

நிலையில் சூரத்துல் பாத்திஹா மற்றும் துணை சூராக்களை ஓதிமுடித்தவுடன் அல்லாஹு அக்பர் என்று கூறி இரு கைகளையும் காதின் கீழ்ப்பகுதி வரை அல்லது தோள் புஜம் வரை உயர்த்தி ருகூவு செய்ய வேண்டும் .

ருகூவு என்பது குனிந்து இரு கைகளையும் மூட்டின் மீது வைப்பதாகும்.அப்போது இரு கைகளும் விலாப்புறத்தில் படாதவாறு நேராக வைத்துக் கொள்ளவேண்டும். மேலும் தலையையும் , முதுகையும் சமமாக வைக்க வேண்டும்.தலையைத் தாழ்த்தியோ , உயர்த்தியோ இருக்கக் கூடாது .

‘ நபி (ஸல்)அவர்கள் தொழுகையைத் துவக்கும் போதும் , ருகூவிற்கு தக்பீர் கூறும்

போதும் , ருகூவிலிருந்து தலையை உயர்த்தும் போதும் தமது கைகளை தோள்புஜம்

வரை உயர்த்தக் கூடியவர்களாக இருந்தார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ்பின் உமர் ( ரலி)

நூல்: புகாரீ 735

நபி (ஸல்) அவர்கள் தக்பீர் சொல்லும்போதும் , ருகூவு செய்யும் போதும் , தம் இரு கைகளையும் தமதுகாதுகளுக்கு நேராக உயர்த்துவார்கள் .

அறிவிப்பவர்: மாலிக் பின்அல்ஹுவைரிஸ் (ரலி)

நூல்: முஸ்லிம் 589

அபூஹுமைத் (ரலி) , அபூஉஸைத்(ரலி) , ஸஹ்ல் பின் ஸஅத் (ரலி) , முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) ஆகியோர்ஒன்று கூடி நபி (ஸல்) அவர்களின் தொழுகையைப் பற்றி பேசிக்

கொண்டிருந்தனர். அப்போது அபூஹுமைத் (ரலி) அவர்கள் , ‘ நபி (ஸல்)அவர்களின் தொழுகையைப் பற்றி உங்களை விட நான் நன்கு அறிந்தவன். நபி (ஸல்)அவர்கள் ருகூவு செய்யும் போது தமது இரு கைகளாலும் இரண்டு மூட்டுக்கால்களையும் பிடித்துக் கொள்வது போல் வைத்தார்கள். மேலும் தமது இருகைகளையும் (வளைவு இன்றி) நேராக ஆக்கினார்கள். மேலும் இரு கைகளையும்விலாப்புறத்தை விட்டும் விலக்கி வைத்தார்கள் ‘ என்று குறிப்பிட்டார்கள்

.

அறிவிப்பவர்: அப்பாஸ் பின் ஸஹ்ல் ,

நூல்கள்: திர்மிதீ 241 ,அபூதாவூத் 628

நபி (ஸல்) அவர்கள் ருகூவு செய்யும் போது தலையைஉயர்த்தவும் மாட்டார்கள் ; ஒரேயடியாகத் தாழ்த்தவும் மாட்டார்கள் ;இரண்டிற்கும் இடைப்பட்ட நிலையில் வைப்பார்கள். (ஹதீஸின் சுருக்கம் )

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: முஸ்லிம் 768

‘ ருகூவிலும் ,ஸஜ்தாவிலும் எவர் தமது முதுகை (வளைவின்றி) நேராக நிறுத்தவில்லையோ அவரது தொழுகை செல்லாது ‘ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் .

அறிவிப்பவர்:அபூமஸ்வூத் அல்அன்சாரீ (ரலி)

நூல்கள்: திர்மிதீ 245 , நஸயீ 1017 ,அபூதாவூத் 729 , இப்னுமாஜா 860 , தாரமீ 1293 ‘

திருடர்களில் மிகவும்மோசமான திருடன் தொழுகையில் திருடுபவன் ‘ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியபோது , ‘ அல்லாஹ்வின் தூதரே! தொழுகையில் எப்படி ஒருவன் திருடுவான் ?’ என

நபித்தோழர்கள் கேட்டனர். ‘ தனது ருகூவையும் , சுஜூதையும் பூரணமாகச்செய்யாதவனே அந்தத் திருடன் ‘ என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள் .

அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி)

நூல்: அஹ்மத் 11106

ருகூவில் ஓதவேண்டியவை

பின் வரும் துஆக்களில் அனைத்தையுமோ , அல்லது ஒன்றையோ ஓதிக் கொள்ளலாம்.

குர்ஆன் வசனங்களை ஓதக்கூடாது .

சுப்ஹான ரப்பியல் அழீம்

(மகத்துவமிக்க என் இறைவன் பரிசுத்தமானவன்) என்று மூன்று தடவை கூற

வேண்டும். நூல்: நஸயீ 1121

ஸுப்ஹான(க்)கல்லாஹும்ம ரப்பனா வபிஹம்தி(க்)கஅல்லாஹும்மக்ஃபிர்லி (இறைவா! நீ தூயவன் ; எங்கள் இறைவா! உன்னைப்புகழ்கிறேன் ; என்னை மன்னித்து விடு)

நூல்கள்: புகாரீ 794 , முஸ்லிம் 746

ஸுப்பூஹுன் குத்தூஸுன் ரப்புல் மலாயி(க்)க(த்)தி வர்ரூஹ்

(ஜிப்ரீல் மற்றும் வானவர்களின் இறைவன் பரிசுத்தமானவன் ; தூய்மையானவன்)

நூல்: முஸ்லிம் 752

ருகூவு செய்யும் போதும் , ஸஜ்தாச் செய்யும் போதும்குர்ஆன் வசனங்களை ஓதுவதை விட்டும் என்னை நபி (ஸல்) அவர்கள் தடுத்தார்கள்

. அறிவிப்பவர்: அலீ (ரலி)

நூல்: முஸ்லிம் 740

ருகூவில் ஓதும் துஆக்களைமூன்று முறை தான் ஓத வேண்டும் என்பதில்லை. நாம் விரும்பிய அளவு கூடுதலாகஎவ்வளவு முறையும் ஓதிக் கொள்ளலாம். ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் இந்த

துஆக்களை அதிகமாகவே ஓதியுள்ளார்கள் .

நபி (ஸல்) அவர்கள் தமது ருகூவிலும், ஸஜ்தாவிலும் ‘ ஸுப்ஹான(க்)கல்லாஹும்ம ரப்பனா வபிஹம்தி(க்)க அல்லாஹும்மக்ஃபிர்லி ‘ என்று அதிகமதிகம் கூறுவார்கள் .

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்கள்: புகாரீ 817 , முஸ்லிம் 746

ருகூவிலிருந்து எழும்போது

ருகூவிலிருந்து எழும் போது ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதா (புகழ்பவரின்

புகழ் வார்த்தைகளை அல்லாஹ் கேட்கிறான்) என்று கூறி இரு கைகளையும்

தோள்புஜம் அல்லது காது வரை உயர்த்தி , பின்னர் கைகளைக் கீழே விட்ட

நிலையில் ரப்பனா லக்கல் ஹம்து என்று கூற வேண்டும் .

நபி (ஸல்) அவர்கள்தொழுகையைத் துவக்கும் போது தக்பீர் கூறுவார்கள். ருகூவு செய்யும் போதும்

தக்பீர் கூறுவார்கள். ருகூவிலிருந்து முதுகை நிமிர்த்தும் போது ‘ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதா ‘ என்று கூறுவார்கள். பின்பு நிலைக்கு வந்து ‘ரப்பனா லக்கல் ஹம்து ‘ என்பார்கள் .

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்:புகாரீ 789

‘ நபி (ஸல்) அவர்கள் தொழுகையைத் துவக்கும் போதும் ,ருகூவிற்கு தக்பீர் கூறும் போதும் , ருகூவிலிருந்து தலையை உயர்த்தும்போதும் தமது கைகளை தோள்புஜம் வரை உயர்த்தக் கூடியவர்களாக இருந்தார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் ( ரலி)

நூல்: புகாரீ 735

நபி (ஸல்)அவர்கள் தக்பீர் சொல்லும் போதும் , ருகூவு செய்யும் போதும் , தம் இரு

கைகளையும் தமது காதுகளுக்கு நேராக உயர்த்துவார்கள். ருகூவிலிருந்து தலையை

உயர்த்தி ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதா என்று கூறும் போதும் அதைப் போன்றே

கைகளை உயர்த்துவார்கள் .

அறிவிப்பவர்: மாலிக் பின் அல்ஹுவைரிஸ் (ரலி)

நூல்: முஸ்லிம் 589

ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதா என்று கூறிய பிறகு பின்வரும்துஆக்களில் ஏதாவது ஒன்றைக் கூறலாம் .

ரப்பனா ல(க்)கல் ஹம்து நூல்:புகாரீ 789

ரப்பனா வல(க்)கல் ஹம்து நூல்: புகாரீ 732

அல்லாஹும்ம ரப்பனால(க்)கல் ஹம்து நூல்: புகாரீ 796

அல்லாஹும்ம ரப்பனா வல(க்)கல் ஹம்து (

பொருள்: எங்கள் இறைவா! உனக்கே புகழ் அனைத்தும் !) நூல்: புகாரீ 7346

ரப்பனா ல(க்)கல் ஹம்து ஹம்தன் கஸீரன் தய்யிபன் முபார(க்)கன் ஃபீஹீ

(இறைவா! தூய்மையான அருள் நிறைந்த ஏராளமான புகழ் அனைத்தும் உனக்கே

உரியது!) நூல்: புகாரீ 799

ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதா என்று இமாம் கூறும்போது பின்பற்றித் தொழுபவர் ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதா என்று கூறத்தேவையில்லை. மேற்கூறப்பட்ட வாசகங்களில் ஏதாவது ஒன்றைக் கூறினால்போதுமானது. ஏனெனில்

‘ இமாம் , ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதா ‘ என்று கூறும்போது நீங்கள் ரப்பனா ல(க்)கல் ஹம்து ‘ என்று கூறுங்கள் ‘ என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல்: புகாரீ 722

ருகூவுக்குப் பின்னர்கைகளைக் கட்டலாமா ?

சிலர் ருகூவிலிருந்து எழுந்தவுடன் மீண்டும் கைகளைக்கட்டிக் கொண்டு , பின்னர் ஸஜ்தாச் செய்கின்றனர். சவூதி அரேபியாவில்இருந்த அறிஞர் அப்துல்லாஹ் பின் பாஸ் அவர்கள் , ‘ ருகூவிலிருந்துஎழுந்தவுடன் கைகளைக் கட்ட வேண்டும் ; இது விடுபட்ட நபி வழி ‘ என்று

கூறினார். இதன் அடிப்படையில் சிலர் ருகூவுக்குப் பின்னர் கைகளைக் கட்டி

வருகின்றனர். இது நபி வழிக்கு மாற்றமானதாகும்.

நபி (ஸல்) அவர்களின்கூற்றைக் கவனித்தால் ருகூவுக்குப் பின்னர் கைகளைக் கட்டக் கூடாது , கீழே

விட வேண்டும் என்பதை அறியலாம் .

நபி (ஸல்) அவர்கள் (ருகூவிலிருந்து)தலையை உயர்த்தும் போது ஒவ்வொரு மூட்டும் அதனதன் இடத்துக்கு வரும்அளவுக்கு நிமிருவார்கள் .

நூல்: புகாரீ 828

நபி (ஸல்) அவர்கள்ருகூவிலிருந்து எழுந்து எப்படி நிற்பார்கள் என்பதை விளக்கும் நபித்

தோழர்கள் ஒவ்வொரு மூட்டும் அதனுடைய இடத்துக்கு வரும் அளவுக்குநிமிருவார்கள் என்று குறிப்பிடுகிறார்கள் . ஒவ்வொரு மூட்டும் அதனதன்இடத்துக்கு வரவேண்டுமானால் கைகளைக் கீழே விட்டால் தான் சாத்தியம்.கைளைக் கட்டினால் மூட்டுக்கள் அதனதன் இடத்துக்கு வராது. எனவே இந்தஹதீஸின் அடிப்படையில் ருகூவுக்குப் பின்னர் கைகளைக் கீழே விடுவது தான்

நபிவழி என்பதை அறியலாம் .

ஸஜ்தா

ருகூவிலிருந்து எழுந்து , ரப்பனாலக்கல் ஹம்து என்று கூறிய பின்னர் , அல்லாஹு அக்பர் என்று கூறி ஸஜ்தாச்செய்ய வேண்டும்.

ஸஜ்தாவில் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்குகளைப்பார்ப்போம் .

கைகளை முதலில் வைக்க வேண்டும்

ஸஜ்தாவிற்குச் செல்லும் போதுமுதலில் இரு உள்ளங்கைகளையும் தரையில் வைத்து , பின்னர் மூட்டுக்களை வைக்க வேண்டும் .

‘ உங்களில் ஒருவர் ஸஜ்தாச் செய்யும் போது தனது மூட்டுக்கால்களை வைப்பதற்கு முன் தனது கைகளை வைக்கட்டும். ஒட்டகம் அமர்வது போல்அமர வேண்டாம். ‘ என நபி ( ஸல்) அவர்கள் கூறினார்கள் .

அறிவிப்பவர்:அபூஹுரைரா (ரலி)

நூல்: நஸயீ 1079

தரையில் பட வேண்டிய உறுப்புகள்

ஸஜ்தாச்செய்யும் போது நெற்றி , மூக்கு , இரு உள்ளங்கைகள் , இரு மூட்டுக்கள் ,

இரு பாதங்களின் நுனி விரல்கள் ஆகியவை தரையில் படுமாறு வைக்க வேண்டும் .

கால் விரல்களை வளைத்து கிப்லாத் திசையை முன்னோக்கும் விதமாக வைக்க

வேண்டும் . இரண்டு கால்களையும் சேர்த்து வைக்க வேண்டும் . ஆடையோ ,

முடியோ தரையில் படாதவாறு தடுக்கக் கூடாது . ஸஜ்தாவில் இரு கைகளையும்

காதுகளுக்கு நேராகவோ , அல்லது தோள் புஜங்களுக்கு நேராகவோ வைக்க

வேண்டும் . இரு கைகளைத் தொடையில் படாமலும் முழங்கை தரையில் படாமலும்

உயர்த்தி வைக்க வேண்டும். தொடையும் வயிறும் சேராமல் இருக்குமாறு

வைக்க வேண்டும் .

‘ நெற்றி , இரு கைகள் , இரண்டு மூட்டுக் கால்கள் ,இரண்டு பாதங்களின்

முனைகள் ஆகிய ஏழு உறுப்புகள் (தரையில்) படுமாறு

ஸஜ்தாச் செய்யும்படி நான் கட்டளையிடப்பட்டுள்ளேன் – நெற்றியைக்

குறிப்பிடும் போது தமது கையால் மூக்கையும் சேர்த்து அடையாளம்

காட்டினார்கள் – ஆடையோ முடியோ (தரையில் படாதவாறு) தடுக்கக் கூடாது ‘

என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் .

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புகாரீ 812

நபி (ஸல்) அவர்கள் ஸஜ்தாச் செய்யும் போது தமது முன்

கைகளைத் தமது காதுகளுக்கு நேராக வைத்தார்கள். (ஹதீஸின் சுருக்கம் )

அறிவிப்பவர்: வாயில் பின் ஹுஜ்ர் (ரலி)

நூல்கள்: நஸயீ 18115 , அஹ்மத்18115 , தாரமீ 1323

நபி (ஸல்) அவர்கள் தொழும் போது (ஸஜ்தாவில்) தமதுதொடைகளின் மீது வயிற்றைத் தாங்கிக் கொள்ளாமலும் தமது இரு தொடைகளையும்விரித்தவர்களாகவும் ஸஜ்தாச் செய்வார்கள் .

அறிவிப்பவர்: பரா (ரலி)

நூல்:நஸயீ 1093

‘ நீ ஸஜ்தாச் செய்யும் போது உனது உள்ளங்கைகளை (தரையில்)

வைத்து முழங்கைகளை உயர்த்திக் கொள் ‘ என நபி (ஸல்) அவர்கள்

கூறியுள்ளார்கள் .

அறிவிப்பவர்: பரா (ரலி)

நூல்: முஸ்லிம் 763

… நபி(ஸல்) அவர்கள் ஸஜ்தாச் செய்யும் போது தமது கைளை விரிக்காமலும் மூடிக்

கொள்ளாமலும் வைப்பார்கள். தமது கால் விரல்களின் முனைகளைக் கிப்லாவை

நோக்கச் செய்வார்கள் …

அறிவிப்பவர்: அபூஹுமைத் (ரலி)

நூல்: புகாரீ828

நபி (ஸல்) அவர்கள் ஸஜ்தாவில் இரு குதிகால்களையும் இணைத்து விரல்களைக்

கிப்லாவை முன்னோக்கி வைத்திருந்தார்கள் .

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்கள்: இப்னுஹுஸைமா 654 , இப்னுஹிப்பான் 1933 , ஹாகிம் 832

நாய்விரிப்பதைப் போல் கைகளை வைக்கக் கூடாது

தொடைகளும் , வயிறும் ஒட்டாமல்அகற்றி வைக்க வேண்டும். நாய் அமருவது போல் முன்கைகளைத் தரையில் பரப்பிவைப்பதைப் போன்று வைக்கக் கூடாது .

‘ ஸஜ்தாவில் நடுநிலையைக்கடைப்பிடியுங்கள் ; உங்களில் எவரும் நாய் விரிப்பதைப் போல் கைகளைவிரிக்கக் கூடாது ‘ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் .

அறிவிப்பவர்:அனஸ் (ரலி)

நூல்கள்: புகாரீ 822 , முஸ்லிம் 850

ஸஜ்தாவில் ஓத வேண்டியவை

ஸஜ்தாவில் பின் வரும் துஆக்களில் அனைத்தையுமோ , அல்லது

ஒன்றையோ ஓதிக் கொள்ளலாம். குர்ஆன் வசனங்களை ஓதக் கூடாது .

சுப்ஹான ரப்பியல் அஃலா (உயர்வான என் இறைவன் பரிசுத்தமானவன்) என்று மூன்று

தடவை கூற வேண்டும். புகாரீ 817

ஸுப்ஹான(க்)கல்லாஹும்ம ரப்பனா

வபிஹம்தி(க்)க அல்லாஹும்மக்ஃபிர்லி (இறைவா! நீ தூயவன் ; எங்கள் இறைவா!

உன்னைப் புகழ்கிறேன் ; என்னை மன்னித்து விடு ) நூல்கள்: புகாரீ 794 ,

முஸ்லிம் 746

ஸுப்பூஹுன் குத்தூஸுன் வரப்புல் மலாயிக(த்)திவர்ரூஹ் (ஜிப்ரீல் மற்றும் வானவர்களின் இறைவன் பரிசுத்தமானவன் ;தூய்மையானவன்)

நூல்: முஸ்லிம் 752

ருகூவு செய்யும் போதும் , ஸஜ்தாச்செய்யும் போதும் குர்ஆன் வசனங்களை ஓதுவதை விட்டும் என்னை நபி (ஸல்)அவர்கள் தடுத்தார்கள் .

அறிவிப்பவர்: அலீ (ரலி)

நூல்: முஸ்லிம் 740

ஸஜ்தாவில் ஓதும் துஆக்களை மூன்று முறை தான் ஓத வேண்டும் என்பதில்லை. நாம் விரும்பிய அளவு கூடுதலாகஎவ்வளவு முறையும் ஓதிக் கொள்ளலாம். ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் இந்ததுஆக்களை அதிகமாகவே ஓதியுள்ளார்கள் .

நபி (ஸல்) அவர்கள் தமது ருகூவிலும், ஸஜ்தாவிலும் ‘ ஸுப்ஹான(க்)கல்லாஹும்ம ரப்பனா வபிஹம்தி(க்)கஅல்லாஹும்மக்ஃபிர்லி ‘ என்று அதிகமதிகம் கூறுவார்கள் .

அறிவிப்பவர்:ஆயிஷா (ரலி)

நூல்கள்: புகாரீ 817 , முஸ்லிம் 746

ஸஜ்தாவில் விரும்பிய துஆக்களைக் கேட்கலாம்

ஒருவர்ஸஜ்தாவில் இருக்கும் போது , தான் விரும்பிய துஆவை தாய்மொழியிலேயே

கேட்கலாம் .

‘… ஸஜ்தாவில் அதிகம் பிரார்த்தனை செய்யுங்கள்! உங்கள்பிரார்த்தனை ஏற்கப்பட அது மிகவும் தகுதியானதாகும் ‘ என்று நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள் .

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: முஸ்லிம்824

இரண்டு ஸஜ்தாக்களுக்கு இடையில்

முதல் ஸஜ்தாச் செய்த பின்னர் அல்லாஹுஅக்பர் என்று கூறி எழுந்து அமர வேண்டும். அதில் பின்வரும் துஆவை ஓதவேண்டும் .

நபி (ஸல்) அவர்கள் இரண்டு ஸஜ்தாக்களுக்கிடையே , ‘

ரப்பிக்ஃபிர்லீ ரப்பிக்ஃபிர்லீ (இறைவா! என்னை மன்னித்து விடு ; இறைவா!

என்னை மன்னித்து விடு) ‘ என்று கூறினார்கள் .

அறிவிப்பவர்: ஹுதைஃபா(ரலி)

நூல்: நஸயீ 1059

இந்த துஆவை ஓதி முடித்த பின்னர் அல்லாஹு அக்பர்என்று கூறி மீண்டும் ஸஜ்தாச் செய்ய வேண்டும். முதல் ஸஜ்தாவில் செய்தஅனைத்தையும் இரண்டாம் ஸஜ்தாவிலும் கடைப்பிடிக்க வேண்டும் .

இரண்டாம்ரக்அத்

முதல் ரக்அத்தை முடித்த பின்னர் மீண்டும் இரண்டாம் ரக்அத்திற்காகஎழ வேண்டும். எழும் போது இரண்டு ஸஜ்தாக்களுக்கிடையில் அமர்ந்ததைப் போல்அமர்ந்து இரு கைகளையும் தரையில் ஊன்றி நிலைக்கு வர வேண்டும். பின்னர்கைகளை நெஞ்சில் கட்டிக் கொள்ள வேண்டும் .

நபி (ஸல்) அவர்கள் ஒற்றையானரக்அத்களை நிறைவேற்றி விட்டு எழும் போது உட்காராமல் நிலைக்கு வரமாட்டார்கள் .

அறிவிப்பவர்: மாலிக் பின் அல்ஹுவைரிஸ் (ரலி)

நூல்: புகாரீ823

முதல் ரக்அத்தில் ஓதிய அனைத்தையும் இரண்டாம் ரக்அத்திலும் ஓதவேண்டும். எனினும் முதல் ரக்அத்தில் ஸூரத்துல் ஃபாத்திஹாவிற்கு முன்ஓதிய ஆரம்ப துஆக்கள் இரண்டாம் ரக்அத்தில் கிடையாது.

‘ நபி (ஸல்) அவர்கள்இரண்டாம் ரக்அத்துக்கு எழுந்ததும் ‘ அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்

‘ என்று ஓதத் துவங்கி விடுவார்கள். மவுனமாக இருக்க மாட்டார்கள் .

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் 941

இரண்டாம் ரத்அத்தில்சூரத்துல் ஃபாத்திஹாவை ஓத வேண்டும். அத்துடன் துணை சூராவையும் ஓத

வேண்டும் . நபி (ஸல்) அவர்கள் லுஹர் தொழுகையின் முதல் இரண்டு ரக்அத்களில்

அல்ஹம்து அத்தியாயத்தையும் , துணை அத்தியாயங்கள் இரண்டையும்

ஓதுவார்கள். பிந்திய இரண்டு ரக்அத்களில் அல்ஹம்து அத்தியாயத்தை

ஓதுவார்கள். ஒரு சில வசனங்களை எங்களுக்குக் கேட்கும் அளவிற்கு

ஓதுவார்கள். இரண்டாவது ரக்அத்தை விட முதல் ரக்அத்தில் நீளமாக

ஓதுவார்கள். இவ்வாறே அஸரிலும் , சுப்ஹிலும் செய்வார்கள் .

அறிவிப்பவர்:அபூகதாதா (ரலி)

நூல்கள்: புகாரீ 776 , முஸ்லிம் 686

பின்னர் முதல்ரக்அத்தில் செய்ததைப் போன்றே ருகூவு , ஸஜ்தாக்கள் செய்ய வேண்டும்.

அதில் ஓதவேண்டிய துஆக்களையும் ஓத வேண்டும் .

ஸஜ்தாவிலிருந்து எழும் முறை

ஸஜ்தாவிலிருந்து எழும் போது இரு கைகளையும் மாவு குழைப்பதைப் போல் மடக்கி

தரையில் ஊன்றி எழ வேண்டும் என சிலர் கூறுகின்றனர். இது தொடர்பாக ஒரு

ஹதீஸ் உள்ளது. ஆனால் அது பலவீனமாதாகும் .

‘ நபி (ஸல்) அவர்கள்தொழுகையில் எழும் போது மாவு குழைப்பவர் வைப்பதைப் போன்று கைகளைத்தரையில் வைத்து எழுவார்கள் ‘ என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள்

அறிவித்ததாக ஒரு செய்தியை ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்கள் தமது தல்கீஸுல்

ஹபீர் என்ற நூலில் குறிப்பிட்டு விட்டுப் பின்வருமாறு விளக்கம்

அளிக்கிறார்கள் .

‘ இந்தச் செய்தி ஆதாரப்பூர்வமானது அல்ல! அறியப்பட்டதும்அல்ல! இதை ஆதாரமாகக் கொள்வது கூடாது ‘ என்று இப்னுஸ் ஸலாஹ் கூறுகிறார்.

மேலும் இமாம் நவவீ அவர்கள் , ‘ இந்தச் செய்தி பலவீனமானதாகும் ; அல்லது

அடிப்படையே இல்லாத பொய்யான செய்தியாகும் ‘ என்று குறிப்பிடுகிறார்கள் .

நூல்: தல்கீஸுல் ஹபீர் பாகம்: 1 , பக்கம்: 260

தரையில் கைகளை எப்படிவைப்பது என்று கூறப்படாததால் நாம் சாதாரணமாக எப்படி எழுவோமோ அதைப்போன்று இரு முன் கைகளின் உட்பகுதியைத் தரையில் ஊன்றி எழ வேண்டும் .

முதல் இருப்பு

இரண்டாவது ரக்அத்தில் இரண்டாம் ஸஜ்தாவை முடித்து ,இருப்பில் அமரும் போது அதற்குத் தனியான முறை இருக்கிறது . கடைசிஇருப்பாக இருந்தால் ஒரு விதமாகவும் இருப்பிற்குப் பிறகு தொழுகைதொடர்ந்தால் வேறு விதமாகவும் அமர வேண்டும் . மூன்று , நான்கு ரக்அத்

தொழுகைகளின் போது முதலாம் இருப்பில் இடது கால் மீது அமர்ந்து வலது காலை

நாட்டி வைத்து அதன் விரல்களை கஅபாவை நோக்கி மடக்கி வைக்க வேண்டும்.

கடைசி இருப்பாக இருந்தால் மண்டியிட்டுத் தரையில்

இருப்பிடம் படியுமாறு அமர்ந்து இடது காலை , வலது காலுக்குக் கீழ்

வெளிப்படுத்தி , வலது காலை நாட்டி , அதன் விரல்களை கஅபாவை நோக்கி வைக்க

வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் இரண்டாம் ரக்அத்தில் அமரும்போது இடது கால் மீது அமர்ந்து , வலது காலை நாட்டி வைத்துக் கொண்டார்கள்.

கடைசி இருப்பின் போது இடது காலை வெளிப்படுத்தி , வலது காலை நாட்டி

வைத்து , தமது இருப்பிடம் தரையில் படுமாறு அமர்ந்தார்கள்.

(ஹதீஸின்சுருக்கம் ) அறிவிப்பவர்: அபூ ஹுமைத் (ரலி)

நூல்: புகாரீ 828

இருப்பின்போது அமரும் முறைகள்

நபி (ஸல்) அவர்கள் இடது கையை இடது தொடையின் மீதும் , இடது மூட்டுக் கால் மீதும் வைப்பார்கள். வலது முழங்கையின் மூட்டுப்பகுதியை வலது தொடையின் மீது வைப்பார்கள் . நூல்: நஸயீ 879

நபி (ஸல்)அவர்கள் இடது கையை இடது மூட்டுக் கால் மீதும் , வலது கையை வலது

தொடையின் மீதும் வைத்தார்கள் .

நூல் முஸ்லிம்: 909

நபி (ஸல்) அவர்கள்இரு கைகளையும் இரு மூட்டுக் கால்கள் மீதும் வைத்தார்கள் .

நூல்: முஸ்லிம் 911

விரலசைத்தல்

அத்தஹிய்யாத் இருப்பில் ஆட்காட்டி விரலைத் தவிர மற்றஎல்லா விரல்களையும் மடக்கி , ஆட்காட்டி விரலை மட்டும் நீட்டி ,அசைத்துக் கொண்டு இருக்க வேண்டும். அப்போது பார்வை ஆட்காட்டி விரலைநோக்கி இருக்க வேண்டும் .

நபி (ஸல்) அவர்கள் தொழுகையின் அமர்வில்உட்கார்ந்தால் தம்முடைய வலது முன்கையை வலது தொடையின் மீது வைத்து , தம்வலக்கையின் விரல்கைள் அனைத்தையும் மடக்கிக் கொண்டு , பெருவிரலைஒட்டியுள்ள சுட்டு விரலால் சைகை செய்வார்கள். இடது முன்கையை இடது

தொடையில் வைப்பார்கள் .

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: முஸ்லிம்1018 ;

‘… நபி (ஸல்) அவர்கள் தமது இடது முன் கையை இடது தொடைமீதும் மூட்டுக்கால் மீதும் வைத்தார்கள். தமது வலது முழங்கையை வலது தொடைமீது வைத்தார்கள். பின்பு தமது விரல்களில் இரண்டை மடக்கிக் கொண்டு(நடுவிரலையும் கட்டை விரலையும் இணைத்து) வளையம் போல் அமைத்து ,ஆட்காட்டி விரலை உயர்த்தி அதன் மூலம் (யாரையோ) அழைப்பது போல் அவர்கள்அசைத்துக் கொண்டிருந்ததை நான் பார்த்தேன் .

அறிவிப்பவர்: வாயில் பின்ஹுஜ்ர் (ரலி)

நூல்: நஸயீ 879

இச்செய்தி தாரமீ 1323 , அஹ்மத் 18115 ,இப்னு ஹுஸைமா பாகம் 1 ; பக்கம் 354 , இப்னு ஹிப்பான் பாகம் 5 ;பக்கம் 170 , தப்ரானீ கபீர் பாகம் 22 ; பக்கம் 35 , பைஹகீ பாகம் 1

; பக்கம் 310 , ஸுனனுல் குப்ரா இமாம் நஸயீ பாகம் 1 ; பக்கம் 376 ,

அல்முன்தகா இப்னுல் ஜாரூத் பாகம் 1 ; பக்கம் 62 ஆகிய நூல்களிலும்

இடம் பெற்றுள்ளது .

விமர்சனமும் விளக்கமும்

விரலசைத்தல் சம்பந்தப்பட்டஹதீஸின் அறிவிப்பாளர் வரிசையில் ஆஸிம் பின் குலைப் என்பவர் இடம்பெற்றுள்ளார். இவரைப் பற்றி இப்னுல் மதீனீ என்பவர் ‘ இவர் தனித்து

அறிவித்தால் ஆதாரமாக ஏற்றுக் கொள்ளக் கூடாது ‘ என்று விமர்சனம்

செய்துள்ளார். இதை அடிப்படையாக வைத்து சிலர் விரலசைத்தல் பற்றிய ஹதீஸ்

பலவீனமானது ‘ என்று கூறுகின்றனர். இது தவறாகும் .

ஒரு அறிவிப்பாளரைப்பற்றிக் குறை சொல்லப்பட்டால் அந்தக் குறை என்ன என்று தெளிவாகக் கூறப்படவேண்டும். அவ்வாறு கூறப்பட்டால் மட்டுமே அதைப் பரிசீலனை செய்து சரியாக

இருந்தால் ஏற்றுக் கொள்ள வேண்டும். குறிப்பாக ஒருவரைப் பற்றி நல்லவர் ,

சிறந்தவர் , நம்பகமானவர் என்று பலர் கூறியிருக்கும் போது , குறை

சொல்பவர் அவரின் குறையைத் தெளிவுபடுத்த வேண்டும். இல்லையெனில் அவரின்

விமர்சனம் நிராகரிக்கப்படும் .

இதைக் கவனத்தில் கொண்டு பார்க்கும் போதுஆஸிம் பின் குலைப் என்பவரை இப்னுல் மதீனீ என்பவரைத் தவிர அனைவரும்பாரட்டியுள்ளனர் , நம்பகமானவர் என்று கூறியுள்ளனர். இந்நிலையில் இவரைப்பற்றி விமர்சனம் செய்யும் இப்னுல் மதீனீ அவர்கள் ‘ அவர் தனித்து

அறிவித்தால் ஆதாரமாகக் கொள்ளக் கூடாது ‘ என்று சொல்கிறார்கள். ஆனால்

அதற்குரிய சான்றைச் சமர்ப்பிக்கவில்லை. எனவே இப்னுல் மதீனீ அவர்களின்

விமர்சனம் ஏற்றுக் கொள்வதற்குரிய தகுதியை இழந்து விடுகிறது .

விரலசைத்தல்தொடர்பான செய்தி ஷாத் வகையைச் சார்ந்தது என்று காரணம் சொல்லி சிலர்

மறுக்கின்றனர் . மிக நம்பகமான அறிவிப்பாளருக்கு மாற்றமாக , அதை விடக்

குறைந்த அளவு நம்பகமான அறிவிப்பாளர் அறிவிக்கும் செய்தியும் , பல

நம்பகமான அறிவிப்பாளர்களுக்கு மாற்றமாக , குறைவான எண்ணிக்கையிலுள்ள

அறிவிப்பாளர்கள் அறிவிக்கும் செய்தியும் ஹதீஸ் கலையில் ஷாத் எனப்படும் .

விரலசைத்தல் தொடர்பான செய்தியின் அறிவிப்பாளர்களை விட இஷாரா செய்தார்கள்

‘ என்று அறிவிக்கும் அறிவிப்பாளர்கள் மிக அதிகமாக உள்ளனர். எனவே

விரலசைத்தல் தொடர்பான செய்தி ஷாத் என்ற மறுக்கப்பட வேண்டிய

செய்தியாகிறது என்று கூறுகின்றனர் . இந்த விமர்சனமும் தவறாகும் . இஷரா

செய்தார்கள் என்ற செய்தியும் , அசைத்துக் கொண்டிருந்தார்கள் என்ற

செய்தியும் ஒன்றுக்கொன்று முரண்பட்டது என்று அவர்கள் எண்ணுவதால் வந்த

கோளாறாகும் .

இஷாரா என்ற வார்த்தைக்கு , சைகை செய்தல் என்பது பொருள்.

அதாவது வார்த்தையைப் பயன்படுத்தாமல் ஒரு கருத்தைத் தெரிவிப்பதற்கு இஷாரா

எனப்படும் . சில நேரங்களில் அசைவுகள் மூலமாகவும் இஷாரா அமைந்திருக்கும்.

அசைவுகள் இல்லாமலும் இஷாரா அமையலாம் . பள்ளிவாசல் எங்கே இருக்கிறது ?

என்று ஒருவரிடம் கேட்கும் போது , பள்ளிவாசல் இருக்கும் திசையை நோக்கி

அவர் விரலை நீட்டுவார். எவ்வித அசைவும் இல்லாமல் விரலை நீட்டியவாறு

பள்ளிவாசல் இருக்கும் திசையைத் தெரியப்படுத்துகின்றார். இது அசைவு இல்லாத

இஷாராவாகும் . ஒருவரை எச்சரிக்கும் போது , தொலைத்து விடுவேன் என்பது

போல் ஆட்காட்டி விரலை பல முறை திரும்பத் திரும்ப ஆட்டி எச்சரிப்பார்கள்.

இது அசைவுடன் கூடிய இஷாராவாகும் .

‘ நபி (ஸல்) அவர்கள் இஷாராச்செய்தார்கள் ‘ என்ற ஹதீஸ் ‘ விரலசைத்தார்கள் ‘ என்ற ஹதீஸுக்கு முரணாகஇருந்தால் அந்த ஹதீஸ் ஷாத் என்ற நிலைக்கு செல்லும். ஆனால் இஷாராச்

செய்தார்கள் என்ற ஹதீஸ் விரலசைத்தார்கள் என்ற ஹதீஸுக்கு எவ்விதத்திலும்

முரண்படவில்லை .

இஷாரா என்பதற்கு ‘ அசைக்கவில்லை ‘ என்று இவர்கள்

தவறாகப் பொருள் செய்வதால் , ‘ விரலசைத்தார்கள் ‘ என்ற ஹதீஸுக்கு இது

முரண்படுவதாகக் கூறி ஷாத் என்கின்றனர் . இஷாரா என்ற சொல் , அசைவு

மூலம் ஒரு கருத்தைத் தெரிவித்தல் அசைக்காமல் ஒரு கருத்தைத்

தெரிவித்தல் ஆகிய இரண்டு அர்த்தங்களைக் கொண்டதாகும். இஷாரா செய்தார்கள்

என்ற ஹதீஸுக்கு இவ்விரண்டு அர்த்தங்களில் எந்த அர்த்தம் கொடுக்க

வேண்டும் என்பதை , ‘ விரலசைத்தார்கள் ‘ என்ற ஹதீஸ் தெளிவுபடுத்துகிறது .

இஷாரா என்ற விரிந்த பொருள் உள்ள வார்த்தைக்கு நபி (ஸல்) அவர்கள் எந்த

அர்த்தத்தில் நடைமுறைப்படுத்தினார்கள் என்ற கூடுதல் விவரத்தையே

விரலசைத்தார்கள் என்ற ஹதீஸ் தருகிறது . எனவே இரண்டு ஹதீஸ்களும் ஒன்றுடன்

ஒன்று மோதவில்லை என்பதால் இது ஷாத் என்ற வகையைச் சார்ந்தது அல்ல . ‘

விரலை அசைக்க மாட்டார்கள் ‘ என்று ஒரு செய்தி அபூதாவூத் , நஸயீ ஆகிய

நூல்களில் இடம் பெற்றுள்ளது. இந்த ஹதீஸை அடிப்படையாக வைத்து சிலர் விரலை

அசைக்கக் கூடாது என்று வாதிடுகின்றனர் . அபூதாவூத் , நஸயீ ஆகிய

நூல்களில் இடம் பெறும் அந்த ஹதீஸில் முஹம்மத் பின் அஜ்லான் என்ற நபர்

இடம் பெற்றுள்ளார். இவரைப் பற்றி இமாம் ஹாகிம் உட்பட பலர் , ‘ இவர்

நினைவாற்றல் குறைவுடையவர் ‘ என்று விமர்சனம் செய்துள்ளனர். இதனால் தான்

இமாம் முஸ்லிம் அவர்கள் இவர் இடம் பெறும் ஹதீஸ்களைத் தனி ஆதாரமாகப் பதிவு

செய்யவில்லை. இவருடைய அறிவிப்புக்கு ஏற்றவாறு நம்பகமானவர்கள் ஹதீஸ்களை

அறிவித்திருந்தால் மட்டுமே இவருடைய செய்திகளைப் பதிவு செய்வார்கள்.

எனவேவிரலசைக்க மாட்டார்கள் என்ற செய்தி பலவீனமாக இருப்பதால் இதை ஆதாரமாகக்

கொண்டு , ‘ விரலசைக்கக் கூடாது ‘ என்று வாதிட முடியாது .

முதல்இருப்பில் ஓத வேண்டியவை

முதல் இருப்பில் அத்தஹிய்யாத் என்று துவங்கும்துஆவை ஓத வேண்டும் .

அத்தஹிய்யாத் துஆ

அத்தஹிய்யா(த்)து லில்லாஹிவஸ்ஸலவா(த்)து வத்தய்யிபா(த்)து அஸ்ஸலாமு அலை(க்)க அய்யுஹன்னபிய்யுவரஹ்ம(த்)துல்லாஹி வபர(க்)கா(த்)துஹு அஸ்ஸலாமு அலைனா வஅலா இபாதில்லாஹிஸ்ஸாலிஹீன் அஷ்ஹது அ(ன்)ல்லாயிலாஹ இல்லல்லாஹு வஅஷ்ஹது அன்ன முஹம்மதன்அப்துஹு வரசூலுஹு

பொருள்:

சொல் , செயல் , பொருள் சார்ந்த எல்லாக்காணிக்கைகளும் , வணக்கங்களும் , பாராட்டுகளும் அல்லாஹ்வுக்கே உரியன.நபியே உங்கள் மீது சாந்தியும் , அல்லாஹ்வின் அருளும் , அபிவிருத்தியும்ஏற்படட்டுமாக. எங்கள் மீதும் அல்லாஹ்வின் நல்லடியார்கள் அனைவர் மீதும்

சாந்தி உண்டாகட்டும். வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு

யாருமில்லை என்று நான் உறுதியாக நம்புகிறேன். மேலும் , முஹம்மது (ஸல்)

அவர்கள் இறைவனின் தூதரும் அடியாருமாவார்கள் என்றும் உறுதியாக

நம்புகிறேன் . எனத் தொழுகையில் அமரும் போது நபி (ஸல்) அவர்கள் கூறச்

சொன்னார்கள். (ஹதீஸின் சுருக்கம் )

அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி)

நூல்கள்: புகாரீ 1202 , முஸ்லிம் 609

மற்றொரு அத்தஹிய்யாத் துஆ

‘ அத்தஹிய்யா(த்)துல் முபார(க்)கா(த்)துஸ் ஸலவா(த்)துத் தய்யிபா(த்)து

லில்லாஹி அஸ்ஸலாமு அலை(க்)க அய்யுஹன் நபிய்யு வரஹ்ம(த்)துல்லாஹி

வபர(க்)கா(த்)துஹு அஸ்ஸலாமு அலைனா வஆலா இபாதில்லாஹிஸ் ஸாலிஹீன். அஷ்ஹது

அ(ன்)ல்லாயிலாஹ இல்லல்லாஹு வஅஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹி ‘

என்றுநபி (ஸல்) அவர்கள் இருப்பில் ஓதுவார்கள் .

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி)

நூல்: முஸ்லிம் 610

மேற்கூறிய இரண்டில் ஏதாவது ஒன்றை ஓதிக்கொள்ளலாம் .

ஸலவாத்

அத்திஹிய்யாத் ஓதிய பின்னர் நபி (ஸல்) அவர்கள் மீதுஸலவாத் ஓத வேண்டும் .

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களுக்கு முன்னால்அமர்ந்தார். அந்நேரத்தில் நாங்கள் நபிகளாரிடம் இருந்தோம். அப்போது , ‘அல்லாஹ்வின் தூதரே! உங்களின் மீது ஸலாம் எவ்வாறு சொல்வது என்பதை நாங்கள்அறிவோம். நாங்கள் எங்களின் தொழுகையில் எவ்வாறு உங்கள் மீது ஸலவாத்

சொல்வது ?’ என்று கேட்டார். இந்த மனிதர் இக்கேள்வியைக் கேட்காமல்இருந்திருக்கலாமே ‘ என்று நாங்கள் நினைக்கும் அளவு நபி (ஸல்) அவர்கள்மவுனமாக இருந்தார்கள். (பின்னர்) ‘ நீங்கள் என் மீது ஸலவாத் சொல்வதாகஇருந்தால்

அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் நபிய்யில் உம்மிய்யி வலா ஆலி

முஹம்மதின் கமா ஸல்லை(த்)த அலா இப்ராஹீம வஅலா ஆலி இப்ராஹீம வபாரிக் அலா

முஹம்மதின் நபிய்யில் உம்மிய்யி கமா பாரக்(த்)த அலா இப்ராஹீம வலா ஆலி

இப்ராஹீம இன்ன(க்)க ஹமீது(ன்) ம் மஜீத்

( பொருள்: இறைவா! இப்ராஹீம்

நபியின் மீதும் , இப்ராஹீம் நபியின் குடும்பத்தினர் மீதும் நீ அருள்

புரிந்ததைப் போல் எழுதப் படிக்கத் தெரியாத முஹம்மத் நபியின் மீது உன்

அருளைப் பொழிவாயாக! இப்ராஹீம் நபியின் மீதும் இப்ராஹீம் நபியின்

குடும்பத்தினர் மீதும் நீ அபிவிருத்தி செய்ததைப் போல் எழுதப் படிக்கத்

தெரியாத முஹம்மத் நபியின் மீது நீ அபிவிருத்தி செய்வாயாக !) என்று

கூறுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் .

அறிவிப்பவர்: உக்பாபின் அம்ர் (ரலி)

நூல்: அஹ்மத் 16455

மற்றொரு ஸலவாத்

அல்லாஹும்மஸல்லி அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லை(த்)த அலா இப்ராஹீமவஅலா ஆலி இப்ராஹீம இன்ன(க்)க ஹமீது(ன்)ம் மஜீத். அல்லாஹும்ம பாரிக் அலா

முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா பாரக்(த்)த அலா இப்ராஹீம வஅலா ஆலி

இப்ராஹீம இன்ன(க்)க ஹமீது(ன்)ம் மஜீத் .

பொருள்: இறைவா! இப்ராஹீம் (அலை)

அவர்கள் மீதும் , இப்ராஹீம் (அலை) அவர்களின் குடும்பத்தார் மீதும் நீ

அருள் புரிந்ததைப் போல் முஹம்மது (ஸல்) அவர்கள் மீதும் , முஹம்மது

(ஸல்) அவர்களின் குடும்பத்தார் மீதும் நீ அருள் புரிவாயாக! நிச்சயமாக நீ

புகழுக்குரியவனாகவும் , கண்ணியத்திற்குரியவனாகவும் இருக்கிறாய் . இறைவா!

இப்ராஹீம் (அலை) அவர்களுக்கும் , இப்ராஹீம் (அலை) அவர்களின்

குடும்பத்தாருக்கும் நீ விருத்தி செய்தது போல் முஹம்மத் (ஸல்)

அவர்களுக்கும் , முஹம்மத் (ஸல்) அவர்களின் குடும்பத்தாருக்கும் விருத்தி

செய்வாயாக! நிச்சயமாக நீ புகழுக்குரியவனாகவும் ,

கண்ணியத்திற்குரியவனாகவும் இருக்கிறாய் .

அறிவிப்பவர்: கஅப் பின் உஜ்ரா(ரலி)

நூல்: புகாரீ 3370

இரண்டாம் ரக்அத் இருப்பில் விரும்பிய அனைத்துதுஆவையும் கேட்கலாம் .

‘ நீங்கள் ஒவ்வொரு இரண்டு ரக்அத்திலும் அமரும்போது அத்தஹிய்யா(த்) லில்லாஹி… கூறுங்கள். (பின்னர்) தமக்கு விரும்பியதுஆவைத் தேர்வு செய்து அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யுங்கள் ‘ என்றுநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் .

அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி)

நூல்:நஸயீ 1151

மூன்றாம் ரக்அத்

இரண்டாம் ரக்அத் முடித்து மூன்றாம்ரக்அத்திற்கு எழும் போது அல்லாஹு அக்பர் என்று கூறி , எழுந்து இருகைகளையும் காது வரை அல்லது தோள்புஜம் வரை உயர்த்திக் கைகளை நெஞ்சில்

கட்டிக் கொள்ள வேண்டும் . பின்னர் சூரத்துல் பாத்திஹா மட்டும் ஓதினால்

போதுமானது. விரும்பியவர் வேறு துணை சூராக்களை ஓதிக் கொள்ளலாம்.

.

நபி (ஸல்) அவர்கள்இரண்டாம் ரக்அத்திலிருந்து எழும் போது தமது இரு கைகளையும்

உயர்த்துவார்கள் .

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: புகாரீ 739

நிலையில் ஓத வேண்டியதைஓதிய பின்னர் ஏற்கனவே கூறிய படி ருகூவு , ஸஜ்தாக்களை நிறைவேற்றவேண்டும் .

நான்காம் ரக்அத்

மூன்றாம் ரக்அத் முடித்த பின்னர் நான்காம்ரக்அத்திற்காக அல்லாஹு அக்பர் என்று கூறி எழ வேண்டும். மூன்றாம்ரக்அத்தில் கைகளை உயர்த்தியதைப் போல் நான்காம் ரக்அத்துக்கு எழும் போது

கைகளை உயர்த்தாமல் நெஞ்சில் கட்டிக் கொள்ள வேண்டும். மூன்றாம்

ரக்அத்தில் செய்ததைப் போன்றே அனைத்துக் காரியங்களையும் செய்ய வேண்டும் .

நான்காம் ரக்அத்தில் இரண்டு ஸஜ்தாக்கள் செய்த பின்னர் இருப்பில் அமர

வேண்டும். இருப்பில் அமரும் போது மண்டியிட்டுத் தரையில் இருப்பிடம்

படியுமாறு அமர்ந்து , இடது காலை வலது காலுக்குக் கீழ் வெளிப்படுத்தி

வலது காலை நாட்டி வைக்க வேண்டும்.

பின்னர் முதல் இருப்பில் ஓதிய அத்தஹிய்யாத் , ஸலவாத்ஆகியவற்றை ஓத வேண்டும். அத்துடன் பின் வரும் துஆக்களையும் ஓத வேண்டும் .

இருப்பில் ஓதும் துஆக்கள்

‘ உங்களில் ஒருவர் கடைசி தஷஹ்ஹூதை ஓதி முடித்த

பின் , நரக வேதனை , கப்ரு வேதனை , வாழ்வு மற்றும் மரணத்தின் சோதனை ,

தஜ்ஜால் மூலம் ஏற்படும் தீங்கு ஆகிய நான்கை விட்டும் அல்லாஹ்விடம்

பாதுகாப்பு தேடட்டும் ‘ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் .

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் 926

அத்தஹிய்யாத் அமர்வில்இருக்கும் போது நான்கு விஷயங்களிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக்

கோருங்கள் .

‘ அல்லாஹும்ம இன்னீ அவூது பி(க்)க மின் அதாபி ஜஹன்னம்

வமின் அதாபில் கப்ரி வமின் ஃபித்ன(த்)தில் மஹ்யா வல் மமாத் , வமின்

ஷர்ரி ஃபித்ன(த்)தில் மஸீஹித் தஜ்ஜால்.

பொருள்: இறைவா! நான் உன்னிடம்நரகத்தின் வேதனையிலிருந்தும் , கப்ரின் வேதனையிலிருந்தும் , வாழ்வுமற்றும் இறப்பின் சோதனையிலிருந்தும் , தஜ்ஜாலால் ஏற்படும் குழப்பத்தின்தீங்கிலிருந்தும் பாதுகாப்பு தேடுகிறேன் .

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் 924

‘ அல்லாஹ்வின் தூதரே! தொழுகையில் ஓதுவதற்குரிய ஒரு

துஆவை எனக்குக் கற்றுத் தாருங்கள் ‘ என்று நான் கேட்டேன் .

அல்லாஹும்ம இன்னீ ளலம்(த்)து நஃப்ஸீ ளுல்மன் கஸீரன் வலா யக்ஃபிருத் துனூப

இல்லா அன்(த்)த ஃபக்ஃபிர்லீ மக்ஃபிர(த்)தன் மின் இந்தி(க்)க வர்ஹம்னீ

இன்ன(க்) க அன்(த்)தல் கஃபூருர் ரஹீம் .

( பொருள்: இறைவா! எனக்கே நான்

அதிகம் அநீதி இழைத்துக் கொண்டேன். உன்னைத் தவிர வேறு எவரும் பாவங்களை

மன்னிக்க முடியாது. எனவே , என்னை மன்னிப்பாயாக! மேலும் , எனக்கு அருள்

புரிவாயாக! நிச்சயமாக நீ பாவங்களை மன்னிப்பவனும் நிகரில்லா

அன்புடையோனுமாய் இருக்கிறாய்) என்று கூறுவீராக ‘ என நபி (ஸல்) அவர்கள்

பதிலளித்தார்கள் .

அறிவிப்பவர்: அபூபக்ர் (ரலி)

நூல்கள்: புகாரீ 834 ,முஸ்லிம் 4876

அத்தஹிய்யாத் ஓதிய பின்னரோ , அல்லது மேற்கூறிய துஆக்கள்

ஓதி முடித்த பின்னரோ நமக்கு ஏற்படும் தேவைகளை நமது தாய் மொழியிலேயே

கேட்டு துஆச் செய்யலாம் .

‘( அத்தஹிய்யாத் ஓதிய பின்னர்) உங்களுக்கு

விருப்பமான துஆவைத் தேர்ந்தெடுத்து அதன் மூலம் துஆச் செய்யுங்கள் ‘

என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் .

அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி)

நூல்கள்: புகாரீ 835 , முஸ்லிம் 609

ஸலாம் கூறி முடித்தல்

இதன்பின்னர் தொழுகையின் இறுதியாக அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ் என்று

வலது புறமும் , இடது புறமும் கூற வேண்டும் .

வலது புறமும் , இடதுபுறமும் திரும்பி ‘ அஸ்ஸலாமு அலை(க்)கும் வரஹ்ம(த்)துல்லாஹ் ‘ என்று நபி(ஸல்) அவர்கள் ஸலாம் கூறுவார்கள் .

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின்மஸ்வூத் (ரலி)

நூல்கள்: திர்மிதீ 272 , அபூதாவூத் 845 , இப்னுமாஜா904 , அஹ்மத் 3516

நபி (ஸல்) அவர்கள் தமது வலது பக்கமும் , இடதுபக்கமும் ஸலாம் கூறும் போது அவர்களது கன்னத்தின் வெண்மையை நான்பார்க்கும் அளவுக்குத் திரும்பியதைக் கண்டேன் .

அறிவிப்பவர்: ஸஅது (ரலி)

நூல்: முஸ்லிம் 916

நிதானமாகச் செய்தல்

தொழுகையில் மேற்கூறிய காரியங்கள்

அனைத்தையும் நிதானமாகச் செய்ய வேண்டும். அவசரம் காட்டக் கூடாது. அவ்வாறு

அவசரமாகத் தொழும் தொழுகை ஏற்றுக் கொள்ளப்படாது .

நபி (ஸல்) அவர்கள்பள்ளிக்கு வந்தார்கள். ஒரு மனிதர் பள்ளிக்கு வந்து தொழலானார். (தொழுது

முடித்ததும்) நபி (ஸல்) அவர்களுக்கு ஸலாம் கூறினார். நபி ( ஸல்) அவர்கள்

பதில் ஸலாம் கூறினார்கள். பின்பு ‘ திரும்பிச் சென்று நீர் தொழுவீராக!

நீர் தொழவே இல்லை ‘ என்று கூறினார்கள். அந்த மனிதர் முன்பு தொழுதது

போலேவே மீண்டும் தொழுது விட்டு வந்து நபி (ஸல்) அவர்களுக்கு ஸலாம்

கூறினார். ‘ திரும்பிச் சென்று தொழுவீராக நீர் தொழவே இல்லை ‘ என்று நபி

(ஸல்) அவர்கள் கூறினார்கள். இவ்வாறு மூன்று தடவை நடந்தது. அதன் பிறகு

அந்த மனிதர் ‘ சத்திய மார்க்கத்துடன் உங்களை அனுப்பியுள்ள இறைவன் மீது

ஆணையாக! இவ்வாறு தொழுவதைத் தவிர வேறு எதையும் நான் அறிந்திருக்கவில்லை ;

எனவே எனக்குக் கற்றுத் தாருங்கள் ‘ என்று கேட்டார் . ‘ நீர் தொழுகைக்காக

நின்றதும் தக்பீர் கூறுவீராக! பின்னர் குர்ஆனில் உமக்குத் தெரிந்தவற்றை

ஓதுவீராக! பின்னர் நிதானமாக ருகூவு செய்வீராக! பின்னர் ருகூவிலிருந்து

எழுந்து நேராக நிலைக்கு வருவீராக! பின்னர் நிதானமாக ஸஜ்தாச் செய்வீராக!

ஸஜ்தாவிலிருந்து எழுந்து நிதானமாக உட்கார்வீராக! இவ்வாறே தொழுகை

முழுவதும் செய்வீராக! ‘ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் .

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்கள்: புகாரீ 757 , முஸ்லிம் 602

தொழுகைக்குப் பின் ஓத வேண்டிய துஆக்கள்

அல்லாஹு அக்பர் (அல்லாஹ்மிகப் பெரியவன் )

நபி (ஸல்) அவர்கள் தொழுகையை முடித்து விட்டார்கள்

என்பதைத் தக்பீர் மூலம் நான் அறிந்து கொள்வேன் .

அறிவிப்பவர்: இப்னுஅப்பாஸ் (ரலி)

நூல்கள்: புகாரீ 842 , முஸ்லிம் 917

நபி (ஸல்) அவர்கள்தொழுகையை முடித்த பின்னர் , ( அஸ்தஃபிருல்லாஹ் என்று கூறி) மூன்று முறைபாவமன்னிப்புத் தேடுவார்கள். மேலும்

அல்லாஹும்ம அன்(த்)தஸ் ஸலாம்

, வமின்(க்)கஸ் ஸலாம் , தபாரக்(த்)த தல் ஜலாலி வல்இக்ராம் ( பொருள்:

இறைவா! நீ சாந்தியளிப்பவன். உன்னிடமிருந்தே சாந்தி ஏற்படுகிறது ,

மகத்துவமும் , கண்ணியமும் உடையவனே! நீ பாக்கியமிக்கவன்!) என்று

கூறுவார்கள் .

அறிவிப்பவர்: ஸவ்பான் (ரலி)

நூல்: முஸ்லிம் 931

லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீ(க்)க லஹு லஹுல் முல்(க்)கு வலஹுல் ஹம்து

வஹுவ அலா குல்லி ஷையின் கதீர். அல்லாஹும்ம லாமானிஅ லிமா அஃ(த்)தய்(த்)த

வலா முஃ(த்)திய லிமா மனஃ(த்)த வலா யன்ஃபவு தல் ஜத்தி மின்(க்)கல் ஜத்து

( பொருள்: வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர எவருமில்லை. அவன்

தனித்தவன். அவனுக்கு நிகர் எவருமில்லை. ஆட்சியதிகாரம் அவனுக்குரியதே!

புகழும் அவனுக்குரியதே! அவன் எல்லாப் பொருட்களின் மீதும் ஆற்றலுள்ளவன்.

இறைவா! நீ கொடுப்பதை எவரும் தடுக்க முடியாது. நீ தடுப்பதை எவரும்

கொடுக்க முடியாது. எந்தச் செல்வந்தரின் செல்வமும் அவருக்கு உன்னிடம்

பயன் அளிக்காது) என கடமையான தொழுகைக்குப் பிறகு நபி (ஸல்) அவர்கள் கூறக்

கூடியவர்களாக இருந்தார்கள் .

அறிவிப்பவர்: முகீரா பின் ஷுஅபா (ரலி)

நூல்கள்: புகாரீ 844 , முஸ்லிம் 933

‘ அல்லாஹும்ம இன்னீ

அவூதுபி(க்)க மினல் புக்லி , வஅவூதுபி(க்)க மினல் ஜுப்னி ,

வஅவூதுபி(க்)க அன் உரத்த இலா அர்தலில் உமுரி , வஅவூது பி(க்)க மின்

பித்ன(த்) தித் துன்யா , வஅவூது பி(க்)க மின் அதாபில் கப்ர் .

( பொருள்:

இறைவா! உன்னிடம் கஞ்சத்தனத்திலிருந்து பாதுகாப்புத் கோருகிறேன்.

கோழைத்தனத்திலிருந்து பாதுகாப்புக் கோருகிறேன். தள்ளாத வயதுக்கு நான்

தள்ளப்படுவதிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன். இம்மையின்

சோதனையிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன். மேலும் மண்ணறையின்

வேதனையிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்) என இறைவனிடம்

தொழுகைக்குப் பிறகு நபி (ஸல்) அவர்கள் பாதுகாப்புத் தேடினார்கள் .

அறிவிப்பவர்: சஅத் (ரலி)

நூல்: புகாரீ 5384 , 2822

‘ அல்லாஹும்மஅஇன்னீ அலா திக்ரி(க்)க வஷுக்ரி(க்)க வஹுஸ்னி இபாத(த்)திக் ( பொருள்:

இறைவா! உன்னை நினைப்பதற்கும் , உனக்கு நன்றி செலுத்துவதற்கும் , உன்னை

அழகான முறையில் வணங்குவதற்கும் எனக்கு உதவுவாயாக!) என ஒவ்வொரு

தொழுகைக்குப் பின்பும் கூறுவதை விட்டுவிடாதே ‘ என்று நபி (ஸல்) அவர்கள்

கூறினார்கள் .

அறிவிப்பவர்: முஆத் (ரலி)

நூல்கள்: அபூதாவூத் 1301 ,அஹ்மத் 21109

‘ லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீ(க்)க லஹு லஹுல்

முல்(க்)கு வலஹுல் ஹம்து வஹுவ அலா குல்லி ஷையின் கதீர். லாஹவ்ல வலா

குவ்வ(த்)த இல்லா பில்லாஹ். வலா நஅபுது இல்லா இய்யாஹு லஹுன் னிஃம(த்)து

வலஹுல் ஃபழ்லு வலஹுஸ் ஸனாவுல் ஹஸனு லாயிலாஹ இல்லல்லாஹு முக்லிஸீன

லஹுத்தீன வலவ்கரிஹல் காஃபிரூன்

( பொருள்: வணக்கத்திற்குரியவன்

அல்லாஹ்வைத் தவிர எவருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணையில்லை.

ஆட்சியதிகாரம் அவனுக்குரியதே! புகழும் அவனுக்குரியதே! அவன் அனைத்துப்

பொருட்கள் மீதும் ஆற்றலுடையவன். நல்லவற்றைச் செய்வதற்கோ ,

தீயவற்றிலிருந்து விலகுவதற்கோ அல்லாஹ்வின் துணையின்றி இயலாது.

வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர எவருமில்லை. அவனைத் தவிர

வேறெவரையும் நாங்கள் வணங்க மாட்டோம். அருள் அவனுடையது. உபகாரம்

அவனுடையது. அழகிய புகழ்களும் அவனுடையது. வணக்கத்திற்குரியவன்

அல்லாஹ்வைத் தவிர எவருமில்லை. நிகராகரிப்போர் வெறுத்தாலும் கலப்பற்ற

தூய்மையான வணக்கங்கள் அவனுக்கு மட்டுமே உரியன) என ஒவ்வொரு தொழுகைக்குப்

பிறகும் ஸலாம் கூறும் போது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் .’

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஸுபைர் (ரலி)

நூல்: முஸ்லிம் 935

‘ யார்ஒவ்வொரு தொழுகைக்குப் பின்பும் சுப்ஹானல்லாஹ் என்று 33 தடவைகளும் ,

அல்ஹம்துலில்லாஹ் என்று 33 தடவைகளும் , அல்லாஹு அக்பர் என்று 33

தடவைகளும் ஆக மொத்தம் 99 தடவைகள் கூறிவிட்டு 100 வதாக

லாயிலாஹ

இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீ(க்)க லஹு லஹுல் முல்(க்)கு வலஹுல் ஹம்து வஹுவ

அலா குல்லி ஷையின் கதீர்

( பொருள்: வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர

எவருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணையில்லை. ஆட்சியதிகாரம்

அவனுக்குரியதே! புகழும் அவனுக்குரியதே! அவன் அனைத்துப் பொருட்கள் மீதும்

ஆற்றலுடையவன் ) எனக் கூறுகிறாரோ அவரது பாவங்கள் கடல் நுரையளவு

இருந்தாலும் மன்னிக்கப்படும் ‘ என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் .

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் 939

நபி (ஸல்) அவர்கள்வித்ர் தொழுகைக்கு ஸலாம் கொடுக்கும் போது

ஸுப்ஹானல் மலி(க்)குல்குத்தூஸ் ( பரிசுத்தமான அரசன் (அல்லாஹ்) தூய்மையானவன்) என்று மூன்று முறைகூறுவார்கள் .

அறிவிப்பவர்: அப்துர்ரஹ்மான் பின் அப்ஸா (ரலி)

நூல்கள்:அஹ்மத் 14814 , நஸயீ 1717 , அபூதாவூத் 1218

thanks:onlinepj



No comments:

Post a Comment


நீச்சலுடையை எறிந்து விட்டு நிகாபுக்கு ஏன் மாறினேன்?


முன்னால் அமெரிக்க நடிகை ''ஸாரா போக்கர்''
Niqab is the new symbol of woman's liberation.

[ நான் 'நிகாப்' அணிந்து கொண்ட செய்தி வெளியானதுதான் தாமதம் அமெரிக்காவில் ஏதோ பூகம்பமே வெடித்துவிட்டதுபோல் அங்குள்ள அரசியல்வாதிகளும், வாடிகனைச்சேர்ந்த மதகுருமார்களுடன், (போலியான) பெண் விடுதலைக்காக போராடக் கூடியவர்களும், உலக மனித உரிமைக்கழகமும் குய்யோ முறையோ என்று ஒப்பாரி வைக்க ஆரம்பித்தனர்.உலகெங்கிலுமுள்ள எல்லா ஊடகங்களிலும், விருப்பத்துடனோ, விருப்பமின்றியோ, 'ஸ்டைல்' என்ற பெயரில் மிகமிகக் குறைவாக, ஏறத்தாழ உடையே இல்லை என்று சொல்லுமளவுக்கு அணிவதற்கு பெண்கள் வற்புறுத்தப்படுகிறார்கள். ஹிஜாபை நான் அணிந்து கொண்டதால் எனக்குக் கிடைத்ததுபோன்று, ஒரு பெண்ணுக்குக் கிடைக்கும் நிம்மதி, மகிழ்ச்சி ஆகியவைப் பற்றி அறிந்து கொள்ள பெண்களுக்கு உரிமை இருக்கிறது.
எனக்குத்தெரிந்து ஏராளமான மேற்கத்திய பெண்கள் 'நிகாப்' அணிகிறார்கள். திருமணம் முடிக்காதவர்கள் கூட அதில் அடக்கம். ஒரு விஷயம் மிகத்தெளிவானது, 'நிகாப்' அணியும் பெண்ணுக்கு குடும்பத்தார்களின், சுற்றத்தார்களின், சமூகத்தின் ஆதரவு இருக்கிறதோ இல்லையோ அதைப்பற்றி அவர்கள் கவலைப்படமாட்டார்கள். ஏனெனில் அவர்கள் மனதில் ''அந்த உடை அல்லாஹ்வுக்கு பிடித்தமானது'' என்கின்ற நம்பிக்கை அழுத்தமாக பதிந்துவிட்டது.பெண்களின் புதிய சுதந்திரக் குறியீடு 'நிகாப்' தான். நீச்சலுடை அல்ல. - முன்னால் அமெரிக்க நடிகை ஸாரா போக்கர் ]
அமெரிக்காவின் இதயப்பகுதியில் பிறந்த அமெரிக்கப்பெண் நான். மற்றவர்களைப்போல் நானும் அந்தப் பெரிய நகரத்தின் கவர்ச்சிகளுக்கு ஆட்பட்டவளாகத் தான் வளர்ந்தேன். கவர்ச்சிக்கேந்திரமான ஃபுளோரிடாவுக்கு, தெற்கு மியாமி கடர்கரையின் நாகரீக வாழ்வைத்தேடி ஓடினேன்.
ஒரு சாதாரண மேற்கத்திய பெண் எப்படி இருப்பாளோ அப்படியேதான் நானும் இருந்தேன்; ஆம்! என் அழகின்மீது அதிக ஈடுபாடு கொண்டவளாக இருந்தேன். நான் வளர வளர, நாகரீகத்துக்கு அடிமையாகி விட்டேன் என்பதை நன்றாகவே புரிந்து கொண்டேன். எனது அழகான தோற்றமே என்னை பிணைக்கைதியாக்கி விட்டதை உணர்ந்தேன்.
நாகரீக வாழ்வை மேற்கொண்டால் வாழ்க்கையின் தேவைகளுக்கான பொருளாதாரத்துக்கு என்ன செய்வது? இரண்டுக்கும் இடைவெளி அதிகமானது. மதுபானங்கள் பரிமாறப்படும் கேளிக்கை பார்ட்டியை விட்டு விலகி தியானம், சமூக சேவை போன்றவற்றில் கவனத்தை திருப்பினேன். ஆனால் இவைகளால் பெரிய பலன் ஏதும் கிட்டவில்லை. அவ்வப்போது போட்டுக்கொள்ளும் வலி மாத்திரைகள் தற்காலிக நிவாரணத்தைத்தானே கொடுக்கும். அதற்கு மேல் எந்த பலனையும் கொடுக்காது அல்லாவா? என்னுடைய மன வலிக்கு அழுத்தமான தீர்வுதான் என்ன?
செப்டம்பர் 11, 2001. அப்பொழுதுதான் இஸ்லாத்தைப்பற்றி, இஸ்லாமிய கலச்சாரத்தைப்பற்றி, அதன் மதிப்பைப்பற்றி கேள்விப்படுகிறேன். அதுவரை இஸ்லாம் என்றாலே பெண்களை ''கூடாரத்துக்குள்'' அடைத்து வைத்து கொடுமைப்படுத்தும் மதம், மனைவியாக வருபவளை அடித்து உதைக்கும் மதம், பயங்கரவாத மதமாகத்தான் அறிந்து வைத்திருந்தேன்.
அப்பொழுதுதான் ஒருநாள் திருக்குர்ஆனை காணும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. ஒரே மாதிரியான மேற்கத்திய கருத்துக்களுக்கு மாற்றமான அதன் நடை என்னை மிகவும் கவர்ந்தது. இருப்பு, வாழ்க்கை, படைப்பு, படைத்தவனுக்கும் படைப்புகளுக்கும் உள்ள தொடர்பு ஆகியவற்றைப் பற்றிய விளக்கங்கள் என்னை மிகவும் கவர்ந்தன.
இதயத்தோடு ஒன்றிப்போகும் அதன் வார்ததைகளை விளக்க எவருமே தேவையில்லை எனும் அளவுக்கு என் ஆன்மாவோடு (அதன் வார்த்தைகள்) ஒன்றிப்போனது என்றுதான் சொல்வேன். இறுதியாக உண்மை எது என்பதை விளங்கிக்கொண்டேன். கடைவீதிக்குச்சென்று நீளமான அழகான 'கவுன்' ஒன்றை வாங்கி வந்தேன். முஸ்லீம் பெண்மணிகள் தலையை மறைக்க அணியும் துணியையும் கட்டிக்கொண்டு நான் தினசரி நடந்து செல்லும் வீதிகளில் நடக்க ஆரம்பித்தேன். அதே வீதியில்தான் நேற்றுவரை கவர்ச்சிகரமான குட்டையான (ஷார்ட்ஸ்) மற்றும் நீச்சலுடைகளுடன் நடந்து சென்றேன். வீதியில் அதே பழைய முகங்கள், அதே பழைய கடைகளைத்தான் பார்க்கிறேன். ஆனால் மிகப்பெரிய வேறுபாட்டை என் உள்ளம் காண்கிறது. ஆம் சுதந்திரப்பெண்மணியாக இப்போது என்னை நான் உணர்கிறேன். மற்றவர்கள் என் கவர்ச்சியான உடலமைப்பை ஆசையோடு நோக்கும் அந்த பார்வையிலிருந்து தப்பித்து நான் விடுதலை அடைந்து விட்டது போல், என்னை சுற்றியிருந்த விலங்குகள் அறுந்து விழுவது போல் உணர்ந்தேன்.
உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் கவர்ச்சியான என் உடலமைப்பை வேட்டையாடும் மனிதர்களிடமிருந்து எனக்கு முழு விடுதலை கிடைத்துவிட்டது என்று உள்ளம் குதூகளித்தது. அந்த நேரத்தில் என் மனம் அடைந்த நிம்மதியை எப்படி வர்ணிப்பது என்று எனக்கு சொல்லத் தெரியவில்லை.அதுமட்டுமின்றி எனது தோள்களில் இருந்து 'பெரிய சுமை' கீழிறக்கி வைக்கப்பட்டது போல் உணர்ந்தேன். முன்போல நான் ஷாப்பிங் செய்வதிலும், ஒப்பனை செய்து கொள்வதிலும், கூந்தலைச் சரி செய்து கொள்வதிலும் எனது நேரத்தையெல்லாம் வீணடிப்பது நின்றுபோனது. நான் முழு சுதந்திரம் அடைந்துவிட்டதாக என்று உணர்ந்தேன்.
''பெண்களை அவமதிக்கும் மதம்'' என்று சிலரால் வர்ணிக்கப்படுகின்ற இஸ்லாத்தை உளப்பூர்வமாக முழு மனதோடு ஏற்றுக்கொண்டேன். அவர்கள் சொல்லும் காரணமே, இஸ்லாத்தை எனக்கு இன்னும் நெறுக்கமாக்கியது. முஸ்லீமான ஒருவரை நான் திருமணமும் செய்து கொண்டேன். நான் ஹிஜாபை (Hijab) அணிந்து கொண்டாலும் நிகாபை (Niqab) அணிந்து கொள்ள வேண்டும் என்பதிலேயே மிகவும் ஆர்வமாக இருந்தேன்.
எனது முஸ்லீம் கணவரிடம் எனது எண்ணத்தை வெளிப்படுத்தியபோது 'ஹிஜாப்' அணிந்து கொள்வதுதான் பெண்களுக்கு கடமையே தவிர 'நிகாப்' அல்ல, என்றார். (ஹிஜாப் என்பது பெண்கள் முகம் மற்றும் கை கால்கள் தவிர உடம்பின் மற்ற பகுதிகளை மறைப்பது, 'நிகாப்' என்பது முகத்தையும் மறைப்பது கண்களைத்தவிர)ஒன்றரை ஆண்டுகளுக்குப்பிறகு என் கணவரிடம் மறுபடியும் எனது 'நிகாப்' இன் மீது உள்ள ஆசையை தெரிவித்தேன். இம்முறை நான் சொன்ன காரணத்தை அவரால் மட்டுமல்ல வேறு எவராலும் தட்ட முடியாது. ஆம்! என் பிரியமுள்ள கணவரிடம் சொன்னேன், "நான் 'நிகாப்' அணிவது அல்லாஹ்வுக்கு மிகவும் பிடித்தமானதாக இருக்கும், அத்துடன் அதிக அடக்கமாக இருப்பதனால் என் மன அமைதியையும் அது அதிகப்படுத்தும் என்று நம்புகின்றேன்'' என்றேன்.
இம்முறை என் இனிய கணவர் என் கருத்துக்கு மறுப்பேதும் சொல்லாமல் உடனே ஏற்றுக் கொண்டார். அதுமட்டுமின்றி என்னை உடனே கடை வீதிக்கு அழைத்துச்சென்று அதனை வாங்கியும் கொடுத்து விட்டார். அல்ஹம்துலில்லாஹ்.
நான் 'நிகாப்' அணிந்து கொண்ட செய்தி வெளியானதுதான் தாமதம் அமெரிக்காவில் ஏதோ பூகம்பமே வெடித்துவிட்டதுபோல் அங்குள்ள அரசியல்வாதிகளும், வாடிகனைச்சேர்ந்த மதகுருமார்களுடன், (போலியான) பெண் விடுதலைக்காக போராடக் கூடியவர்களும், உலக மனித உரிமைக்கழகமும் குய்யோ முறையோ என்று ஒப்பாரி வைக்க ஆரம்பித்தனர். அந்த ஒப்பாரியுடன் எகிப்து நாட்டு (!!!) அதிகாரிகளும் சேர்ந்து கொண்டு 'நிகாப்'' அணிவது பிற்போக்குத்தனம் என்று புலம்பித்தீர்த்தனர்.
பெண்களின் உரிமைக்காக போராடுவதில் நானும் சளைத்தவள் அல்ல. ஆனால் தற்போது ஒரு முஸ்லீம் பெண்மணியாக இருந்து பெண்களுக்கு கிடைக்க வேண்டிய உண்மையான உரிமைகளுக்காக போராடுகிறேன். குடும்பத்தில் பெண்களுக்கு உள்ள முக்கியத்துவம் பற்றிய கருத்துக்களை முன்னிறுத்துகிறேன். நல்ல முஸ்லிம்களாக இருப்பதற்கும், கணவன்மார்களுக்கு ஆதரவு கொடுத்து பொறுப்புகளை எடுத்துக் கொள்வதற்கும், குழந்தைகளை நல்லவர்களாக வளர்த்து மனித சமுதாயத்திற்கு வழிகாட்டக் கூடியவர்களாக ஆக்குவதற்கு முஸ்லிம் பெண்களுக்கு என்னால் ஆனதைக் கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறேன்.
நம்மைப் படைத்த அல்லாஹ்வை திருப்திப் படுத்துவதற்காக, 'நிகாப்' அல்லது 'ஹிஜாப்' அணியும் நமது உரிமைக்காகப் போராடும் அதே வேளையில்; ஹிஜாப், நிகாப் அணியாத பெண்களுக்கு, நாம் இதை ஏன் அணிய வேண்டும், ஏன் இது நமக்கு மிகவும் அவசியம் என்பதை எல்லாம் எடுத்துச் சொல்ல வேண்டும்.உலகெங்கிலுமுள்ள எல்லா ஊடகங்களிலும், விருப்பத்துடனோ, விருப்பமின்றியோ, 'ஸ்டைல்' என்ற பெயரில் மிகமிகக் குறைவாக, ஏறத்தாழ உடையே இல்லை என்று சொல்லுமளவுக்கு அணிவதற்கு பெண்கள் வற்புறுத்தப்படுகிறார்கள். ஹிஜாபை நான் அணிந்து கொண்டதால் எனக்குக் கிடைத்ததுபோன்று, ஒரு பெண்ணுக்குக் கிடைக்கும் நிம்மதி, மகிழ்ச்சி ஆகியவைப் பற்றி அறிந்து கொள்ள பெண்களுக்கு உரிமை இருக்கிறது. இதை நான் முஸ்லிமல்லாத முன்னாள் பெண்மணியாகவும் உரக்கச்சொல்வேன்.
எனக்குத்தெரிந்து ஏராளமான மேற்கத்திய பெண்கள் 'நிகாப்' அணிகிறார்கள். திருமணம் முடிக்காதவர்கள் கூட அதில் அடக்கம். ஒரு விஷயம் மிகத்தெளிவானது, 'நிகாப்' அணியும் பெண்ணுக்கு குடும்பத்தார்களின், சுற்றத்தார்களின், சமூகத்தின் ஆதரவு இருக்கிறதோ இல்லையோ அதைப்பற்றி அவர்கள் கவலைப்படமாட்டார்கள். ஏனெனில் அவர்கள் மனதில் ''அந்த உடை அல்லாஹ்வுக்கு பிடித்தமானது'' என்கின்ற நம்பிக்கை அழுத்தமாக பதிந்துவிட்டது. அடித்துச்சொல்வேன் பெண்களின் புதிய சுதந்திரக் குறியீடு 'நிகாப்' தான் என்று.
சௌத் பீச்சில் என் நீச்சலுடையையும், கவர்ச்சியான மேற்கத்திய வாழ்க்கை முறையையும் கழற்றி எறிந்து விட்டு, என்னைப் படைத்தவனோடு நிம்மதியாக இருப்பதிலும் சுயமரியாதையுடனும் கண்ணியத்துடனும் வாழும் ஒரு பெண்ணாக என்னைச் சுற்றியிருப்பவர்களோடு வாழ்வதில்தான் எனக்கு அளவிலா மகிழ்ச்சியும் நிம்மதியும் இருக்கிறது. அதனால்தான் நான் 'நிகாப்' அணிவதைத் தேர்ந்தெடுத்துக் கொண்டேன். அதை அணியும் உரிமைக்காக நான் உயிரை விடவும் தயார் தான். நேற்றுவரை நீச்சலுடையை பெண்ணினத்தின் சுதந்திரக் குறியீடாக நினைத்திருந்தேன். ஆனால் அது முற்றிலும் தவறு. பெண் விடுதலையின் குறியீடு 'நிகாப்'தான். அது கொடுக்கும் கண்ணியத்தை விட்டுவிட்டு, அசிங்கமான மேற்கத்திய வாழ்க்கை முறையைத் தேர்வு செய்யும் பெண்களே, ''நீங்கள் எதை இழந்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை அறிய மாட்டீர்கள்.''
தமிழ் மொழியாக்கம் . எம்.ஏ. முஹம்மது அலீ,
adm. www.nidur.info
[ Sara Bokker is a former actress, model, fitness instructor, and activist. Currently, Sara is director of communications at The March for Justice, a cofounder of The Global Sisters Network, and producer of the infamous Shock & Awe Galleryய©.]
For read in English please click below
:
http://www.nidur.info/en/index.php?option=com_content&view=article&id=153:why-i-shed-bikini-for-niqab-former-actress-sara-bokker-&catid=20:stories-of-new-muslims&Itemid=24

அல்லாஹ்வின் திருமறையும் அண்ணலாரின் வழிமுறையும்


பிரிட்டனைச் சேர்ந்த பத்திரிகை நிருபர் யுவான் ரிட்லியைக் கவர்ந்த இஸ்லாம்


[''நான் தாலிபான்களால் சிறை பிடிக்கப்படும் வரை புர்கா அணிந்த பெண்களை மிகவும் ஒடுக்கப்பட்ட படைப்பினமாகவே கருதி வந்தேன். செப்டம்பர் 2001-ல் அமெரிக்காவில் பயங்கரவாத தாக்குதல் நடைபெற்று சற்றே 15 நாட்களுக்குப் பிறகு ஒரு நீல நிற புர்காவில் என்னை மறைத்துக்கொண்டு ஆப்கானிஸ்தான் எல்லையைக் கடந்து உள்ளே புகுந்தேன்.
தாலிபான்களின் கொடுமையான ஆட்சியில் சராசரி மனித வாழ்க்கையைப் பற்றி நான் பணியாற்றிய பத்திரிகைக்கு செய்திகள் திரட்டும் நான் கண்டுபிடிக்கப்பட்டு, கைது செய்யப்பட்டபோது என்னைக் கைது செய்தவர்கள் முகத்தில் துப்பினேன், ஆக்ரோஷமாக எதிர்த்தேன்.... எனது சொந்த ஊரான லண்டன் திரும்பிய பிறகு நான் தாலிபான்களுக்கு அளித்த வாக்குறுதியைக் காப்பாற்றுவதற்காக இஸ்லாத்தைப் பற்றி அறியத் துவங்கினேன்.
நான் படிக்கப்படிக்க இனம்புரியாத ஆச்சரியம் என்னை ஆட்கொள்ளத் துவங்கியது. பெண்ணின விடுதலையை ஒங்கி ஒலிக்கும் திருக்குர்ஆனின் நல்லுபதேசங்களைக் கண்டு திகைத்துப் போனேன்.
மேற்கத்திய பெண் விடுதலைப் போராளிகள் 1970-களில் போராடிப் பெற்ற அனைத்துப் பெண்ணிய உரிமைகளும் 1400 வருடங்களுக்கு முன்னரே முஸ்லிம் பெண்மணிகளுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இஸ்லாமியப் பெண்கள் ஆன்மிகத்திலும், கல்வியிலும், சொத்துரிமையிலும் ஆண்களுக்கு நிகரான உரிமைப் பெற்றுத் திகழ்கின்றனர். ]
அமெரிக்க, ஐரோப்பிய, இஸ்ரேலிய ஏகாதிபத்திய சக்திகள் எவ்வளவுதான் இஸ்லாத்திற்கு எதிராக அவதூறான பிரச்சாரங்களை மேற்க்கொண்டாலும் இஸ்லாத்தின் அன்பு மற்றும் சமாதானத்தின் நற்செய்தி மக்களால் அடையாளம் காணப்படும் ஒரு நாள் வந்தே தீரும் என பிரபல பத்திரிகையாளரும், சர்வதேச மனித உரிமைப் போராளியுமான யுவானி ரிட்லி கூறினார்.
கேரள மாநிலம் குற்றிப்புரம் ஸஃபா நகரில் ஜமாஅத்தே இஸ்லாமியின் பெண்கள் மாநாட்டை துவக்கி வைக்கவிருந்தார் அவர். ஆனால் லண்டனில் இந்திய தூதரகம் அவருக்கு இந்தியா செல்ல விசா மறுத்ததால் வீடியோ கான்ஃப்ரன்சிங் மூலமாக மாநாட்டை துவக்கி வைத்து உரையாற்றினார். "அமெரிக்க ஏகாதிபத்தியம் இஸ்லாத்திற்கெதிராக அவதூறான பிரச்சாரங்களை நடத்திக் கொண்டிருக்கிறது. அவர்களை ஆக்கிரமிப்புகளையும் அருவருக்கத்தக்க நடவடிக்கைகளையும் மறைப்பதற்காகத்தான் இந்தப்பிரச்சாரத்தை மேற்க்கொள்கிறார்கள்.ஃபலஸ்தீனில் துயரத்தில் ஆழ்ந்துள்ள மக்களுக்கு ஆதரவாக பேசுகிறேன் என்பதற்காகவே என்னை ஏகாதிபத்திய சக்திகள் நோட்டமிடுகின்றன. ஃபலஸ்தீனிலும், ஆஃப்கானிலும், ஈராக்கிலும் கொடூரமான தாக்குதல்கள் மூலமும், கூட்டுக்கொலைகள் மூலமும் குண்டுகளை வீசுவதன் மூலமும் முஸ்லிம்களின் மீது நிரந்தரமாக ஏகாதிபத்திய சக்திகள் போரிட்டு வருகின்றன.
இஸ்லாம் பெண்களுக்கெதிரான மார்க்கம் என்ற மேற்கத்திய வாதிகளின் பொய் பிரச்சாரம் வெற்றிப்பெறாது. ஆஃப்கானிஸ்தானில் தாலிபான்களின் வசம் சிக்கிய என்னை இஸ்லாத்தை நோக்கி திருப்பியது அவர்களுடைய கண்ணியமான நடவடிக்கைகளும் சுத்தமான நிலைபாடுகளும் தான். இஸ்லாம் பெண்களுக்கெதிரான மார்க்கம் என்றால் தாலிபான் போராளிகள் என்னிடம் ஒருபோது கண்ணியமாக நடந்துக் கொண்டிருக்க மாட்டார்கள். மேலும் எனது வாழ்வில் அது திருப்புமுனையும் ஆகியிருக்காது.
ஏகாதிபத்தியமும், சியோனிஷமுதான் இன்று உலகம் சந்திக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தல்கள். இவ்விரண்டு சக்திகளும் இஸ்லாத்திற்கு மட்டுமல்ல விரோதிகள் மனிதர்கள் அனைவருக்குமே விரோதிகள் தான். முஸ்லிம் பெண்கள் காலக்கட்டத்தின் சவால்களை புரிந்துக்கொண்டு களமிறங்கவேண்டும்." இவ்வாறு ரிட்லி உரையாற்றினார்
தி வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கையில் பிரிட்டனைச் சேர்ந்த சகோதரி யுவான் ரிட்லி எழுதிய கட்டுரை இது. இனி அவரது சொந்த நடையில்....''நான் தாலிபான்களால் சிறை பிடிக்கப்படும் வரை புர்கா அணிந்த பெண்களை மிகவும் ஒடுக்கப்பட்ட படைப்பினமாகவே கருதி வந்தேன்.
செப்டம்பர் 2001-ல் அமெரிக்காவில் பயங்கரவாத தாக்குதல் நடைபெற்று சற்றே 15 நாட்களுக்குப் பிறகு ஒரு நீல நிற புர்காவில் என்னை மறைத்துக்கொண்டு ஆப்கானிஸ்தான் எல்லையைக் கடந்து உள்ளே புகுந்தேன்.
தாலிபான்களின் கொடுமையான ஆட்சியில் சராசரி மனித வாழ்க்கையைப் பற்றி நான் பணியாற்றிய பத்திரிகைக்கு செய்திகள் திரட்டுவது என் ரகசிய திட்டம். ஆனால் நான் கண்டுபிடிக்கப்பட்டு, கைது செய்யப்பட்டு, பத்து நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டேன்.
என்னைக் கைது செய்தவர்கள் முகத்தில் துப்பினேன், ஆக்ரோஷமாக எதிர்த்தேன். அதனால் அவர்கள் என்னை ஒரு ''கெட்ட பெண்'' என்று அழைத்தார்கள். ஆனால் நான் குர்ஆனைப் படிப்பதாகவும், இஸ்லாத்தைப் பற்றி தெரிந்து கொள்ளப் போவதாகவும் வாக்களித்த பிறகு என்னை விடுதலை செய்து விட்டார்கள். (உண்மையைச் சொல்லப் போனால் நான் விடுதலையான போது யார் மகிழ்ந்தார்கள் என்று எனக்கு சொல்லத் தெரியவில்லை'' நானா? அல்லது அவர்களா?)
எனது சொந்த ஊரான லண்டன் திரும்பிய பிறகு நான் தாலிபான்களுக்கு அளித்த வாக்குறுதியைக் காப்பாற்றுவதற்காக இஸ்லாத்தைப் பற்றி அறியத் துவங்கினேன்.
நான் படிக்கப்படிக்க இனம்புரியாத ஆச்சரியம் என்னை ஆட்கொள்ளத் துவங்கியது. குர்ஆனில் நான் மனைவிமார்களை எப்படி அடிப்பது என்றும், மகள்களை எப்படி அடக்கி ஒடுக்கி துன்புறுத்துவது என்றும் ஆண்களுக்கு உபதேசிக்கும் வசனங்கள் இருக்கும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் பெண்ணின விடுதலையை ஒங்கி ஒலிக்கும் திருக்குர்ஆனின் நல்லுபதேசங்களைக் கண்டு திகைத்துப் போனேன்.
எனது கைதுக்குப் பிறகு இரண்டரை வருடங்கள் கழித்து நான் இஸ்லாமை எனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டேன். எனது இந்த மாற்றம் எனது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் திகைப்பு, ஏமாற்றம், உற்சாகம் போன்ற உணர்வுகளின் கலவையான நிலைமையை உண்டு பண்ணியது.
இன்று! மத நல்லிணக்கத்திற்கு இடையூறாக இருக்கிறது என்று முஸ்லிம் பெண்களின் முகத்திரையைப் பற்றி பிரிட்டனின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜாக் ஸ்டிரா விமர்சனம் செய்திருப்பது என்னை ஏமாற்றமும், அச்சமும் கொள்ள வைக்கிறது. இவருக்கு பிரிட்டனின் பிரதமர் டோனி பிளேர், எழுத்தாளர் சல்மான் ருஷ்டி மற்றும் இத்தாலியப் பிரதமர் ரெமானோ ப்ரோடி ஆகியோர் வேறு ஆதரவளிக்கின்றனர் என்பதுதான் வேடிக்கையான வேதனை.புர்காவுக்கு வெளியேயும், உள்ளேயும் இரண்டு மாறுபட்ட வாழ்க்கை முறையை உணர்ந்த ஒரு பெண் என்ற அடிப்படையில் சொல்கிறேன்: இஸ்லாமிய உலகில் வாழ்கின்ற முஸ்லிம் பெண்களின் அடக்குமுறையைப் பற்றி ஆரவாரமாக கவலைப்படுகிற கிட்டத்தட்ட அனைத்து மேற்கத்திய அரசியல்வாதிகளும் சரி, பத்திரிக்கையாளர்களும் சரி இஸ்லாத்தைப் பற்றியும், அது பெண்களுக்கு வழங்கியுள்ள உரிமைகள் பற்றியும் ஒன்றுமே தெரியாதவர்களாகத்தான் இருக்கின்றார்கள்.
ஹிஜாபைப் பற்றியும், பருவமடையாத மணப்பெண்கள் பற்றியும், பெண்கள் கத்னாவைப் பற்றியும், கௌரவக் கொலைகளைப் பற்றியும், கட்டாயத் திருமணங்கள் பற்றியும் இவர்கள் சகட்டுமேனிக்கு எழுதியும் பேசியும் வருகிறார்கள். இந்த வன்கொடுமைகள் அத்தனைக்கும் இவர்கள் இஸ்லாத்தைக் குற்றவாளி ஆக்குகின்றார்கள். இவர்களது இந்த வெறித்தனமானப் போக்கு இவர்களது அறியாமையைத்தான் பறைசாற்றுகின்றது.
மேற்கண்ட வெறுக்கத்தக்க விஷயங்கள் கலாச்சாரம் மற்றும் சமூக சடங்கு சம்பிரதாயங்களுக்கு உட்பட்டவை. இவற்றுக்கும் இஸ்லாத்திற்கும் எள்ளளவும் சம்பந்தம் இல்லை. திருக்குர்ஆனை கருத்தூன்றிப் படித்தால் ஒர் உண்மை விளங்கும்.
மேற்கத்திய பெண் விடுதலைப் போராளிகள் 1970-களில் போராடிப் பெற்ற அனைத்துப் பெண்ணிய உரிமைகளும் 1400 வருடங்களுக்கு முன்னரே முஸ்லிம் பெண்மணிகளுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
இஸ்லாமியப் பெண்கள் ஆன்மிகத்திலும், கல்வியிலும், சொத்துரிமையிலும் ஆண்களுக்கு நிகரான உரிமைப் பெற்றுத் திகழ்கின்றனர். ஒரு குழந்தையைப் பெற்றெடுத்து அதனை சரிவர வளர்க்கும் பெண்மணி பெரும் பாக்கியம் நிறைந்தவளாகக் கருதப் படுகின்றாள்.
இவ்வாறு இஸ்லாம் பெண்ணினத்திற்குத் தேவையான எல்லாவற்றையும் வழங்கி மேன்மைப்படுத்தி இருக்கும்போது, இந்த மேற்கத்திய ஆண்கள் ஏன் முஸ்லிம் பெண்களின் ஆடை விஷயத்தில் மட்டும் முதலைக்கண்ணீர் வடிக்கின்றனர்?
பிரிட்டிஷ் அரசின் அமைச்சர்களான கோர்டன் பிரவுன் மற்றும் ஜான் ரீட் ஆகியோர் முஸ்லிம் பெண்களின் முகத்திரையைப் பற்றி தரக்குறைவாக விமர்சித்துள்ளனர்.
இதில் வேடிக்கை என்னவென்றால், இவர்கள் இருவருமே ஆண்கள் கூட பாவாடை அணியும் ஸ்காட்லாந்து நாட்டு எல்லையோரத்தைச் சேர்ந்தவர்கள்.
நான் இஸ்லாத்திற்கு மாறி முக்காடு அணியத் துவங்கியபோது மிகப்பெரிய அளவில் விளைவுகளை எதிர்கொள்ள நேரிட்டது. நான் செய்ததெல்லாம் எனது தலையையும், தலைமுடியையும் மூடிக் கொண்டேன், அவ்வளவுதான். ஆனால் உடனே நான் இரண்டாந்தர குடிமகளாக்கப்பட்டேன்.
ஏதோ கொஞ்சம் இஸ்லாமிய எதிர்ப்புணர்வுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்று நினைத்திருந்தேன். ஆனால் அனைத்துத் தரப்பு மக்களிடமிருந்தும் இந்தளவிற்கு இனவெறியை நான் எதிர்பார்க்கவில்லை. ''வாடகைக்கு'' என்ற வாசகத்தடன் என்னைக் கடந்து சென்று நின்ற டாக்ஸியிலிருந்து ஒரு வெள்ளைக்காரப் பெண் இறங்கினாள்.
நான் அந்த டாக்ஸியில் ஏறுவதற்காக எத்தனித்தேன். ஆனால் என்னைக் கூர்ந்து கவனித்த டிரைவர் என்னை நிராகரித்து விட்டு விருட்டென்று காரை ஒட்டிச் சென்று விட்டான்.
மற்றொரு டாக்ஸி டிரைவரோ என்னிடம் ''பின் ஸீட்டில் வெடிகுண்டு எதையும் வைத்து விட்டுப் போய்விடாதே'' என்றும் ''பின்லேடன் எங்கே ஒளிந்து இருக்கிறான் தெரியுமா?'' என்றும் கமெண்ட் அடித்தான்.
ஆம்! பெண்கள் கண்ணியமாக உடை உடுத்த வேண்டும் என்பது ஒர் இஸ்லாமியக் கடமை. நான் அறிந்தவரை பெரும்பான்மையான முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் - அதாவது முகம் மட்டும் வெளியில் தெரியும் வண்ணம் உடை அணிகின்றனர். வெகு சிலரே முகத்தையும் மறைக்கும் நிகாப் எனும் முகத்திரை அணிந்து வெளியில் வருகின்றனர். என்னைப் பொறுத்தவரை, ஒரு முஸ்லிம் பெண் கண்ணியத்திற்காக ஹிஜாப் அணிகிறாள், அவளுக்கு அந்த கண்ணியத்தைக் கொடுத்து விட்டுப் போங்களேன்! வால் ஸ்டிரீட்டில் இயங்குகின்ற ஒரு வங்கியின் அதிகாரி தன்னை ஒரு சீரியஸான பிஸினஸ்மேனாக பிறர் கருத வேண்டும் என்பதற்காகத்தானே கோட் சூட் அணிகிறார்! - அதுபோலத்தான் இதுவும்.
நான் ஒரு நேரத்தில் மேற்கத்திய பெண்ணிய வாதியாகத்தான் இருந்தேன். ஆனால் பிறகுதான் உணர்ந்தேன்.. முஸ்லிம் பெண்ணியவாதிகள் பிறரைவிட மிகத் தீவிரமாக பெண் விடுதலைக்காக போராடக் கூடியவர்கள் என்று! அநாகரீகமான அழகிப் போட்டிகளை நாம் வெறுக்கின்றோம். ஆனால் நமக்கு எரிச்சலூட்டும் விதமாக 2003-ல் நடந்த பிரபஞ்ச அழகிப் போட்டியில் ஆப்கானிஸ்தானிய பெண் ஒருத்தி நீச்சல் உடையில் பங்கேற்ற நிகழ்ச்சியை அந்தப் போட்டியின் நடுவர்கள் இஸ்லாமியப் பெண்களின் விடுதலைக்கான ஆரம்பம் இது என்று வர்ணித்தனர்.
ஹிஜாப் அணிவது சமூக உறவைப் பேணுவதற்கு மிகவும் தடையாக இருக்கிறது என்று இத்தாலியப் பிரதமர் ப்ரோடி கூறியிருக்கிறார். இந்த முட்டாள்தனமான வாதத்தைக் கேட்கும்போது எனக்கு அழுவதா அல்லது சிரிப்பதா? என்று தெரியவில்லை.
இவர் சொல்வது சரியென்றால் இன்றைய விஞ்ஞான யுகத்தில் நாம் அன்றாடம் உபயோகிக்கும் செல்போன், சாதா போன், பேக்ஸ், எஸ்.எம். எஸ். தகவல்கள் மற்றும் ரேடியோ ஆகியவை அர்த்தமற்றவையாகி விடும். இந்த உபகரணங்களை தொடர்பில் இருப்பவர்களின் முகத்தைப் பார்த்துக் கொண்டா நாம் உபயோகிக்கிறோம்?
இஸ்லாத்தின் கீழ் நான் மதிக்கப்படுகின்றேன். எனக்குத் திருமணம் ஆகியிருந்தாலும், ஆகாவிட்டாலும் எனக்கு கல்வி கற்க உரிமை உண்டு என்றும், கல்வியைத் தேடிப்பெற வேண்டியது எனது கடமை என்றும் இஸ்லாம் எனக்கு சொல்லித் தருகின்றது.. இஸ்லாத்தின் இந்த கட்டமைப்பிலும் பெண்களாகிய நாங்கள் ஆண்களுக்கு சமைப்பது, துவைப்பது, சுத்தம் செய்வது போன்ற சேவகங்கள் செய்துதர வேண்டும் என்று கட்டளையிடப்படவே இல்லை.
இன்னும் சொல்லப் போனால், பெண்களுக்கெதிரான வன்கொடுமைகள் ஒரு குறிப்பிட்ட மதத்தையோ, இனத்தையோ அல்லது தேசத்தையோ சார்ந்தது அல்ல. இது மதம், மொழி, இனம், கலாச்சாரம் ஆகிய அனைத்தையும் கடந்து பெண்ணினத்தை பாதித்து வரும் ஒர் உலகளாவிய பிரச்சினையாகும்.
உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால்ஸ. National Domestic Violence Survey நடத்திய ஆய்வில் அமெரிக்காவில் 12 மாத கால அளவில் 4 மில்லியன் பெண்கள் ஆண்களது கொடுமைக்குள்ளாகி வருகின்றனர். மேலும் ஒரு நாளில் மட்டும் 3 பெண்கள் தங்களது காதலன் அல்லது கணவனால் கொல்லப்பட்டு வருகின்றனர்.
ஆண்கள் தங்கள் மனைவிமார்களை கைநீட்டி அடிக்க அனுமதிக்கிறது இஸ்லாம் என்ற கூற்றை எடுத்துக் கொண்டால் - இது முற்றிலும் தவறாகப் புரிந்து கொள்ளப் பட்டுள்ளது. இஸ்லாத்தை விமர்சிப்பவர்கள் அடிக்கடி குர்ஆன் வசனங்களையும், நபிமொழி குறிப்புகளையும் மேற்கோள் காட்டுகின்றனர்.
ஆனால் அந்த வசனங்கள் மற்றும் நபிமொழிகளின் உள்ளர்த்தங்களை தவறாக விளங்கிக் கொள்வதால் எற்படும் விளைவுதான் இது. ஒர் ஆண் தனது மனைவியை அடிக்கத்தான் வேண்டுமாயின், அவளது உடலில் எவ்விதக் காயமோ அடையாளமோ இல்லாமல்தான் அடிக்க வேண்டும் என்று குர்ஆன் சொல்கிறது. இது குர்ஆனுக்கே உரிய தனித்துவமிக்க சொல்லாளுமையாகும். இதன் உள்ளர்த்தத்தை நெருக்கமாகச் சொல்லப் போனால்... முட்டாளே! உனது மனைவியை அடிக்காதே!! என்பதுதான்.
இதற்கு மேலும் இஸ்லாம் பெண்களை அடிமைப்படுத்தி வைக்கிறது என்று வாதிடுவோர்களின் கவனத்திற்கு ஒன்றைச் சொல்கிறேன்:
அமெரிக்காவின் ஆன்மீகக் குரு ரெவரண்ட் பேட் ராபெர்ட்ஸன் 1992-ல் கூறிய கருத்து இதோ: ''பெண் விடுதலை என்பது சமூக சீர்கேட்டை உருவாக்கி, குடும்ப பாரம்பரியத்தை சீர்குலைத்து, கணவர்களை விட்டு ஒடுகின்ற, தங்கள் குழந்தைகளைக் கொல்கின்ற, ஒரினச் சேர்க்கையில் பெண்களை ஈடுபடுத்துகின்ற ஓர் இயக்கமாகும்''. இப்போது சொல்லுங்கள்! யார் நாகரீகமானவர்கள்? யார் நாகரீகமற்றவர்கள்? என்று.